ஐக்கிய ஜனதா தளம் இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்றா இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியுடன் பீகார் மாநில முதல்வராக இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக சரத் யாதவ் இருந்து வருகிறார்.

சின்னம்

ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பு சின்னம் இருந்து வருகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 9 924 209 வாக்குகளைப் (2.6%, 8 இடங்கள்) பெற்றது.

கட்சி அங்கீகாரம்

இந்த கட்சி பீகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட அம்பு சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அங்கு பயன்படுத்த அனுமதித்ததுள்ளது[1][2].

மேற்கோள்கள்