தேனுகா (எழுத்தாளர்)
தமிழ் எழுத்தாளர்
இது தேனுகா எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை . தேனுகா இராகம் குறித்து படிக்க தேனுகா (இராகம்)
தேனுகா | |
---|---|
பிறப்பு | மு. சீனிவாசன் சனவரி 19, 1950 சுவாமிமலை, தமிழ்நாடு |
இறப்பு | கும்பகோணம் | அக்டோபர் 24, 2014
தேசியம் | இந்தியர் |
பணி | வங்கி ஊழியர் |
அறியப்படுவது | கலை, இலக்கிய விமரிசகர் |
தேனுகா என்றழைக்கப்படும் மு. சீனிவாசன் (பிறப்பு: சனவரி 19, 1950 - இறப்பு: அக்டோபர் 24, 2014)[1] தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் இசை, ஓவியம், சிற்பம், வரலாறு என்ற பல துறைகளில் பரிணமித்தவர். இந்திய அரசு வங்கியில் (State Bank of India) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதமிழ்நாடு, சுவாமிமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனிவாசன் நாதசுவரக் கலைக்குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சுவாமிமலை முருகையன் கோவிலில் நாதசுவரம் வாசிப்பவர். தந்தை வாசிக்கும் போது சீனிவாசன் தாளம் போடுவார்.[2]
சிறப்புகள்
தொகு- நெதர்லாந்து கட்டிடக்கலைஞர் ரீட்வெல்ட் வடித்த சிவப்பு-நீல வண்ண நாற்காலியைப் போன்று இவரே வடிவமைத்தார்.
- தமிழில் நுண்கலைகள் பற்றி அழகியல் கண்ணோட்டத்துடன் விமரிசனம் வைத்த முன்னோடி.[3]
நூல்கள்
தொகுகட்டுரைகள்
தொகு- டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை” (1984)
- வண்ணங்கள் வடிவங்கள் (1987 வெளியான கட்டுரைத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் சிறந்த கவின்கலை விருதுபெற்றது )[3]
விருதுகள்
தொகு- மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது
- இந்திய அரசின் ஷபெல்லோஷிப் விருது
- சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது
- ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "கலை இலக்கிய விமர்சகர் தேனுகா காலமானார்". தினமணி. 25 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2014.
- ↑ "புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்கு படைப்புத் திறன் நின்றுவிடும்(Creative menopausity)! - தேனுகா நேர்காணல்". பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2014.
- ↑ 3.0 3.1 "அஞ்சலி: தேனுகா". புத்தகம் பேசுது. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-29. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
வெளியிணைப்புகள்
தொகு- தேனுகா கலைப் பக்கங்கள்
- தேனுகாவின் பக்கங்கள்
- மைக்கேலேஞ்சலோ மற்றும் லியனார்டோ டாவின்சி வண்ணங்கள் வடிவங்கள் பரணிடப்பட்டது 2014-08-23 at the வந்தவழி இயந்திரம்
- ஆதிமூலத்தின் அரூப ஓவியங்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Championing a cause, The Hindu, Friday Review, Chennai, December 20, 2012
- Modern twist,The Hindu, Friday Review, Chennai, November 14, 2013
- காலம் அள்ளிக்கொண்ட கலா ரசிகர்!, தி இந்து, 26.10.2014