[[File:Descartes mind and body.gif|thumb|200px|right|René Descartes' illustration of mind/body dualism.

A phrenological mapping[1] of the brain. Phrenology was among the first attempts to correlate mental functions with specific parts of the brain.

மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்துகொள்ளலின் அடிப்படையில் ஆனவை. இவை மனம் என்பதை உளவியலின் ஒரு தோற்றப்பாடாக நோக்குகின்றன. அத்துடன் இச்சொல் ஏறத்தாழ உணர்வுநிலை [2] (consciousness) என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எந்தெந்த மனித இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிலர், தர்க்க அறிவு, ஞாபகம் போன்ற உயர்நிலை அறிவுச் செயற்பாடுகள் மட்டுமே மனத்தை உருவாக்குகின்றன என்கின்றனர். இதன்படி, காதல், வெறுப்பு, பயம், களிப்பு போன்ற உணர்வுகள் இயல்பிலும், உருவாக்கத்திலும் மனத்திலிருந்து வேறுபட்டவையாகும். வேறு சிலர், பகுத்தறிவு, உணர்வு என்பன சார்ந்த மனித இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட முடியாதவை என்றும், அவை இரண்டுமே இயல்பிலும், உருவாக்கத்திலும் ஒரே விதமானவை என்றும் ஆதலால், இவையனைத்தும் மனத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

மனதைப்பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும்பொழுது, அது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும், அப்படி ஆராய்ந்தால் தான் அது வளப்படும் என்றும் கூறுகிறார். எனவே இதை மனவளக்கலை என்று அவரது போதனையாக அறிமுகப்படுதியிருக்கிறார்.

வேதாந்த சாத்திரத்தில் மனம்

இந்து சமய வேதாந்த சாத்திரங்கள், குறிப்பாக சாங்கிய மெய்யியல் தத்துவங்கள், [3] மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவைகள்;

  • மனம்: சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை இது.
  • சித்தம்: பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலயமாக திகழம் மனதை சித்தம் எனப்படுகிறது.
  • புத்தி: தொலைவில் வருபவன் இராமனா அல்லது கிருட்டிணனா என்று குழம்பிய மனம், சேமிப்பு நிலயமான சித்தத்தில் தொலைவில் வருபவனை இராமன் என்றோ அல்லது கிருட்டிணன் என்றோ ஒப்பிட்டு நோக்குகிறது; சித்தத்தில் ஏற்கனவே இராமனை அல்லது கிருட்டிணனைப் பற்றிய பதிவுகள் இருக்குமானால் அவன் இராமன் அல்லது கிருட்டிணன் என்ற முடிவிற்கு வருகிறது. ஒரு வேளை அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் சித்தத்தில் இல்லாவிட்டால், `அவன் யார் என்று தெரியவில்லை` என்று முடிவு செய்கிறது மனம். இவ்வாறு முடிவு செய்கின்ற மனமே புத்தி ஆகும்.
  • அகங்காரம்: மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, நான் இராமனை அறிகிறேன், நான் கிருட்டிணனை அறியவில்லை, என்று உறுதி செய்கின்ற நான் எனும் உணர்வாகத் (Ego) திகழம்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.


மன உள்ளடக்கம்

மன உள்ளடக்கங்கள் மனதில் "உள்ள", மற்றும் மன செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் கையாளப்படும் திறன் என்று கருதப்படுகிறது .எடுத்துக்காட்டுகள் எண்ணங்கள், கருத்துக்கள், நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவை அடங்கும். மனோபாவத்தின் தத்துவார்த்த கோட்பாடுகள் உட்புறவாதம், வெளிப்புறம், பிரதிநிதித்துவம் மற்றும் எண்ணம் ஆகியவை ஆகும்.

சிந்தனையொற்றுமை

சிந்தனையொற்றுமை என்பது 1980 ஆம் ஆண்டுகளில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் மற்றும் டக்ளஸ் ஹொஃப்ஸ்டாட்டால் தோற்றுவிக்கப்பட்ட டார்வினிய பரிணாம வளர்ச்சியுடன் ஒப்பிடப்பட்ட மனநிலையின் ஒரு கோட்பாடாகும். இது கலாச்சார தகவல் பரிமாற்றத்தின் பரிணாம மாதிரி ஆகும். ஒரு மரபணுக்கு ஒத்த ஒரு நினைவுச்சின்னம், ஒரு யோசனை, நம்பிக்கை, நடத்தை வகை (முதலியன) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட மனங்களில் "தொகுத்து வழங்குதல்” மற்றும் மனதில் இருந்து மனதில் இருந்து தன்னை தன்னை புதுப்பித்து கொள்ள முடியும். இவ்வாறு ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மற்றொரு நபரைப் பாதிக்கும் ஒரு நபராக வேறு யாராவது கருதப்படுவார்களோ, அது தன்னை நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு நினைவு என நினைவூட்டுகிறது.[4]

மூளையுடனான உறவு

விலங்குகளில், மூளை அல்லது என்செபலான் ("தலையில்" என்பது கிரேக்க மொழி), மத்திய நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டு மையமாக இருக்கிறது, சிந்தனைக்குரியது. பெரும்பாலான விலங்குகளில், மூளை தலையில் அமைந்துள்ளது, மண்டை ஓட்டின் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் பார்வை, கேட்கும் திறன், சமநிலைப்படுத்தல், சுவை மற்றும் ஒலியமைப்பு ஆகியவற்றின் முதன்மை உணர்கருவி கருவிக்கு அருகில் உள்ளது. அனைத்து முதுகெலும்புகளும் மூளையைக் கொண்டிருக்கும்போது, பெரும்பாலான முதுகெலும்புகள் ஒரு மையப்படுத்தப்பட்ட மூளை அல்லது தனி குண்டலினியின் தொகுப்புகள் உள்ளன. கடற்பாசிகள் போன்ற பழங்கால விலங்குகள் மூளையில் இல்லை. மூளை மிகவும் சிக்கலானதாக இருக்கும். உதாரணமாக, மனித மூளையில் சுமார் 86 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் 10,000 க்கும் மேற்பட்டவை. [5][6]

மூளைக்கும் மனத்துக்கும் இடையில் உள்ள உறவு புரிந்துகொள்ளுதல் என்பது தத்துவத்தின் வரலாற்றில் மையப் பிரச்சினையாகும் - தத்துவார்த்த மற்றும் அறிவியல் ரீதியாக ஒரு சவாலான பிரச்சனை. [15] பதில் பற்றிய மூன்று முக்கிய தத்துவ பாடசாலைகள் உள்ளன: இரட்டைவாதம், சடவாதம், மற்றும் கருத்துவாதம். மூளைக்கு மனதில் சுதந்திரம் இருப்பதாக டுலுளிசம் கூறுகிறது; [16] மனோபாவம் என்பது மனநல நோக்குகள் நரம்பியல் நிகழ்வுகளுக்கு ஒரே மாதிரியானவை, [17] மற்றும் மனோபாவம் மட்டுமே மனநல நிகழ்வுகள் இருப்பதாக கருதுகிறது. [17] வரலாற்றில் பெரும்பகுதி மூலம் பல தத்துவஞானிகள் மூளையின் திசு போன்ற நுண்ணுயிரிகளால் (நியூரான்கள் மற்றும் உட்புறங்கள்) செயல்படுவது அறிவாற்றலைக் கண்டறியமுடியாததாகக் கண்டறிந்தது. மனம்-மூளை உறவுகளைப் பற்றி விரிவாக சிந்தித்த டிஸ்கார்ட்ஸ், நுட்பமான சிந்தனையை நம்பவில்லை, குறிப்பாக மொழி, தனியாக உடல் மூளையைக் குறிப்பிடுவதன் மூலம் விளக்கமளிக்க முடிந்தாலும், மனப்பாங்கான தன்மை மற்றும் பிற எளிய நடத்தைகளை இயந்திர வழிமுறைகளை விளக்க முடியும்.

[7]

பெயராக்கம்

பழைய ஆங்கிலத்தின் அசல் பொருள்gemynd was the faculty of memory, not of thought in general.[citation needed] Hence call to mindcome to mindkeep in mindto have mind of, etc. The word retains this sense in Scotland.


[citation needed] Old English had other words to express "mind", such as hyge "mind, spirit".[citation needed] The meaning of "memory" is shared with Old Norse, which has munr. The word is originally from a PIE verbal root *men-, meaning "to think, remember", whence also Latin mens "mind", Sanskrit manas "mind" and Greek μένος "mind, courage, anger". The generalization of mind to include all mental faculties, thought, volition, feeling and memory, gradually develops over the 14th and 15th centuries.

படத்தொகுப்பு

 
Simplified diagram of Spaun, a 2.5-million-neuron computational model of the brain. (A) The corresponding physical regions and connections of the human brain. (B) The mental architecture of Spaun.[8]

மேற்கோள்கள்

  1. Oliver Elbs, Neuro-Esthetics: Mapological foundations and applications (Map 2003), (Munich 2005)
  2. "mind - definition of mind in English | Oxford Dictionaries". Oxford Dictionaries | English. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  3. http://web.archive.org/web/20041023062627/http://www.philo.demon.co.uk/enumerat.htm
  4. "Narrow Mental Content". Stanford Encyclopedia of Philosophy. பார்க்கப்பட்ட நாள் 7 September 2015.
  5. Whishaw, Bryan Kolb, Ian Q. (2010). An Introduction to Brain and Behavior (3rd ed.). New York: Worth Publishers. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-7691-8. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. Sherwood, Lauralee (2011). Fundamentals of Human Physiology (4th ed.). Belmont, CA: Brooks/Cole Cengage Learning. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8400-6225-3. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.
  7. Masters, Frances. "Harness your Amazingly Creative Mind". www.thefusionmodel.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
  8. Eliasmith, Chris; Terrence C. Stewart; Xuan Choo; Trevor Bekolay; Travis DeWolf; Yichuan Tang; Daniel Rasmussen (30 November 2012). "A Large-Scale Model of the Functioning Brain". Science 338 (6111): 1202–1205. doi:10.1126/science.1225266. பப்மெட்:23197532. Bibcode: 2012Sci...338.1202E. http://www.sciencemag.org/content/338/6111/1202. பார்த்த நாள்: 13 May 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்&oldid=2367436" இலிருந்து மீள்விக்கப்பட்டது