அக்டோபர் 15
நாள்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 15, கிரிகோரியன் ஆண்டின் 288வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 289வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
- 1655 - போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1815 - பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
- 1878 - தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
- 1915 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.
- 1917 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
- 1932 - டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: முன்னாள் பிரெஞ்சு முதல்வர் பியேர் லாவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1951 - மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
- 1966 - ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1970 - மெல்பேர்ண் நகரில் வெஸ்ட் கேட் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1970 - அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.
- 1987 - பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தில் பெரும் புயல் கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 - பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார்.
- 1997 - நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 2001 - நாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.
- 2003 - மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
பிறப்புக்கள்
- 1542 - பேரரசர் அக்பர், முகலாயப் பேரரசன் (இ. 1605)
- 1844 - பிரீட்ரிக் நீட்சே, ஜெர்மனிய மெய்யியலாளர் (இ. 1900)
- 1926 - மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (இ. 1984)
- 1931 - அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்
- 1931 - வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)
இறப்புகள்
- 1918 - சிர்டி சாயி பாபா
- 2009 - தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (பி. 1923)
- 2009 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)