செப்டம்பர் 2007
செப்டம்பர் | ||||||
தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
செப்டம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் தொடங்கி அக்டோபர் 17 முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
தொகு- செப்டம்பர் 3 - தொழிலாளர் நாள் (கனடா, ஐக்கிய அமெரிக்கா)
- செப்டம்பர் 4 - கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 5 - ஆசிரியர் நாள்
- செப்டம்பர் 13 - ரமழான் ஆரம்பம்
- செப்டம்பர் 15 - விநாயகர் சதுர்த்தி
விடுதலை நாட்கள்
தொகு- செப்டம்பர் 1 - உஸ்பெக்கிஸ்தான்
- செப்டம்பர் 2 - வியட்நாம்
- செப்டம்பர் 3 - கட்டார்
- செப்டம்பர் 6 - சுவாசிலாந்து
- செப்டம்பர் 7 - பிறேசில்
- செப்டம்பர் 8 - மசிடோனியா
- செப்டம்பர் 9 - வட கொரியா, தஜிகிஸ்தான்
- செப்டம்பர் 15 - கொஸ்டா ரிக்கா, ஹொண்டூராஸ், நிக்கரகுவா
- செப்டம்பர் 16 - மெக்சிக்கோ, பப்புவா நியூ கினி
- செப்டம்பர் 18 - சிலி
- செப்டம்பட் 21 - ஆர்மீனியா, பெலீஸ், மோல்ட்டா
- செப்டம்பர் 22 - பல்கேரியா, மாலி
- செப்டம்பர் 30 - பொட்சுவானா
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- செப்டம்பர் 3 - வங்காள தேசம்: முன்னாள் பிரதமர் காலிடா ஸியா மற்றும் அவரது மகன் இருவரும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாயினர். (பிபிசி)
- செப்டம்பர் 4 - சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. (எல்ஏ டைம்ஸ்)
- செப்டம்பர் 4 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 66 பேர் காயமடைந்தனர். (ஏபிசி)
- செப்டம்பர் 5: நவூருவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கான அகதிகளில் 50 பேர் உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். (எஸ்பிஎஸ்)
- செப்டம்பர் 6 - இத்தாலியப் பாடகர் லூசியானோ பவரொட்டி தனது 71வது அகவையில் புற்றுநோய் காரணமாக இறந்தார். (பிபிசி)
- செப்டம்பர் 6 - பீஜியில் மீண்டும் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. (நியூசிலாந்து ஹெரால்ட்)
- செப்டம்பர் 8 - இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று 80 அடிப் பள்ளத்தில் சரிந்து வீழ்ந்ததில் 80 இந்து யாத்திரீகர்கள் கொல்லப்ப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி 2007:
- செப்டம்பர் 9 - சிட்னியில் இடம்பெற்ற ஏபெக் உச்சி மாநாடு முடிவுற்றது. (ஏபிசி)
- செப்டம்பர் 9 - ஏபெக் அமைப்பில் சேர்வதற்கான இந்தியாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் 2010 இலேயே இது குறித்து மீண்டும் பரிசீக்கப்படும் என்றும் சிட்னியில் நடந்து முடிந்த ஏபெக் உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. (ஏபிசி)
- செப்டம்பர் 9 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன்களைத் தாண்டியது. (விக்கிநியூஸ்)
- செப்டம்பர் 10 - லண்டனில் இருந்து நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். (பிபிசி)
- செப்டம்பர் 12 - இந்தோனேசியாவின் சுமாத்திராவின் மேற்குப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவு நிலடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து பெருங்கடல் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. (ஏபி)
- செப்டம்பர் 16 - தாய்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 55 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 89 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- செப்டம்பர் 18 - பெருவில் விண்கல் ஒன்றின் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் சுகவீனமடைந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- செப்டம்பர் 18 - மியான்மாரில் ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு இவர்கள் கலைக்கப்பட்டனர். (சிஎன்என்)
- செப்டம்பர் 19 - ஆதி மனிதர்களின் 4 எலும்புக்கூடுகள் ஜோர்ஜியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (நியூயோர்க் டைம்ஸ்)
- செப்டம்பர் 20 - பாகிஸ்தானில் சனாதிபதி தேர்தல் அக்டோபர் 6இல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- செப்டம்பர் 21 - தென்னிந்தியத் திரைப்பட நடிகர் விஜயன் (படம்) மாரடைப்பால் காலமானார். (மாலைமலர்)
- செப்டம்பர் 24 - 2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. (ரெடிஃப்.கொம்)
- செப்டம்பர் 26 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- செப்டம்பர் 29 - பர்மாவில் ஜனநாயக ஆதரவு போரட்டக்காரர்கள் மீதான அடக்கு முறையை நிறுத்துமாறு வலியுறுத்தக் கோரும் முகமாக ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் இப்ராஹிம் கம்பாரி பர்மா சென்றடைந்துள்ளார். (மிசினாநியூஸ்)
- செப்டம்பர் 30 - இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற 2007க்கான உலக சதுரங்கப் போட்டிகளில் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார். (நியூயோர்க்டைம்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- செப்டம்பர் 1 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 2 - இலங்கை இராணுவத்தினர் தாம் மன்னார், சிலாவத்துறையை புலிகளிடம் இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். (தினக்குரல்)
- செப்டம்பர் 7 - மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதியில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் அமுக்க வெடியில் சிக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- செப்டம்பர் 12 - அவுஸ்திரேலியாவில் "அகதி" தகுதிநிலை கோரியிருந்த 83 தமிழர்களில் 72 பேருக்கு அகதி தகுதிநிலை அளிக்கப்படுவதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. (புதினம்)
- செப்டம்பர் 16 - தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் யாழ்ப்பாணத்துக்கு படகுகளில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் ஆரம்பித்த உண்ணாநோன்பை முதல்வர் மு. கருணாநிதியின் உறுமொழியை அடுத்து 4 நாட்களில் முடித்துக் கொண்டார். (புதினம்)
- செப்டம்பர் 20 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழக நடுவப் பணிமனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இலங்கை வானூர்திகள் மொத்தம் 16 குண்டுகள் வீசித் தாக்கியதில் ஒரு பணியாளர் உட்பட 6 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 26 - மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கல்விளானில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் அருட்திரு நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் கொல்லப்பட்டார். இராணுவத்தின் ஆள ஊடுருவும் படையினரே இதற்குக் காரணம் எனப் புலிகள் தெரிவித்தனர். (தமிழ்நெட்)
- செப்டம்பர் 28 - திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று கடற்புலிகள் கொல்லப்பட்டனர். (புதினம்)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்