இராமேஸ்வரம் வட்டம்

இராமேஸ்வரம் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக இராமேஸ்வரம் உள்ளது. இங்கு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் உள்ள்து.

இந்த வட்டத்தின் கீழ் இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் என 2 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 82,675 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 41,946 ஆண்களும், 40,729 பெண்களும் உள்ளனர். 19,101 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் . 45.7% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.77% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 971 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9604 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,553 மற்றும் 17 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 64.21%, இசுலாமியர்கள் 7.8%, கிறித்தவர்கள் மற்றும் 27.47% பிறர் 0.52% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு