சரவாக் கட்சிகள் கூட்டணி
சரவாக் கட்சிகள் கூட்டணி அல்லது ஜிபிஎஸ் (ஆங்கிலம்: Sarawak Parties Alliance; மலாய்: Gabungan Parti Sarawak (GPS); சீனம்: 砂拉越政黨聯盟; ஜாவி: ݢابوڠن ڤرتي سراوق) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கூட்டணியாகும்.
சரவாக் கட்சிகள் கூட்டணி Sarawak Parties Alliance | |
---|---|
Gabungan Parti Sarawak | |
சுருக்கக்குறி | GPS |
தலைவர் | அபாங் ஜொகாரி ஒப்பேங் |
செயலாளர் நாயகம் | அலெக்சாண்டர் நந்தா லிங்கி |
நிறுவனர் | அபாங் ஜொகாரி ஒப்பேங் |
துணைத்தலைவர் | அவாங் தெங்கா அலி அசான் டக்ளஸ் உகா எம்பாஸ் |
இணைத் தலைவர்கள் | சிம் குய் இயான் தியோங் கிங் சிங் ஜோசப் சாலாங் காண்டும் |
குறிக்கோளுரை | முதன்மையில் சரவாக் Sarawak First[1][2][3] |
தொடக்கம் | 12 சூன் 2018 |
சட்ட அனுமதி | 19 நவம்பர் 2018[4][5] |
பிரிவு | பாரிசான் நேசனல் |
முன்னர் | சரவாக் கூட்டணி கட்சி |
தலைமையகம் | கூச்சிங், சரவாக் |
செய்தி ஏடு | • ஜீவா பக்தி • சுவாரா சரவாக் |
கொள்கை | பிராந்தியவாதம் சரவாக்கிய தேசியவாதம் பூமிபுத்ரா மேலாதிக்கம் தேசிய பழமைவாதம் மதச்சார்பின்மை |
அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி அரசியல் |
தேசியக் கூட்டணி | கூட்டணி பங்குதாரர்: • பாரிசான் நேசனல் (1973–2018 (as பாரிசான் சரவாக்)) • அம்னோ கூட்டணி (2020–தற்போது) (தேசிய அரசியல் கூட்டணியாக) |
நிறங்கள் | சிவப்பு மற்றும் கருப்பு |
பண் | "GPS Utamakan Sarawak"[6] |
மேலவை: | 6 / 70 |
மக்களவை: | 23 / 31 (சரவாக்) |
சரவாக் மாநில சட்டமன்றம்: | 76 / 82 |
மலேசிய முதலமைச்சர்கள்: | 1 / 1 (சரவாக் மட்டும்) |
இணையதளம் | |
www |
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தில் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோல்வியைத் தொடர்ந்து, சரவாக்கில் மட்டுமே இயங்கும் நான்கு முன்னாள் பாரிசான் நேசனல் (பிஎன்) கூறுக் கட்சிகளால், இந்தச் சரவாக் கட்சிகள் கூட்டணி நிறுவப்பட்டது.[7]
தற்போது மக்களவையில் 23 இடங்களுடன் நான்காவது பெரிய அரசியல் கூட்டணியாக உள்ளது. மேலும் சரவாக் மாநிலத்தில் இந்தக் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்து உள்ளது.
உருவாக்கம்
தொகுசரவாக் கட்சிகள் கூட்டணி 12 ஜூன் 2018-இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள்:
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (Parti Pesaka Bumiputera Bersatu - PBB),
- சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (Sarawak United Peoples' Party - SUPP),
- சரவாக் மக்கள் கட்சி (Parti Rakyat Sarawak - PRS)
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி (Sarawak Progressive Democratic Party - PDP)[8][9]
இந்த நான்கு கட்சிகளும் பாரிசான் நேசனல் (பிஎன்) கூட்டணியின் முன்னாள் கூறு கட்சிகளாக இருந்தன. பாரிசான் நேசனல் கூட்டணியில் இருக்கும் தீபகற்ப மலேசியக் கட்சிகளும்; சபா மாநிலக் கட்சிகளும்; ஒருபோதும் சரவாக்கில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாது என்ற ஓர் உடன்படிக்கையுடன் இந்தச் சரவாக் கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டது.[10]
கூட்டணியின் கொள்கைகள்
தொகுமலேசியா ஒப்பந்தத்தின் (Malaysia Agreement) அடிப்படையில் மாநில நலன்கள் மற்றும் உரிமைகளில் சரவாக் கட்சிகள் கூட்டணி கவனம் செலுத்தும்; மற்றும் பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) நடுவண் அரசாங்கத்தில் ஒத்துழைக்கத் தயாராக இருந்த போதிலும் எதிர்க் கூட்டணியாகவே இருக்கும் என்பது இந்தக் கூட்டணிக் கொள்கைகளில் ஒன்றாகும்.[7]
2018 ஆகஸ்டு 23-ஆம் தேதி, அதன் தலைவரான அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Zohari Openg), ஜிபிஎஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சங்கங்களின் பதிவாளரின் (Registrar of Societies (RoS) அதிகாரபூர்வக் கடிதத்திற்காகக் காத்து இருப்பதாக அறிவித்தார்.[11] இந்தக் கூட்டணி இறுதியாக 19 நவம்பர் 2018-இல் சட்டப்பூர்வமாக்கப் பட்டது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "It's 'Sarawak First That's GPS' development approach". New Sarawak Tribune. 29 November 2018. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
- ↑ Jeremy Veno (10 January 2019). "A guiding light for GPS". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
According to Abang Johari, the focal point of the GPS logo depicts the Kenyalang (hornbill) in the shape of an 'S' which reflects the vision and slogan of the party of putting 'Sarawak First'.
- ↑ "GPS will be new platform for Sarawak Government". Bernama. Daily Express. 21 January 2019. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
The defeat of the Barisan Nasional (BN) government at the federal level after the general election last year saw BN component parties in the state forming the GPS with its slogan or catchphrase "Utamakan Sarawak" or "Sarawak First".
- ↑ 4.0 4.1 Hidir Reduan Abdul Rashid (19 November 2018). "Gabungan Parti Sarawak gets nod from RoS". New Straits Times. Yahoo! News Singapore. Archived from the original on 22 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ 5.0 5.1 Samuel Aubrey; Abdul Hakim Bujang; Kim How Pin; Peter Boon (20 November 2018). "ROS officially approves GPS". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ "Lirik Lagu GPS". பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
- ↑ 7.0 7.1 Sharon Ling; Geryl Ogilvy (12 June 2018). "Sarawak BN parties pull out of coalition to form independent state-based pact". The Star. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018.
- ↑ "Malaysia's Sarawak State Government leaves Barisan Nasional: Statement". Bloomberg. The Edge Markets. 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018.
- ↑ Lee Poh Onn (15 June 2018). "Commentary: Free from the shackles of a fallen coalition, does Sarawak parties leaving spell the end of the Barisan Nasional?". Channel NewsAsia. Archived from the original on 12 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ KiniTV (21 April 2016). "Umno masuk Sarawak, saya letak jawatan - Adenan". YouTube.
- ↑ "Abang Jo: Gabungan Parti Sarawak is registered". Bernama. Free Malaysia Today. 23 August 2018. Archived from the original on 13 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)