சுநாதவினோதினி
சுநாதவினோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ க3 ம2 த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ம2 க3 ஸ |
- இது ஒரு ஔடவ இராகம்.
- ரிஷபம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
- சுநாதவினோதினி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் தைவத, நிஷாத முறையே கிரக பேதத்தின் வழியாக சிவரஞ்சனி, ரேவதி ஜன்னிய இராகங்களை கொடுக்கும்.
உருப்படிகள்
தொகு- கிருதி : தேவாதி தேவ ஸ்ரீ வாசுதேவ, மைசூர் வாசுதேவச்சாரியார், ஆதி
- கிருதி : ஸாமகாண சுநாதவினோதினி, குருராகாசார்யா, ஆதி
- கிருதி : முத்தமிழ் மன்னவனே, ராமநாதன் செட்டியார், ஆதி