பெத்லகேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி clean up, replaced: கிறிஸ்த்து → கிறிஸ்து (5)
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 26:
}}
 
'''பெத்லகேம்''' (''Bethlehem'') என்னும் நகரம் [[இயேசு|இயேசு கிறித்துகிறிஸ்து]] பிறந்த இடமாகும். இது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் <ref>[http://en.wikipedia.org/wiki/Bethlehem பெத்லகேம் நகர்]</ref>. அண்மைக் காலத்தில் புலம்பெயர்தலின் விளைவாகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெத்லகேமில் மிகவும் குறைந்துவிட்டது.
 
'''பெத்லகேம்''' நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அரபியில் அதன் பொருள் ''புலால் வீடு'' (House of Meat) என்றும் எபிரேயத்தில் ''அப்ப வீடு'' (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது. இது பெத்லகேம் ஆட்சிமண்டலத்தின் தலைநகர். [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது.
வரிசை 32:
== பெத்லகேம் வரலாறு ==
 
[[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் பகுதியாகிய [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] பெத்லகேம் ''தாவீதின் நகர்'' என்று அழைக்கப்படுகிறது. [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாடோ]] பெத்லகேம் நகரில் [[இயேசு|இயேசு கிறித்துகிறிஸ்து]] பிறந்தார் என்னும் செய்தியைத் தருகிறது (காண்க: [[மத்தேயு|மத்தேயு நற்செய்தி]], மற்றும் [[லூக்கா நற்செய்தி]]). கிறித்தவ சமூகங்களில் மிகப் பழமையான ஒரு குழுவினர் இந்நகரில் 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர்.
 
கி.பி. 529இல் சமாரியர்கள் பெத்லகேமைச் சூறையாடினார்கள். அதை பிசான்சிய மன்னர் முதலாம் ஜஸ்டின் மீண்டும் கட்டியெழுப்பினார். கி.பி. 637இல் [[உமர்|கலிபா உமர் இபன் அல்-கத்தாப்]] என்பவர் அதைக் கைப்பற்றினார். நகரிலிருந்த திருத்தலங்களுக்குச் செல்லும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது. [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர் வீரர்கள்]] பெத்லகேமை 1099இல் பிடித்து கோட்டைச் சுவர்கள் எழுப்பினார்கள். மேலும், கிரேக்க வழிபாட்டு முறையை மாற்றி இலத்தீன் வழிபாட்டு முறை புகுத்தப்பட்டது. ஆனால் [[எகிப்து]]க்கும் [[சிரியா]]வுக்கும் அரசராக இருந்த [[சலாகுத்தீன்|சலாதீன்]] என்பவர் பெத்லகேமைக் கைப்பற்றி இலத்தீன் முறைக் குருக்களை வெளியேற்றினார். [[மம்லுக் வம்சம்|மம்லுக் குலத்தவர்]] 1250இல் பெத்லகேமின் சுவர்களைத் தகர்த்தெறிந்தனர். அவை [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமான் மன்னர்கள்]] காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.
வரிசை 40:
பெத்லகேமில் வாழ்கின்ற மக்களுள் பெரும்பான்மையோர் [[இசுலாம்]] சமயத்தவர். [[கிறித்தவம்|கிறித்தவர்களும்]] கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
[[படிமம்:Bethlehem-Manger-Square.jpg|thumb|right|உமர் மசூதி (1886). பெத்லகேம்.]]
[[படிமம்:Bethlehem455.Bethlehem.jpg|thumb|left|பெத்லகேமில் வாழ்ந்த கிறித்தவப் பெண்கள். ஆண்டு: 1911.]]
இங்கு சுற்றுலாப் பயணியரும் திருப்பயணியரும் பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். குறிப்பாக, [[இயேசு|கிறிஸ்து பிறப்பு விழாவின் போது]] கிறித்தவர் [[இயேசு]] பிறந்த இடத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள [[இயேசு பிறந்த இடக் கோவில்|இயேசு பிறப்புக் கோவிலை]] சந்திக்கவும் அங்கு இறைவேண்டல் செய்யவும் பெருந்திரளாகக் கூடுவர். பெத்லகேமின் வடக்கு நுழைவாயிலில் யூத இன மூதாட்டியும் யாக்கோபின் மனைவியுமான [[ராகேல்]] என்பவரின் கல்லறை உள்ளது. இது [[யூதர்]]களுக்குப் புனிதமான இடம் ஆகும்.
 
வரிசை 47:
பெத்லகேமில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட "இயேசு பிறந்த இடக் கோவில்" (''Church of the Nativity'') இக்கோவில் ஓர் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று [[யுனெசுக்கோ]]வால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது [[இயேசு]] பிறந்த இடக் கோவில் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று அறிவித்தது.<ref name="இயேசு பிறந்த இடக் கோவில்">[http://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity இயேசு பிறந்த இடக் கோவில்]</ref>
 
== விவிலியத்தில் பெத்லகேம் ==
 
[[படிமம்:Jesus birthplace in Bethlehem.jpg|thumb|right|பெத்லகேம் நகர். இயேசு கிறித்துகிறிஸ்து பிறந்த இடம் பளிங்குத் தரையில் வெள்ளியாலான ஒரு விண்மீன் வடிவில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.]]
பெத்லகேம் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு. 1400இல் காணக்கிடைக்கிறது. [[அமர்னா நிருபங்கள்|அமர்னா களிமண் சுவடிகள்]] என்று அழைக்கப்படும் ஏடுகளில் "அபிரு" மக்கள் தொந்தரவு கொடுத்ததால் "பித்-லாஹ்மி" ("Bit-Lahmi") என்னும் இடத்தைக் கைப்பற்றுவதற்கு [[எருசலேம்]] மன்னர் தம் மேல்நராக இருந்த [[எகிப்து]] மன்னரின் உதவியை நாடும் குறிப்பு உள்ளது. இங்கே "பித்-லாஹ்மி" என்பது பெத்லகேமைக் குறிப்பதாகும்.
 
வரிசை 60:
எப்ராயிம் குலத்தவருக்கும் எப்ராத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவேளை எப்ராயிம் குலத்தவரே பெத்லகேமை நிறுவியிருக்கலாம்.
 
கிறித்தவர்கள் [[இயேசு கிறித்துகிறிஸ்து]] பெத்லகேமில் பிறந்தார் என்று ஏற்பர். அவர்கள் [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசுவின் பிறப்பு]] பெத்லகேமில் நிகழுமென்று [[இறைவாக்கினர்]] முன்னறிவித்தனர் என்று நம்புகின்றனர். [[மீக்கா (நூல்)|மீக்கா இறைவாக்கினரின்]] நூலில்
{{cquote|நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும் (மீக்கா 5:2)}}
என்று வருகின்ற பகுதி [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசுவின் பிறப்பு]] பெத்லகேமில் நிகழ்ந்ததின் முன்னறிவிப்பு என்பது கிறித்தவர் கருத்து.
வரிசை 69:
 
==இயேசு பிறந்த ஊர் ==
[[படிமம்:Bethlehem Christmas2.JPG|thumb|left|கிறித்துகிறிஸ்து பிறப்பு விழாவின்போது பெத்லகேமில் நிகழ்ந்த திருப்பவனி. ஆண்டு 2006.]]
 
இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று [[மத்தேயு]] மற்றும் [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] ஆகிய இரு நற்செய்தியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திப்படி இயேசுவின் பெற்றோராகிய [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவும்]] [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்துவந்தனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது (இன்றைய கணிப்புப்படி, கி.பி. 6ஆம் ஆண்டு) தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] தம் மனைவி [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவோடு]] பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அங்கேதான் மரியா ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து அவருக்கு [[இயேசு]] என்று பெயரிட்டார்.
வரிசை 75:
[[மத்தேயு]] நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" ([[மத்தேயு|மத்தேயு 2:1]]). தன்னுடைய ஆட்சிக்கு உலைவைக்க ஒருவர் பிறந்துவிட்டாரோ என்று அஞ்சிய ஏரோது குழந்தை [[இயேசு]]வைக் கொல்ல முயற்சி செய்தான். "ஏரோது பெத்லகேமிலுமமதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்ககு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளையும் கொன்றான்" ([[மத்தேயு|மத்தேயு 2:16]]). குழந்தையின் உயிருக்கு இடர்ப்பாடு ஏற்படலாம் என்றும் அதனால் யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பியோட வேண்டும் என்றும் கனவில் எச்சரிக்கப்பட்டார். பின்னர் திருக்குடும்பம் நாசரேத்தில் குடியேறியது (காண்க:([[மத்தேயு|மத்தேயு 2:19-23]]). [[இயேசு]] உண்மையிலேயே பெத்லகேமில்தான் பிறந்தாரா என்பதை நிறுவ போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான விவிலிய அறிஞர்கள் பெத்லகேமே [[இயேசு]]வின் பிறப்பிடம் என்று நிறுவியுள்ளனர். இதற்கான சான்றுகள் [[மத்தேயு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகள் தவிர, வேறு பல பழங்காலக் கிறித்தவ எழுத்தாளர்களின் கூற்றுக்களிலிருந்தும் தெரிகின்றன.
=== இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்படல் ===
பெத்லகேமில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட "இயேசு பிறந்த இடக் கோவில்" (''Church of the Nativity'') இக்கோவில் ஓர் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று [[யுனெசுக்கோ]]வால் அறிவிக்கப்பட்டுள்ளது. யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது [[இயேசு]] பிறந்த இடக் கோவில் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று அறிவித்தது.<ref>[http://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity name="இயேசு பிறந்த இடக் கோவில்]<"/ref>
 
== தமிழ் இலக்கியத்தில் பெத்லகேம் ==
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது