இராஜீவ் காந்தி
இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.[1]
இராசீவ் காந்தி Rajiv Gandhi | |
---|---|
1987 இல் இராசீவ் காந்தி | |
6-வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 31 அக்டோபர் 1984 – 2 திசம்பர் 1989 | |
குடியரசுத் தலைவர் | செயில் சிங் ரா. வெங்கட்ராமன் |
முன்னையவர் | இந்திரா காந்தி |
பின்னவர் | வி. பி. சிங் |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னையவர் | வெற்றிடம் |
பின்னவர் | லால் கிருட்டிண அத்வானி |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் | |
பதவியில் 1985–1991 | |
முன்னையவர் | இந்திரா காந்தி |
பின்னவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 17 ஆகத்து 1981 – 21 மே 1991 | |
முன்னையவர் | சஞ்சய் காந்தி |
பின்னவர் | சத்தீசு சர்மா |
தொகுதி | அமெதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராசீவ் ரத்னா காந்தி 20 ஆகத்து 1944 மும்பை, மும்பை மாகாணம், இந்தியா |
இறப்பு | 21 மே 1991 திருப்பெரும்புதூர், தமிழ்நாடு, இந்தியா | (அகவை 46)
காரணம் of death | படுகொலை |
நினைவகங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1981–1991) |
துணைவர் | சோனியா காந்தி (1968-1991) |
உறவுகள் | பார்க்க: நேரு-காந்தி குடும்பம் |
பிள்ளைகள் | |
பெற்றோர் | பெரோசு காந்தி இந்திரா காந்தி |
முன்னாள் கல்லூரி | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிச்சு (முடிக்கவில்லை) லண்டன் இம்பீரியல் கல்லூரி (முடிக்கவில்லை) |
வேலை |
|
விருதுகள் | பாரத ரத்னா (1991) |
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.[3]
சமய நல்லிணக்க நாள்
தொகுஇராசீவ் காந்தி பிறந்த நாளான ஆகத்து, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ https://tamil.boldsky.com/amphtml/insync/pulse/2017/life-story-rajiv-gandhi-016825.html
- ↑ https://www.puthiyathalaimurai.com/newsview/47967/Rajiv-Gandhi-28th-Anniversary-on-Today
- ↑ https://www.bbc.com/tamil/india-44198153.amp
- ↑ ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும்