கோபிநாத் முண்டே
கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde, 12 திசம்பர் 1949 - 3 சூன் 2014[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். மே 26, 2014 அன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்.மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999இல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் பா.ஜ.கவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.
கோபிநாத் முண்டே | |
---|---|
ஊரக வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 03 சூன் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜெய்ராம் ரமேஷ் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
முன்னையவர் | செயசிங்ராவ் கெய்க்வாட் (தேசியவாத காங்கிரசு) |
தொகுதி | பீடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 திசம்பர் 1949 நாத்ரா சிற்றூர், பரலி, மகாராட்டிரம் |
இறப்பு | சூன் 3, 2014 புது தில்லி | (அகவை 64)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிராத்ன்யா முண்டே |
பிள்ளைகள் | பங்கஜா, பிரீதம், யஷஸ்ரீ |
வாழிடம் | புது தில்லி |
தொழில் | அரசியல்வாதி |
இணையத்தளம் | கோபிநாத் முண்டே வலைத்தளம் |
இறப்பு
தொகு2014ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக்காரணமாக புதுடெல்லியில் காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Gopinath Munde dies in a road accident in Delhi" இம் மூலத்தில் இருந்து 2014-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140606112412/http://ibnlive.in.com/news/gopinath-munde-dies-in-a-road-accident-in-delhi/476309-37-64.html.
- ↑ "Interview : Gopinath mundeHe". Rediff இம் மூலத்தில் இருந்து 2013-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130823065737/http://www.rediff.in/news/aug/09mun.htm.
- ↑ "கோபிநாத் முண்டே உயிரிழந்தார் (ஆ)". பார்க்கப்பட்ட நாள் சூன் 3, 2014.