அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் சிதம்பரத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை"With Courage and Faith"
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1929; 95 ஆண்டுகளுக்கு முன்னர் (1929)
வேந்தர்ஆளுநர் தமிழ்நாடு
துணை வேந்தர்ஆர். எம். கதிரேசன்[1]
கல்வி பணியாளர்
2,281[2]
மாணவர்கள்32,480[2]
பட்ட மாணவர்கள்23,256[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,067[2]
998[2]
அமைவிடம், ,
11°23′27″N 79°42′53″E / 11.3908°N 79.7148°E / 11.3908; 79.7148
வளாகம்கிராமம்
(950 acres)
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய அங்கீகார வாரியம், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
இணையதளம்www.annamalaiuniversity.ac.in
நிர்வாகக் கட்டிடம்

தொடக்க நிலை

தொகு

ராஜா சர் அண்ணாமலை செட்டியார், அரசுக்கு அளித்த கல்லூரிகள், சொத்துகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு 1928-ல் தனிச் சட்டம் மூலம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.இந்த தனிச் சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு நிறுவனர் என்ற அங்கீகாரத்துடன் சில அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன.[3] 1929ம் ஆண்டு சட்டத்தின்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு அரசு பல்கலைக்கழகம் என்றாலும் அதில் இடம்பெற்ற ஒரு சில பிரிவுகள் இப்பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் செயல்படும் வாய்ப்பினை அளித்திருந்தது. அதனுடைய நிறுவனராக இருந்த அண்ணாமலைச் செட்டியார் மற்றும் அவரது வாரிசுகளுக்கு அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. பல்கலைக் கழகத்தை தோற்றுவிக்க முக்கிய காரணமாக இருந்தார் என்பதால் ஆங்கிலேய ஆட்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நிறுவனர் பல்கலைக்கழக இணைவேந்தராகவும் செயல்பட்டு வந்தார். பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியலை வேந்தர் (ஆளுநர்) அவர்களிடம் இணைவேந்தர் அளிப்பார். இப்பட்டியலை தயார் செய்வது இவரது தனிப்பட்ட உரிமையாகும். முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை வேந்தர், துணைவேந்தராக தேர்வு செய்து நியமனம் செய்வார். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட துணை வேந்தர் பல்கலைக்கழக அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான நிர்வாகியாக இருப்பார்.பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகம், ஆசிரியர், ஊழியர் பணியமர்த்தல், கல்வி மற்றும் வகுப்புகள், அன்றாட நிர்வாகம் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.[4]

இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன, தமிழகப் பலகலைக் கழகங்களில் இங்கு தான் முதன் முதல் (30 சனவரி 2010) தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது.

நிதி நெருக்கடி

தொகு

பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் இதன் இருந்ததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[5]

நிர்வாக சீரமைப்பு

தொகு

தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு 1928-ல் கொண்டுவரப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் முடிவுக்கு வருகிறது.[6][7][8][9]

இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற முக்கியப் பிரமுகர்கள்

தொகு

பணியாற்றிய அறிஞர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.thehindu.com/news/national/tamil-nadu/new-vice-chancellor-takes-over-at-annamalai-university/article37662476.ece
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "University Student Enrollment Details". www.ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=691148 இணை வேந்தரின் அதிகாரங்கள் தினமலர்
  4. "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய சட்டம்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 மே 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2014.
  5. http://dinamani.com/latest_news/article1335742.ece அண்ணாமலை பல்கலை.யை அரசுடைமை ஆக்க வேண்டும் தினமணி
  6. அண்ணாமலைப் பல்கலை.யை அரசே ஏற்கிறது: மசோதா தாக்கல் தினமணி
  7. மலை'யளவு பிரச்னை தினமணி தலையங்கம்
  8. Government introduces bill to take over Annamalai University Express News
  9. Annamalai University Bill introduced, varsity to lose special status Business Line
  10. http://dinamani.com/latest_news/2013/04/17/தேவையற்ற-பணி-நியமனங்கள்-நித/article1548826.ece தினமணி

வெளி இணைப்புகள்

தொகு