அங்குலம்
அங்குலம் (ⓘ; inch, குறியீடு: in அல்லது ″[1]) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.[1][2][3]
அங்குலம் | |
---|---|
அலகு முறைமை | அமெரிக்க/பிரித்தானிய அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு | in or ″ (the double prime)[1] |
அலகு மாற்றங்கள் | |
1 in இல் ... | ... சமன் ... |
பிரித்தானிய/அமெரிக்க அலகுகள் | 136 yd or 112 ft |
மெட்ரிக் (SI) அலகுகள் | 25.4 mm |
SI அலகுகள் | |
---|---|
25.4×10−3 மீ | 25.4 மிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
83.33×10−3 அடி | 1 அங் |
பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்
தொகுஇம்பீரியல் அலகுகள்
தொகு1 அடி | 12 அங்குலங்கள் |
1 யார் | 36 அங்குலங்கள் |
1 பாகம் | 72 அங்குலங்கள் |
1 சங்கிலி | 792 அங்குலங்கள் |
1 பெர்லாங் | 7920 அங்குலங்கள் |
1 மைல் | 63,360 அங்குலங்கள் |
மெட்ரிக் அலகுகள்
தொகு1 மில்லிமீட்டர் | 0.0394 அங்குலங்கள் |
1 சதம மீட்டர் | 0.3937 அங்குலங்கள் |
1 மீட்டர் | 39.37 அங்குலங்கள் |
1 கிலோமீட்டர் | 39,370 அங்குலங்கள் |
பழைய இந்திய அளவைமுறை
தொகு1 விரற்கடை | 3/4 அங்குலம் |
1 சாண் | 9 அங்குலங்கள் |
1 முழம் | 18 அங்குலங்கள் |