எஸ். குலேந்திரன்

அதி வணக்கத்துக்குரிய சபாபதி குலேந்திரன் (Sabapathy Kulendran, 23 செப்டம்பர் 1900 – 14 பெப்ரவரி 1992) இலங்கைத் தமிழ்க் குருக்களும், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரும் ஆவார்.

அதி வணக்கத்துக்குரிய
எஸ். குலேந்திரன்
யாழ் ஆயர்
சபைதென்னிந்தியத் திருச்சபை
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்1947
ஆட்சி முடிவு1970
பின்வந்தவர்டி. ஜெ. அம்பலவாணர்
பிற தகவல்கள்
பிறப்பு(1900-09-23)23 செப்டம்பர் 1900
இறப்பு14 பெப்ரவரி 1992(1992-02-14) (அகவை 91)
படித்த இடம்பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணக் கல்லூரி
செரம்பூர் கல்லூரி

ஆரம்ப வாழ்க்கை

தொகு

குலேந்திரன் 1900 செப்டம்பர் 23 அன்று வழக்கறிஞர் சபாபதி என்பவருக்குப் பிறந்தார்.[1] குலேந்திரனின் சாம் சபாபதி யாழ்ப்பாண நகர முதல்வராக இருந்தவர்.[1] குலேந்திரன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள செரம்பூர் கல்லூரியில் இறையியலில் பட்டம் பெற்றார். 1934-ஆம் ஆண்டில் மதப்போதகராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1]

குலேந்திரன் யாழ்ம்மாணம் இளைஞர் காங்கிரசின் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.[2][3]

குலேந்திரன் விசுவலிங்கம் என்பவரின் மகள் மதுரம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.[1]

குலேந்திரன் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் 1வது ஆயராக 1947 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][4] 1970 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.[1]

மறைவு

தொகு

இளைப்பாறிய பின்னர் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து வந்த குலேந்திரன் 1992 பெப்ரவரி 14 இல் இறந்தார்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 88.
  2. Hoole, Rajan (1988). "Chapter 2: Some Milestones in the Development of Tamil Political Consciousness". Broken Palmyra. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு.
  3. Rajasingham, K. T. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  4. "JDCSI: Reminiscent reflections of an 11-year old". யாழ்ப்பாண மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை). Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.