அக்டோபர் 15
நாள்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 15 (October 15) கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1582 – கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
- 1655 – போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1815 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
- 1878 – தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
- 1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.
- 1917 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
- 1932 – டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: முன்னாள் பிரெஞ்சு முதல்வர் பியேர் லாவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1951 – மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
- 1957 - பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான திருகோணமலைத் துறைமுகத்தை பிரித்தானியா இலங்கையிடம் கையளித்தது.[1]
- 1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1970 – மெல்பேர்ண் நகரில் வெஸ்ட் கேட் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1970 – அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.
- 1987 – பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தில் பெரும் புயல் கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார்.
- 1997 – நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.
- 2003 – மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
பிறப்புகள்
- கிமு 70 – வேர்ஜில், உரோமைக் கவிஞர் (இ. கிமு 19)
- 1265 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1307)
- 1542 – அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605)
- 1829 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (இ. 1907)
- 1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. 1900)
- 1855 – சுப்பராயலு, சென்னை மாகாண முதலமைச்சர் (இ. 1921)
- 1863 – நெவின்ஸ் செல்வதுரை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (இ. 1938)
- 1881 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975)
- 1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர் இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. 1975)
- 1904 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (இ. 1949)
- 1909 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (இ. 2002)
- 1913 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. 1976)
- 1924 – ஏ. பீம்சிங், தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (இ. 1978)
- 1926 – மிஷேல் ஃபூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1984)
- 1926 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 2011)
- 1927 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (இ. 2015)
- 1931 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (இ. 2015)
- 1931 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)
- 1934 – என். ரமணி, இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015)
- 1936 – மதன் லால் குரானா, இந்திய அரசியல்வாதி
- 1939 – கே. டி. பிரான்சிஸ், இலங்கை துடுப்பாட்ட நடுவர் (இ. 2013)
- 1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து சமய ஞானி
- 1944 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2005)
- 1946 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. 2012)
- 1949 – பிரணாய் ராய், இந்திய ஊடகவியலாளர்
- 1957 – மீரா நாயர், இந்திய-அமெரிக்க நடிகை
- 1995 – நிவேதா தாமஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 925 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864)
- 1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)
- 1764 – மருதநாயகம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1725)
- 1917 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (பி. 1876)
- 1918 – சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)
- 1930 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1866)
- 1946 – எர்மன் கோரிங், செருமானிய அரசியல்வாதி (பி. 1893)
- 1961 – சூர்யகாந்த் திரிபாதி, இந்தியக் கவிஞர் (பி. 1896)
- 1987 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1949)
- 1988 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1909)
- 2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன், சைவத் திருமுறை ஓதுவார் (பி. 1923)
- 2009 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
- 2010 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (பி. 1927)
- 2012 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. 1922)
சிறப்பு நாட்கள்
- ஆசிரியர் நாள் (பிரேசில்)
- வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் (ஐக்கிய அமெரிக்கா)
- உலகக் கைகழுவும் நாள்
- உலக மாணவர் நாள்
மேற்கோள்கள்
- ↑ "திருகோணமலை இலங்கைக்கு கைமாறியது". ஸ்ரீ லங்கா 9 (12): பக். 3. நவம்பர் 1957.