பனியுகம் (Ice age) அல்லது , "பனிப்படல யுகம் (Glacial Age) " என்பது புவிமேற்பரப்பினதும் வளிமண்டலத்தினதும் வெப்பநிலையானது, புவிமேற்பரப்பில் பெரும்பாலான பிரதேசங்கள் - துருவப்பகுதிகள் உள்ளடங்கலாக - பனிப்பாலைவெளிகளாகவும் நகரும் பெரும் உறைபனிப்படலங்களாகவும் (Ice Glacier) உருமாறும் அளவுக்கு குறைந்திருந்த ஒரு நீண்ட காலப்பகுதியாகும். நீண்ட பனியுகமானது , மிகையான குளிர் வெப்பநிலைக்கான காலப்பகுதி "மிகை பனியுகம்" (Glacial Period) எனவும் இடைப்பட்ட கதகதப்பான குளிர் வெப்பநிலைக்கான காலபகுதி "இடைநிலை பனியுகம்" (Inter-glacial Period) எனவும் குறிப்பிடப்படுகின்றன.பனியுக வரலாற்றாய்வின்படி பனி யுகம் என்பது வட, தென் புவி அரைக்கோளங்களில் விரிவான பனிப்பாலைவெளிகள் இருந்த காலப்பகுதியைக் குறிக்கிறது;[1] இந்த வரையறையின்படி 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த பனியுகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏனென்றால் கிரீன்லாந்து(Greenland) மற்றும் அண்டார்டிக் பனிப்படலங்கள்(Antarctic ice sheets) இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன.[2]

ஒரு ஓவியரின் படைப்பில் பனியுறைவு உச்சத்தில் பனி யுக பூமி. "Ice age terrestrial carbon changes revisited" by Thomas J. Crowley (Global Biogeochemical Cycles, Vol. 9, 1995, pp. 377-389 அடிப்படையில் அமைந்தது
அண்டார்டிக் பனிப் படலம். பனி யுகத்தின்போது பனிப் படலங்களின் விரிவாக்கம்.
கடந்த 400,000 ஆண்டுகளுக்கும் மேலாக வோஸ்வோட் பனிக் கருவைச் சேர்ந்த வெப்பநிலை, கரியமில வாயு மற்றும் தூசு ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுபாடுகள்

மிகவும் வழக்கத்திலுள்ள முறையில் சொல்வதென்றால் "பனி யுகம்" என்பது ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கு முன்பு விரிவான பனிப் படலங்கள் வட அமெரிக்க மற்றும் யூரேசிய கண்டங்களின் பெரிய பகுதிகளுக்கு மேலாக படர்ந்திருந்த கடைசி பனிப்படல மிகுநிலை உச்சம்பெற்ற மிகச் சமீபத்திய குளிர்ச்சியான காலகட்டத்தைக் குறிக்கிறது. இந்தக் கட்டுரை முந்தைய பனிப்படலவியல் பொருளிலேயே பனி யுகம் என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துகிறது: பனி யுகங்களின் போதைய குளிர்ச்சியான காலகட்டங்கள் பனிப்படலங்கள் என்றும், கதகதப்பு காலகட்டங்கள் இடைநிலை பனிப்படலங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பனி யுகக் கோட்பாட்டின் தோற்றம்

தொகு

1742 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் வாழ்ந்த பொறியியலாளரும் புவியியலாளருமான பியேரி மார்டெல் (1706–1767) சவாய் ஆல்ப்ஸ்களில் இருக்கும் சாமோனிக்ஸ் பள்ளத்தாக்கிற்கு வருகைபுரிந்தார்.[3] இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் தன்னுடைய பயணம் குறித்த குறிப்புக்களை பதிப்பித்தார். இந்தப் பள்ளத்தாக்கிற்கு குடியேறியவர்கள் பனிப்படலங்கள் ஒருகாலத்தில் மிக நீளமாக நீண்டிருந்தது என்பதற்கான ஒழுங்கற்ற சுருள்பாறைகளின் சிதறடிப்பிற்கு பங்களித்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.[4] பின்னாளில் இதேபோன்ற விளக்கங்கள் ஆல்ப்ஸின் பிற பகுதிகளிலும் இருப்பதாக. 1815 ஆம் ஆண்டில் மரவேலை செய்பவரும் சேமி ஆடு வேட்டையாடுபவருமான ஜேன்-பியரி பெராடின் (1767-1858) ஸ்விஸ் கேண்டன் பள்ளத்தாக்குகளில் உள்ள வால் டி பேக்னஸில் இருக்கும் ஒழுங்கற்ற சுருள்பாறைகள் அதற்கு முன்பாக மேற்கொண்டு நீடித்தபடியிருந்த பனிப்படலங்களின் காரணமாகவே ஏற்பட்டவை என்று விளக்கினார்.[5] பெர்னிஸ் ஓபர்லேண்டில் உள்ள மெய்ரிங்கனைச் சேர்ந்த பெயர் தெரியாத மரம் வெட்டுபவர் 1834 ஆம் ஆண்டில் ஸ்விஸ்-ஜெர்மன் புவியியலாளரான ஜேன் டி சார்பெண்டியர் (1786–1855) உடனான ஒரு விவாதத்தில் இதேபோன்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.[6] ஒப்பிடக்கூடிய விளக்கங்கள் வாலேஸின் வால் டி ஃபெரட் மற்றும் மேற்கு சுவிட்சர்லாந்தின் டீலேண்ட்[7] மற்றும் கதேயின் சயின்டிஃபிக் ஒர்க்ஸ் ஆகியவற்றிலிருந்து தெரிய வருகின்றன.[8] இதுபோன்ற விளக்கங்கள் உலகின் மற்ற பாகங்களிலிருந்தும் தெரிய வருகின்றன. பெவேரியன் இயற்கைவாதியான எர்ன்ஸ்ட் வான் பிப்ரா (1786–1855) 1849–1850 ஆம் ஆண்டில் சிலியன் ஆண்டிஸிற்குச் சென்று அங்கிருக்கும் பூர்வகுடிகள் பனிப்படலங்களின் இத்தகைய செயல்பாட்டிற்கான படிவக் குவியலுக்கு காரணமாகியிருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்தார்.[9]

அதேநேரத்தில், ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஒழுங்கற்ற பொருள்களின் சிதறலுக்கு எது காரணமாக இருக்கிறது என்பதை அறியத் தொடங்கியிருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து நகர்ந்துகொண்டிப்பது என்ற அர்த்தத்திலேயே பனிக்கட்டி குறித்து விவாதித்தனர். சுவீடன் நாட்டு சுரங்க நிபுணரான டேனியல் டிலாஸ் (1712–1772) 1742 ஆம் ஆண்டில் ஸ்காண்டின்வியன் மற்றும் பால்டிக் பிரதேசங்களில் ஒழுங்கற்ற சுருள்பாறைகள் இருப்பதற்கான காரணமாக கடல் பனிக்கட்டி மிதந்துசெல்வதைக் குறிப்பிட்ட முதலாமவராவார்.[10] 1795 ஆம் ஆண்டில் ஸ்காட்டிஷ் தத்துவவாதியும் இயற்கையியலாளருமான ஜேம்ஸ் ஹட்டன் (1726–1797), ஆல்ப்ஸ் மலைகளில் உள்ள ஒழுங்கற்ற பாறைகள் பனிக்கட்டியாறுகளின் காரணமாக ஏற்பட்டவை என்று விளக்கினார்.[11] இருபதாண்டுகளுக்குப் பின்னர் 1818 ஆம் ஆண்டில் ஸ்வீடன் தாவரவியலாளரான கோரன் வாலன்பெர்க் (1780–1851) ஸ்காண்டிநேவியன் பெனிசுலாவின் பனிக்கட்டியாறு குறித்த தன்னுடைய கோட்பாட்டைப் பதிப்பித்தார். அவர் பனிக்கட்டி ஆற்றை பிரதேச நிகழ்வு என்று குறிப்பிட்டார்.[12] ஒரு சில ஆண்டுகளிலேயே டேனிஷ்-நார்வீஜிய புவியியலாளரான ஜென்ஸ் எஸ்மார்க் (1763–1839) உலகளாவிய பனி யுகங்களில் தொடர்நிகழ்வு குறித்து விவாதித்தார். 1824 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வில், எஸ்மார்க் இதுபோன்ற பனிக்கட்டியாறுகளுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றமே காரணம் என்று குறிப்பிட்டார். இவை புவியின் கோளப்பாதையில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து உருவாகின்றன என்று நிரூபிக்க முயற்சித்தார்.[13] அடுத்தடுத்த ஆண்டுகளில் எஸ்மார்க்கின் கருத்தாக்கங்கள் விவாதிக்கப்பட்டு அவற்றின் சில பகுதிகள் ஸ்வீடிஷ், ஸ்காட்டிஷ் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஜேம்ஸன் (1774–1854) எஸ்மார்க்கின் கருத்தாக்கங்களை வரவேற்றவராக தெரிகிறது. பழங்கால பனிக்கட்டியாறுகள் குறித்த ஜேம்ஸனின் கருத்துக்கள் பெரும்பாலும் அநேகமாக எஸ்மார்க்கின் தாக்கத்தினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்.[14] ஜெர்மனியில் டிரெய்ஸ்கேக்கரைச் சேர்ந்த காடுவளர்ப்பியல் பேராசியரான ஆல்பிரெக்ட் ரெய்ன்ஹார்ட் பெர்னார்டி (1797–1849) எஸ்மார்க்கின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறார். 1832 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரையில் புவியின் வெப்ப மண்டலங்களை முடிந்தவரை எட்டுகின்ற முந்தைய துருவ பனிப் படலங்கள் குறித்த அனுமானங்களை பெர்னார்டி வெளியிட்டிருக்கிறார்.[15]

இந்த விவாதங்களைச் சாராமல் ஸ்விட்சர்லாந்து பொதுத்துறை பொறியியலாளரான இக்னேஸ் வெனட்ஸ் (1788–1859) 1829 ஆம் ஆண்டில் ஆல்ப்ஸ் மலைகள், அருகாமையிலிருக்கும் ஜுரா மலைகள் மற்றும் பெரும் பனிக்கட்டியாறுகளால் ஏற்பட்ட வடக்கு ஜெர்மன் சமவெளி ஆகியவற்றில் உள்ள ஒழுங்கற்ற சுருள்பாறைகளின் சிதறலை விளக்கினார். ஷூநைஸிஸ் நேச்சர்ஃபோர்ஷெண்ட் கெஸல்ஷாஃப்டில் (Schweizerische Naturforschende Gesellschaft) அவர் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வாசித்தபோது பெரும்பாலான அறிவியலாளர்கள் சந்தேகவாதிகளாகவே இருந்தனர்.[16] இறுதியில், வெனட்ஸாஸ் தன்னுடைய நண்பரான ஜேன் டி சார்பெண்டியரை மட்டும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடிந்தது. டி சார்பெண்டியர் வென்ட்ஸின் கருத்தாக்கத்தை பனிக்கட்டியாறு ஆல்ப்ஸ் மலைகளோடு வரம்பிற்குட்பட்டிருக்கின்றன என்ற கோட்பாடாக மாற்றினார். அவருடைய சிந்தனைகள் வாலன்பெர்க்கின் கோட்பாட்டை நினைவுபடுத்துபவையாக இருந்தன. உண்மையில், இவர்கள் இருவருமே புளூட்டோனிஸ அனுமானங்களைக் காட்டிலும் புவியின் வரலாறு குறித்து ஒரேவிதமான எரிமலையாதல் அல்லது டி கார்பெண்டரின் விஷயத்தையே பகிர்ந்துகொண்டனர். 1834 ஆம் ஆண்டில், டி சார்பெண்டியர் ஷூநைஸிஸ் நேச்சர்ஃபோர்ஷெண்ட் கெஸல்ஷாஃப்டில் (Schweizerische Naturforschende Gesellschaft) இல் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.[17] அதேநேரத்தில், ஜெர்மானிய தாவரவியலாளரான கார்ல் ஃபிரெடெரிக் ஷிம்பர் (1803–1867) பவேரியாவின் ஆல்பைன் மேல்நிலத்தில் வளரும் ஒழுங்கற்ற சுருள்பாறைகளில் வளர்கின்ற பாசிகளைப் பற்றி ஆய்வு செய்தார். இதுபோன்ற கற் குவியல் எங்கிருந்து வருகின்றன என்று அவர் அதிசயித்தார். 1835 ஆம் ஆண்டில் அவர் பவேரியன் ஆல்ப்ஸ்களுக்கு சில முறை சென்று வந்தார். ஆல்பைன் மேல்நிலத்தில் உள்ள சுருள்பாறைகளுக்கான போக்குவரத்தாக பனிக்கட்டி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். 1835 மற்றும் 1836 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட குளிர்காலத்தில் அவர் மூனிக்கில் சில விரிவுரைகளை அளித்தார். குளிர்ச்சியான காலநிலை மற்றும் உறைந்த தண்ணீரின் காரணமாக துடைத்தழிக்கப்படும் (“Verödungszeiten“) உலகளாவிய காலகட்டம் இருந்திருக்க வேண்டும் என்று ஷிம்பர் அனுமானித்தார்.[18] ஷிம்பர் 1836 ஆம்ஆண்டில் ஸ்விஸ் ஆல்ப்ஸில் உள்ள பெக்ஸிற்கு அருகாமையில் இருக்கும் டெவன்ஸில் கோடைகால மாதங்களை தன்னுடைய பல்கலைக்கழக நண்பர்களான லூயிஸ் அகாஸிஸ் (1801–1873) மற்றும் ஜேன் டி சார்பெண்டியர் ஆகியோரோடு செலவிட்டார். ஷிம்பர், டி சார்பெண்டியர் மற்றும் வெனட்ஸ் ஆகியோர் அங்கே பனிக்கட்டியாறு இருந்திருக்கக் கூடிய காலகட்டம் உண்டு என்று அகாஸிஸை ஏற்றுக்கொள்ளச் செய்தனர். 1836/7 குளிர்காலத்தில் அகாஸிஸ் மற்றும் ஷிம்பர் ஆகியோர் பனிக்கட்டியாறுகளின் தொடர்விளைவு குறி்தத கோட்பாட்டை உருவாக்கினர். அவர்கள் முக்கியமாக அதற்கு முந்தைய ஆய்வுகளான வெனட்ஸ், டி சார்பெண்டியர் மற்றும் அவர்கள் செய்த கள ஆய்வின் அடிப்படையில் இதனைக் கட்டமைத்தனர். அந்த நேரத்தில் அகாஸிஸ் ஏற்கனவே பெர்ன்ஹார்டியின் ஆய்வுக்கட்டுரை குறித்து தெரிந்தவராக இருந்திருப்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.[19] 1837 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷிம்பர் பனி யுகம் என்ற சொற்பதத்தை உருவாக்கினார்.[20] 1837 ஆம் ஆண்டு ஜுலையில் நியூஷடெல் ஷூநைஸிஸ் நேச்சர்ஃபோர்ஷெண்ட் கெஸல்ஷாஃப்டில் நடந்த வருடாந்திரக் கூட்டத்தில் தங்களுடைய கூட்டிணைப்பு ஆய்வை சமர்ப்பித்தனர். பார்வையாளர்கள் இது குறித்து விமர்சித்ததோடு காலநிலை வரலாறு குறித்து நிறுவப்பட்டிருக்கும் கருத்துக்களோடு முரண்படுவதால் இந்தக் கோட்பாட்டை எதிர்க்கவும் செய்தனர். உருகிய கோளமாக பூமி உருவானதிலிருந்து படிப்படியாக குளிர்ந்துவருகிறது என்றே பெரும்பாலான தற்கால அறிவியலாளர்கள் நினைத்தனர்.[21]

இந்த மறுதலிப்பை மீறிச்செல்ல அகாஸிஸ் புவியியல் கள ஆய்வைத் தொடங்கினார். அவர் 1840 ஆம் ஆண்டில் பனிக்கட்டியாறுகள் குறித்த ஆய்வு ("Études sur les glaciers") என்ற புத்தகத்தைப் பதிப்பித்தார்.[22] இதன் காரணமாக ஆல்ப்ஸின் பனிக்கட்டியாறு குறித்த புத்தகத்தை உருவாக்கிக்கொண்டிருந்த டி சார்பெண்டியர் வெளியேற்றப்பட்டார். ஆழ்ந்த பனிக்கட்டியாறு ஆராய்ச்சிக்கு அகாஸிஸை அறிமுகப்படுத்தியது தான்தான் என்பதால் தனக்கு அகாஸிஸ் முன்னுரிமையளித்திருக்க வேண்டும் என்று டி சார்பெண்டிர் கருதினார்.[23] இதற்கும் அப்பால், அகாஸிஸ் தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக தனது புத்தகத்தில் எந்த வகையிலும் ஷிம்பரைப் பற்றி குறிப்பிடுவதையும் தவிர்த்துவிட்டார்.[24]

இதெல்லாம் சேர்ந்து பனி யுகக் கோட்பாடு முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பத்தாண்டுகள் ஆயின. இது 1870 ஆம் ஆண்டுகளின் இரண்டாவது பாதியில் சர்வதேச அளவில் நிகழ்ந்தது.[25]

பனி யுகங்களுக்கான ஆதாரங்கள்

தொகு

பனி யுகங்களுக்கு மூன்று முக்கிய வகையான ஆதாரங்கள் இருக்கின்றன: புவியியல், வேதியியல் மற்றும் படிம ஆய்வியல்.

பனி யுகங்களுக்கான புவியியல் ஆதாரங்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன, பாறைக் குடைவு மற்றும் அரிப்பு, பனிக்கட்டியாறு முகடுகள், குறுகிப்போதல், பள்ளத்தாக்கு துண்டாக்கப்பட்டிருத்தல் மற்றும் தோண்டப்பட்டவற்றின் குவிவு மற்றும் பனிக்கட்டியாறு சிதைவுகள். அடுத்தடுத்து நிகழும் பனிக்கட்டியாறுகள் புவியியல் ஆதாரங்களை சிதைத்தும் அழித்தும் விடுகின்றன என்பதோடு இதை விளக்குவதையும் கடினமாக்கிவிடுகின்றன. மேலும், இந்த ஆதாரத்தை இந்த நாள்வரை துல்லியமாக வைத்திருப்பது சிக்கலானது; முந்தைய கோட்பாடுகள் நீண்ட உள்வய பனிக்கட்டியாறுகளோடு ஒப்பிட்டால் பனிக்கட்டியாறுகள் குறுகியவை என்று அனுமானிக்கின்றன. படிவுகளின் தோற்றம் மற்றும் பனிக் கருக்கள் ஆகியவை உண்மையான சூழ்நிலையை வெளிக்கொணர்கின்றன: பனிக்கட்டியாறுகள் நீண்டகாலம் இருப்பவை, உள்வய பனிக்கட்டியாறுகள் குறுகிய காலமே இருப்பவை. தற்போதைய கோட்பாடு செயல்பாட்டிற்கு வர சில காலம் ஆகும்.

வேதியியல் ஆதாரம் படிவுகள் மற்றும் படிவப் பாறைகள் மற்றும் கடல் படிவக் கருக்கள் ஆகியவற்றில் காணப்படும் படிவங்களில் உள்ள ஓரகத்தனிமங்களின் விகிதங்களில் உள்ள மாறுபாடுகளை உள்ளிட்டிருக்கிறது. பெரும்பாலான பனியுறைவு காலகட்டங்களுக்கு பனிக் கருக்கள் தங்களுடைய பனிக்கட்டியிலிருந்து காலநிலைக் குறிப்புகளையும், காற்றின் உள்ளிடப்பட்ட குமிழ்களிலிருந்து காற்றுமண்டல மாதிரிகளையும் வழங்குகின்றன. தண்ணீர் வலுவான ஓரகத்தணிமங்களைக் கொண்டிருப்பதன் காரணத்தால் உயர் வெப்ப ஆவியாதலாக இருக்கிறது, இதனுடைய சரிவிகிதம் குளிர்ச்சியான சூழ்நிலைகளில் குறைந்துபோகிறது[26]. இது வெப்பநிலைப் பதிவு கட்டமைக்கப்பட உதவுகிறது. இருப்பினும் இந்த ஆதாரம் ஓரகத்தனிம விகிதங்களால் பதிவுசெய்யபப்பட்ட பிற காரணிகளால் குழப்பத்திற்கு ஆளாகலாம்.

படிம ஆய்வியல் ஆதாரம் படிமங்களின் புவியியல் பகிர்வில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை உள்ளிட்டிருக்கிறது. பனி உறைதல் காலகட்டங்களில் குளிர்ச்சி-ஏற்பு உயிரினங்கள் தாழ் அட்சரேகைக்கு பரவுகின்றன, கதகதப்பான சூழ்நிலைகளுக்கு முன்னுரிமையளிக்கும் உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன அல்லது தாழ் அட்சரேகைகளால் தடுக்கப்பட்டுவிடுகின்றன. இந்த ஆதாரமும் விளக்குவதற்கு கடினமானது, ஏனென்றால் (1) இதற்கு நீண்டகாலத்திற்கு, நீண்ட அட்சரேகை சம்வெளிகளில் சுலபமாக ஒன்றோடொன்று தொடர்புகொள்ளக்கூடிய வகையில் படிவுகளின் தொடர் நிகழ்வு மூடப்பட்டிருக்க வேண்டியிருக்கிறது; (2) மாற்றத்திற்கு உட்படாமல் சில மில்லியன் ஆண்டுகளுக்கு உயிர் வாழும் புராதான உயிரினங்கள் மற்றும் வெப்பநிலை தேர்வுநிலைகள் உள்ளவை சுலபமாக அறுதியிடப்படுகின்றன; (3) தொடர்புடைய படிவுகள் கண்டுபிடிக்கப்படுதல், இதற்கு நிறைய அதிர்ஷ்டம் தேவை .

இத்தகைய பிரச்சினைகள் இருந்தபோதிலும், பனிக்கட்டி கரு மற்றும் கடல் படிவ கருக்கள் ஆகியவை கடந்த பல மில்லியன் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பகுப்பாய்வு பனி உறைவு மற்றும் உள்வய பனி உறைவு காலகட்டங்களைக் காட்டுகின்றன. இவை பனி யுகம் மற்றும் பனி உறைவு முகடுகள், குறுகிப்போதல் மற்றும் பனி உறைவு சிதைவுகள் போன்ற கண்ட மேலோட்டு நிகழ்வுகளுக்கும் இடையிலுள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. கண்ட மேலோட்டு நிகழ்வுகள் பனிக்கட்டி கருக்கள் மற்றும் கடல் படிவக் கருக்கள் கிடைப்பதற்கும் வெகு முன்பாக உருவான அடுக்குகளில் அவை காணப்படுகையில் முந்தைய பனி யுகங்களின் சிறந்த ஆதாரமாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

முக்கியமான பனி யுகங்கள்

தொகு
 
வடக்கு மத்திய ஐரோப்பாவின் பனி யுக வரைபடம். சிவப்பு: வெய்ஷலியன் பனி யுகத்தின் உச்ச வரம்பு; மஞ்சள்: உச்சபட்ச அளவில் சாலை பனி யுகம் (டிரென்த்தி நிலை); நீலம்: எல்ஸ்டர் பனி யுக உச்சபட்ச பனியுறைவு.

பூமியின் கடந்தகாலத்தில் குறைந்தது ஐந்து முக்கியமான பனி யுகங்களாவது இருந்திருக்கின்றன. இந்த யுகங்களுக்கும் அப்பால், பூமியானது உயர் அட்சரேகைகளில்கூட பனிக்கட்டி இல்லாமல் இருந்திருப்பதுபோல் காணப்படுகிறது.[மேற்கோள் தேவை]

அறியப்பட்டுள்ள முந்தைய பனி யுகத்தைச் சேர்ந்த பாறைகள் ஹரோனியன் என்ப்படுகின்றன, இவை உயிர்வாழ்க்கை தொடக்கநிலை ஊழி்க்காலத்தின்போது ஏறத்தாழ 2.4 முதல் 2.1 ஜிஏ (பில்லியன்) ஆண்டுகளில் உருவானவை. ஹரோனியன் முக்கியக் குழுவின் சில நூறு கிலோமீட்டர்கள் செயிண்ட் ஸ்டீ, மேரி முதல் ஹுரான் ஏரியின் வட கிழக்கு வரை ஹுரான் ஏரிக்கு வடக்கே 10-100 கிலோமீட்டர்கள் வரை நீண்டிருக்கிறது. ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள ஹரோனியன் சேர்மானங்கள் மார்க்கேட், மிச்சிகனுக்கு அருகாமையில் காணப்படுகின்றன, இந்தத் தொடர்பு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலியோபுரோடெரோஸிக் பனியுறைவால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தபடியாக நன்கறியப்பட்ட, கடைசி பில்லியன் ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக இருந்திருக்கக்கூடிய பனி யுகம் 850 முதல் 630 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் (கிரையோஜெனியன் காலகட்டம்) அத்துடன் இவை பனிப் படலங்கள் பூமத்திய ரேகையை[27] எட்டிய பனியுருண்டை பூமியை உருவாக்கியிருக்கலாம், இது எரிமலைகளால் உருவான சிஓ2 போன்ற பசுமையில்ல வாயுக்களின் சேர்க்கையால் முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. "கண்டங்களில் உள்ள பனிக்கட்டிகள் மற்றும் பெருங்கடல்களில் உள்ள பனிப் பாளங்கள் சிலிகேட் பிரிவுபடுதல் மற்றும் ஒளிக்கலப்பு ஆகிய இரண்டிற்கும் காரணமாகியிருக்கலாம், இவை தற்போது இருக்கும் சிஓ2க்கான இரண்டு முக்கிய மூழ்கடிப்புகளாகும்."[28] இந்த பனி யுகத்தின் முடிவு, இந்த மாதிரி விளக்கமானது சமீபத்தியது மற்றும் முரண்பாடானது எனும்போதிலும் எடியாகேரன் மற்றும் கேம்ப்ரியன் வெடிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கிறது என்று குறிப்பிடுகிறது.

ஆண்டியன்-சஹாரன் என்ற ஒரு சிறிய பனி யுகம் பிற்காலத்தைய ஆர்டோவிசியன் மற்றும் சிலுரியன் காலகட்டத்தின்போது 460 முதல் 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியிருக்கிறது. கார்பன் அடர்த்தியிருந்த மற்றும் ஆரம்பகால பெர்மியன் காலகட்டங்களின்போது தென் ஆப்பிரிக்காவில் 350 முதல் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான இடைவெளிகளில் காரூ பனி யுகத்தோடு தொடர்புகொண்டுள்ள நீளமான துருவ பனி முகடுகள் இருந்திருக்கின்றன. அர்ஜண்டினாவைச் சேர்ந்த இயைபுடைமைகள் புராதான பெரும் கண்டமான கோண்ட்வானாலேண்டின் மையப்பகுதியை உருவாக்கியிருக்கின்றன.

காரூ பனி யுகம் 360 முதல் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. இந்தப் பனி யுகத்திற்கான ஆதாரங்கள் முதலில் தெளிவாக அடையாளம் காணப்பட்ட தென்னாப்பிரிக்காவின் காரூ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பனியுறைப் பகுதிகளைத் தொடர்ந்து இது இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் பனி யுகம் டெவானியன் காலகட்டத்தின் தொடக்கத்தினால் நில தாவரங்களின் வளர்ச்சியின் காரணமாகவே பெருமளவிற்கு ஏற்பட்டதாக கருதப்பட்டது. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த புவியானது முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் பெருமளவிற்கு தாவரங்களால் மூடப்பட்டிருந்தது, இது இந்த பனி யுகத்திற்கு காரணமாக அமைந்த தாவர ஆக்ஸிஜன் அளவுகள் மற்றும் சிஓ2 அளவுகள் குறைவுபடுதல் ஆகியவை நீண்டகாலம் அதிகரித்ததற்கு காரணமானது.

அண்டார்டிகாவில் உள்ள பனிப்படலம் 20 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் வளரத் தொடங்கியது. தற்போதைய பனி யுகமான பிளையோசின்-குவார்டர்னரி பனியுறைவானது வடக்கு அரைக்கோளத்தில் பனிப்படலங்களின் பரவல் தொடங்கியபோது பிற்காலத்தைய பிளையோசின் காலகட்டத்தில் 2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியது. அதிலிருந்து பனியுறைவுகள் (பனியுறைவு அதிகரித்தல்) மற்றும் மித பனியுறைவு (பனியுறைவு திரும்பப் பெறப்படுதல்) எனப்படும் 40,000 மற்றும் 100,000 ஆண்டு கால அளவுகளில் பனிப்படலங்கள் முன்னேறுகின்ற மற்றும் திரும்பப் பெறப்படுகின்ற பனியுறைவு சுழற்சிகளைக் கண்டிருக்கிறது. புவி தற்போது மித பனியுறைவில் இருக்கிறது, கடைசி பனியுறைவு காலகட்டம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுற்றது. மீதமுள்ள கண்ட பனிப்படலங்கள் அனைத்தும் கிரீன்லாந்து, அண்டார்டிக் பனிப் படலம் மற்றும் பாஃபின் தீவு போன்ற சிறிய பனியுறைவுகளாக இருக்கின்றன.

 
வண்டல் படிவு பதிவுகள் கடைசி சில மில்லியன் ஆண்டுகளின்போதைய பனியுறைவுகள் மற்றும் மித பனியுறைவுகளின் ஏற்றத்தாழ்வு தொடர்நிகழ்வுகளைக் காட்டுகின்றன.

பனி யுகங்களை மேற்கொண்டு இடம் மற்றும் காலம் என்று பிரிக்கலாம்; உதாரணத்திற்கு, ரிஸ் (Riss) (180,000–130,000 ஆண்டுகள் bp) மற்றும் வும் (70,000–10,000 வருடங்கள் பிபி) ஆகிய பெயர்கள் குறிப்பாக ஆல்ஃபைன் பகுதியில் ஏற்பட்டுள்ள பனியுறைவையே குறிக்கின்றன. பனிக்கட்டியின அதிகபட்ச நீட்சி முழு இடைவெளியில் தக்கவைக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். துரதிஷ்டவசமாக, ஒவ்வொரு பனியுறைவின் துடைத்தழிக்கும் நடவடிக்கையும் ஏறத்தாழ முற்றிலுமாக முந்தைய பனிப்படலங்களின் ஆதாரத்தை அழி்த்துவிடுபவையாக தோன்றின, பின்னாளைய பனி்ப்படலங்கள் முழுமையாக மூடப்படாத பகுதிகள் மட்டுமே விதிவிலக்கு.

பனியுறைவுகளும் மித பனிவுறைவுகளும்

தொகு
 
சமீபத்திய பனியுறைவுகள் மற்றும் மித பனியுறைவுகளோடு சம்பந்தப்பட்டுள்ள வெப்பநிலை மற்றும் அளவு மாற்றங்களின் உருவரையைக் காட்டுகிறது
 
வடக்கு அரைக்கோளத்தின் குறைவான (மித பனியுறைவு, கறுப்பு) மற்றும் அதிகபட்ச (பனியுறைவு, சாம்பல் நிறம்) பனியுறைவு
 
தெற்கு அரைக்கோளத்தின் குறைவான (மித பனியுறைவு, கறுப்பு) மற்றும் அதிகபட்ச (பனியுறைவு, சாம்பல் நிறம்) பனியுறைவு

பனி யுகங்களுக்குள்ளாகவே (அல்லது கடைசி ஒன்றிலாவது) மிகவும் மிதமான மற்றும் மிகவும் தீவிரமான காலகட்டங்களும் தோன்றியிருக்கின்றன. குளிர்ச்சியான காலகட்டங்கள் பனியுறைவு காலகட்டங்கள் என்றும், வெதுவெதுப்பான காலகட்டங்கள் எமினியன் நிலை போன்று மிதமான பனியுறைவுக் காலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பனியுறைவுகள் துருவப்பகுதிகளிலிருந்து பெரும்பாலான பூமி மற்றும் பெரிய நிலம் மற்றும் கடல் ஆகியவற்றிற்கு மேலாக நீள்கின்ற பனிக்கட்டிகளுக்கும் மேலாக குளிர்ச்சியடைதல் மற்றும் உலர்தல் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மற்றவகையில் பனியுறைவு இல்லாத பகுதிகளில் உள்ள மலைப்பகுதி பனியுறைவுகள் தாழ்வான பனிப்படலம் காரணமாக தாழ்வான உயர் பகுதிகளுக்கே நீட்டிக்கப்படுகின்றன. பனி முகடுகளில் கடல் மட்டத்திற்கும் மேலாக பெருமளவிற்கு தண்ணீர் நீக்கப்படுவதால் கடல் மட்டங்கள் குறைந்துபோகின்றன. கடல் ஓட்ட உருவரைகள் பனியுறைவுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆர்டிக் மற்றும் அண்டார்டிக்காவில் புவியானது குறிப்பிடத்தகுந்த கண்ட பனியுறைவைக் கொண்டிருக்கிறது என்பதால் நாம் தற்போது பனியுறைவு குறைந்த காலகட்டத்தில் இருக்கிறோம். பனியுறைவு உச்சத்திற்கு இடைப்பட்ட இதுபோன்ற காலகட்டம் மித பனியுறைவு எனப்படுகிறது.

புவியானது 11,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெலோசின் எனப்படும் மித பனியுறைவு காலகட்டத்தில் இருந்திருக்கிறது. "வகைமாதிரியான மித பனியுறைவு காலகட்டம் 12,000 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கிறது" என்பது அடிப்படை அறிவுதான, ஆனால் இது சமீபத்தில் கேள்விக்குட்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நேச்சர் [29] பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தற்போதைய மித பனியுறைவு 28,000 ஆண்டுகளுக்கு நீடித்த முந்தை மித பனியுறைவோடு மிகவும் ஒப்புமையுடையது என்று வாதிடுகிறது. சுற்றுப்பாதை விசையில் ஏற்பட்ட முன்னூகிக்கப்பட்ட மாற்றங்கள் அடுத்த பனியுறைவு காலகட்டம் இப்போதிலிருந்து குறைந்தது 50,000 ஆண்டுகளில், மனிதர் உருவாக்கிய புவி வெப்பமடைதல்[30] இல்லாதபோதிலும் தொடங்கலாம் என்று வாதிடுகிறது (பார்க்க மிலான்கோவிச் சுழற்சிகள்). மேலும், அதிகரித்த பசுமையில்ல வாயுக்களிலிருந்து வெளியேற்றப்படும் மனித இன வளர்ச்சி படிக எரிவாயுக்கள் தொடர்ந்து தீவிரமாக பயன்படுத்தப்படும்வரை சுற்றுப்பாதை விசையை குறைவாக மதிப்பிடலாம்[31]. அமெரிக்கன் ஜியோபிஸிக்கல் யூனியனின் கூட்டத்தில் (டிசம்பர் 17,2008), ஆசியாவில் தொடங்கியிருக்கும் பெரிய அளவிற்கான அரிசி விவசாயம், ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் விரிவான காடழிப்போடு இணைந்து கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக காற்றுமண்டலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பசுமையில்ல வாயுக்களை வெளியிட்டதன் மூலம் உலகின் காலநிலையை மாற்றியிருக்கிறது என்ற பிரச்சினைக்குரிய கருத்தாக்கத்திற்கு ஆதரவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் விளக்கியிருக்கின்றனர். அடுத்தபடியாக, வெப்பமான காற்றுமண்டலம் கடல்களை சூடேற்றுவது அவை கரியமில வாயுவின் சேமிப்பகமாக இருப்பதன் பயனைக் குறைக்கிறது என்பதுடன் புவி வெப்பமடைதலை வலுப்படுத்துகிறது, புதிய பனியுறைவு யுகத்தை முன்னதாகவே நிறுவத் தயாராகிவிடுகிறது.[32]

பனி உறைவு காலகட்டம் குறித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான பின்னூட்டங்கள்

தொகு

ஒவ்வொரு பனி உறைவு காலகட்டமும் அதை மிகவும் தீவிரமானதாக்குகின்ற நேர்மறைப் பின்னூட்டத்தைப் பொறுத்தது என்பதோடு எதிர்மறை பின்னூட்டம் இதனைத் தணிக்கச் செய்து (இதுவரையிலுமான எல்லா விஷயங்களிலும்) இறுதியில் அதை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

பனி உறைவுக் காலகட்டங்களை மிகவும் தீவிரமாக்குகின்ற நிகழ்முறைகள்

தொகு

பனிக்கட்டியும் பனியும் பூமியின் எதிரொளித்திறனை அதிகரிக்கின்றன, அதாவது அவை சூரியனின் பெரும்பாலான ஆற்றலை எதிரொளித்து குறைவாக உறிஞ்சுகின்றன. இதனால் காற்றின் வெப்பநிலை குறையும்போது பனிக்கட்டி மற்றும் பனித் தளங்கள் வளர்கின்றன, இது எதிர்மறை பின்னூட்ட இயக்கவியல் இந்த அமைப்பை சமநிலையுற கட்டாயப்படுத்தும் திறன் வரை தொடர்கிறது. அத்துடன் காடுகளில் ஏற்படும் குறைவு பனிக்கட்டியின் விரிவாக்கம் எதிரொளித்திறனை குறைப்பதனால் உருவாகிறது.

1956 ஆம் ஆண்டில்[33] இவிங் மற்றும் டான் ஆகியோரால் முன்மொழியப்பட்ட மற்றொரு கோட்பாடு பனிக்கட்டி இல்லாத ஆர்டிக் பெருங்கடல் உயர் அட்சரேகைகளில் பனிப்பொழிவு அதிகரிப்பதற்கு வழியமைக்கும் என்று அனுமானிக்கிறது. குறைந்த வெப்பநிலையுள்ள பனிக்கட்டி ஆர்டிக் கடலை மூடும்போது குறைவான ஆவியாதலோ அல்லது வாயுவாதலோ இருக்கும் என்பதோடு துருவப் பிரதேசங்கள் வண்டற்படிவு வகையில் முற்றிலும் வறண்டுவிடுகின்றன, இது மத்திய அட்சரேகை பாலைவனங்களில் காணப்படும் அளவோடு ஒப்பிடக்கூடியது. இந்தக் குறைவான வண்டற்படிவானது உயர்-அட்சரேகை பனிப்பொழிவு கோடைக்காலத்தில் உருகுவதற்கு உதவுகிறது. பனிக்கட்டி இல்லாத ஆர்டிக் பெருங்கடல் நீண்ட கோடை நாட்களின்போது சூரியக் கதிரியக்கத்தை உறிஞ்சுகிறது, ஆர்டிக் காற்றுமண்டலத்தில் அதிக தண்ணீரை ஆவியாக்குகிறது. அதிக வண்டற்படிவுகளால் இந்தப் பனியின் பாகங்கள் கோடைகாலத்தில் உருகாமல் போய்விடலாம் என்பதோடு இதனால் பனி உறைவு பனிக்கட்டிகள் தாழ் அட்சரேகையிலும் மற்றும் மிகவும் தெற்குப்புறமான அட்சரேகையிலும் உருவாகி மேலே குறிப்பிடப்பட்ட அதிகரித்த எதிரொளித்திறனால் நிலத்தின் மீதாக வெப்பநிலைகளைக் குறைத்துவிடலாம். மேற்கொண்டு, இந்த கருதுகோளின்படி பெருங்கடல் பனிக்கட்டி இல்லாதிருப்பது ஆர்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் தண்ணீர் பரிமாற்றத்தை அதிகரிக்கச் செய்து ஆர்டிக்கை வெப்பப்படுத்தி வடக்கு அட்லாண்டிக்கை குளிர்விக்கச் செய்ய அனுமதிக்கலாம். (தற்போதைய விரிவாக்கப்பட்ட புவி வெப்பமடைதலின் தொடர்நிகழ்வுகள் 5-20 வருடங்களுக்களுக்குள்ளாக ஆர்டிக் பெருங்கடல் பனிக்கட்டியே இல்லாத நிலைக்கு ஆளாவதையும் உள்ளிட்டிருக்கிறது, பார்க்க ஆர்டிக் சுருங்குதல்.) வெப்பமடையும் சுழற்சியின்போது வடக்கு அட்லாண்டிக்கிற்குள்ளாக கூடுதலான தண்ணீர் ஓடுவதும் உலகளாவிய பெருங்கடல் தண்ணீர் சுழற்சியை குறைத்துவிடும் (பார்க்க தெர்மாஹலின் சுழற்சி நிறுத்தம்). இதுபோன்று குறைவுபடுதல் (வளைகுடா நீரோட்டங்களின் விளைவுகளைக் குறைப்பதன் மூலம்) வடக்கு ஐரோப்பாவில் குளிர் விளைவுகளைக் கொண்டிருக்கும், இது அடுத்தபடியாக கோடைகாலத்தின்போது அதிகரித்த தாழ்-அட்சரேகை பனி தக்கவைப்பிற்கு வழியமைக்கும். விரிவான பனி யுகங்களின்போது உறை பனியானது செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா வழியாக நகர்ந்துசென்று, வளைகுடா நீரோட்டம் தடுக்கப்படுகின்ற வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் வரை நீளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

உறைபனிக் காலங்களை தணிக்கச்செய்கின்ற நிகழ்முறைகள்

தொகு

பனி உறைவுகளின்போது உருவாகும் பனிப் படலங்கள் அவற்றிற்கு அடியில் இருக்கும் நிலம் அரிக்கப்படுவதற்கு காரணமாகிறது. சில காலத்திற்குப் பின்னர் இது கடல் மட்டத்திற்கு மேலான நிலத்தின் அளவைக் குறைத்துவிடுகிறது என்பதுடன் இவ்வகையில் பனிப்படலங்கள் உருவாகக்கூடிய இடத்தின் அளவு குறைந்துபோகிறது. இது பனிப்படலங்களின் உருவாக்கத்தோடு இணைந்த கடல் மட்டம் தாழ்ந்துபோவதுபோல் எதிரொளிப்புத்திறன் பின்னூட்டத்தைத் தணிக்கிறது.

பனி உறைவு அதிகரிக்கும்போது ஏற்படும் அதிகரித்த உலர்நிலையானது உறைநிலையை தக்கவைப்பதற்குக் கிடைக்கின்ற வாயுவாதலைக் குறைப்பது மற்றொரு காரணியாகும். இதனாலோ அல்லது வேறு எந்த நிகழ்முறையாலோ தூண்டப்படும் உறைவு பனி ஓய்வு உறைபனி மேலும் அதிகரிப்பதைப் போன்று ஒரேவிதமான பின்திரும்பல் நேர்மறை பின்னூட்டங்களால் அதிகரிக்கச் செய்யப்படலாம்.

பனி யுகங்களுக்கான காரணங்கள்

தொகு

பனி யுகங்களுக்களுக்கான காரணங்கள் பேரளவு பனி யுகக் காலகட்டங்கள் மற்றும் பனி யுகங்களுக்குள்ளான உறைபனி காலகட்டங்களின் சிறிதளவு மாறுபடும் ஓட்டம் ஆகிய இரண்டிற்குமான காரணங்கள் முற்றிலுமாக புரிந்துகொள்ளப்படவில்லை. சில காரணிகள் முக்கியமானவை என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்ட்டிருக்கிறது: காற்றுமண்டலக் கலப்பு (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் ஆகியவற்றின் செறிவு); சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள் மிலான்கோவிட்ச் சுழற்சிகள் (பிரபஞ்சத்தை சுற்றும் சூரியனின் சுற்றுப்பாதை); காற்று மற்றும் கடல் நீரோட்டங்களை பாதிக்கக்கூடிய புவியோட்டு அடுக்குகளின் அசைவு; சூரிய சக்தி வெளிப்பாட்டிலான மாறுபாடுகள்; புவி-நிலவு அமைப்பின் சுற்றுப்பாதை இயங்குவிசை; மற்றும் மிகப்பெரியதாக இருக்கும் விண்கற்களின் தாக்கம் மற்றும் பெரிய எரிமலைகளின் உமிழ்வுகளை உள்ளி்ட்ட எரிமலை வெடிப்பு.

இந்தக் காரணிகளில் சில ஒன்றின் மீது ஒன்று தாக்கமேற்படுத்துபவை. உதாரணத்திற்கு, பூமியின் காற்றுமண்டலக் கலப்பில் ஏற்படும் மாற்றங்கள் (குறிப்பாக பசுமையில்ல வாயுக்களின் செறிவுகள்) காலநிலையை மாற்றியமைக்கலாம், அதேநேரத்தில் காலநிலை மாற்றமும்கூட காற்றுமண்டலக் கலப்பை மாற்றியமைக்கலாம் (உதாரணத்திற்கு வெப்பநிலை விளைவு சிஓ2ஐ நீக்குகின்ற விகிதத்தில் மாற்றமேற்படுத்துவதன் மூலம்).

மௌரீன் ரேமோ, வில்லியம் ருடிமன் ஆகியோரும் மற்றும் சிலரும் திபெத்திய மற்றும் கொலராடோ பீடபூமிகள் அளவிட முடியாத சிஓ2 துடைத்தழிப்பான்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர், இவை 40 மில்லியன் ஆண்டுகள் செனோசோயிக் குளிர்விப்பிற்கான குறிப்பிடத்தகுந்த காரணமாக இருக்கக்கூடிய புவி காற்றுமண்டலத்திலிருந்து போதுமான அளவிற்கு சிஓ2ஐ நீக்கும் திறனுள்ளவையாக இருக்கின்றன. மேலும் அவர்கள் மேல்நோக்கி உயர்ந்திருக்கும் அவற்றின் பாதியளவானது (சிஓ2 துடைத்தழிப்பு திறன்)கடந்த 10 மில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியிருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.[34][35]

பூமியின் காற்றுமண்டலத்திலான மாற்றங்கள்

தொகு

பசுமையில்ல வாயுக்களின் அளவுகள் பனி யுகங்களில் வீழ்ச்சியுற்று பனிப்படலங்கள் மீண்டும் தோன்றியபோது அதிகரித்திருக்கின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, ஆனால் காரணகாரிய விளைவை நிர்மாணிப்பது எளிதன்று (பார்க்க மேலே உள்ள காலநிலை விளைவின் பங்கு). பசுமையில்ல வாயு அளவுகள் பனி யுகங்களுக்கு காரணமானவை என்று கருதப்பட்ட அதாவது கண்டங்கள் நகர்தல் மற்றும் எரிமலையாதல் போன்ற பிற காரணிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

பனியுருண்டை பூமி கருதுகோளானது பிற்காலத்தைய பிரிட்டரோஸாக்கில் ஏற்பட்ட தீவிரமான உறைநிலை காற்றுமண்டலத்தில் சிஓ2 அதிகரிக்கும் அளவுகளை முடிவுக்கு கொண்டுவந்தது என்றே கூறுகிறது, அத்துடன் பனியுருண்டை பூமி ஆதரவாளர்கள் சிலர் இது காற்றுமண்ட சிஓ2 இல் ஏற்பட்ட குறைவினாலேயே ஏற்பட்டன என்று வாதிடுகின்றனர். இந்த கருதுகோள் எதிர்கால பனியுருண்டை பூமிகள் குறித்தும் எச்சரிக்கிறது.

சயின்ஸ் பத்திரிக்கையின் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதிப்பு பனி யுகத்திற்கு பின்னர் மாற்றத்தின் பருமனுக்கு காரணமான பசுமையில்லா வாயுக்களின் இரண்டாம் நிலை காரணிகளாகக் கொண்டு சூரியக் கதிர் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் புவி வெப்பமடைந்ததற்கான ஆரம்பகட்ட தூண்டுதலாக இருந்திருக்கிறது என்ற ஆதாரத்தை வழங்கியது.[36]

வில்லியம் ருடிமன் தொடக்கநிலை ஆந்த்ரோபோசின் கருதுகோளை முன்மொழிந்திருக்கிறார், இதன்படி மனித இனம் பூமியின் காலநிலை மற்றும் சூழியலமைப்பில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தபோதுதான் ஆந்த்ரோபோசின் யுகம் பூமியில் சமீபத்தில் உருவாகத் தொடங்கியது என்று சிலர் குறிப்பிடுவது போன்று தொழில்துறையின் முன்னேற்றங்களால் 18 ஆம் நூற்றாண்டில் உருவாகவில்லை, நமது முந்தையகால விவசாய முன்னோர்களின் தீவிரமான விவசாய நடவடிக்கைகளின் காரணமாக 8,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. இது காற்றுமண்டல பசுமையில்லா வாயு செறிவுறுதல்கள் மிலான்கோவிட்ச் சுழற்சிகளின் காலகட்ட முறையைத் தொடர்ந்து நின்றுபோன காலகட்டமாகும். அவருடைய காலம்கடந்த-பனிப்படலமாக்கம் என்ற கருதுகோளில் ஆரம்பநிலை பனி யுகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்ட பனி யுகத்தின் வருகை முந்தையகால விவசாயிகளின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ருடிமன் குறிப்பிடுகிறார்.[37]

கண்டங்களின் நிலை

தொகு

வெதுவெதுப்பான நீரின் ஓட்டத்தை நிலநடுக்கோட்டிலிருந்து துருவங்களுக்குச் செல்வதைத் தடுத்து பனிப்படலங்கள் உருவாக உதவிய ஓட்டத்தை தடுக்கவோ குறைக்கவோ செய்த நிலைகளில் கண்டங்கள் இருந்தபோது பனி யுகங்கள் தோன்றின என்று புவியியல் ஆதாரங்கள் காட்டுவதுபோல் தோன்றுகிறது. பனிப்படலங்கள் பூமியின் எதிரொளிப்புத்திறனைக் குறைத்து சூரிய கதிரியக்கம் உறிஞ்சப்படுவதை குறைத்திருக்கின்றன. குறைவான கதிரியக்கம் உறிஞ்சப்பட்டதால் காற்றுமண்டலம் குளிர்ந்திருக்கிறது; இந்தக் குளிர்ச்சி பனிப்படலங்கள் அதிகரிக்க உதவியிருக்கிறது, இது நேர்மறை பின்னூட்ட துளையில் எதிரொளிப்புத்திறனை மேற்கொண்டு அதிகரித்திருக்கிறது. வெப்பநிலை விளைவில் ஏற்பட்ட குறைவு பசுமையில்ல விளைவிலான அதிகரிப்பிற்கு காரணமாகும் வரை பனி யுகம் தொடர்ந்தது.

நிலநடுக்கோட்டிலிருந்து துருவங்களுக்கு ஓடும் வெதுவெதுப்பான நீரைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ செய்த கண்டங்களின் மூன்று உருவரைகள் தெரிய வந்திருக்கின்றன:

  • ஒரு கண்டம் இன்று அண்டார்டிகா இருப்பது போன்று துருவத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது.
  • ஒரு துருவக் கடல் என்பது இன்று ஆர்டிக் பெருங்கடல் இருப்பதுபோன்று ஏறத்தாழ நிலமில்லாததுதான்.
  • ஒரு பெரும் கண்டமானது கிரையோஜெனியன் காலகட்டத்தின்போது ரொடினா செய்தது போன்று பெரும்பாலான நிலநடுக்கோட்டை உள்ளிட்டிருக்கிறது.

இன்றைய பூமி தென் துருவத்தின் மேலாக ஒரு கண்டத்தைக் கொண்டிருக்கிறது என்பதுடன் வட துருவத்தில் ஏறத்தாழ நிலமற்ற ஒரு பெருங்கடலையும் கொண்டிருக்கிறது, புவியியலாளர்கள் புவியியல்ரீதியில் அருகாமை எதிர்காலத்தில் பனிப்படல காலகட்டங்களை பூமி நீடித்திருக்கச் செய்யும் என்று நம்புகின்றனர்.

இமாலய மலைகள் தற்போதைய பனியுகங்களுக்கான முக்கியக் காரணிகளாக இருந்திருக்கும் என்று சில அறிவியலாளர்கள் நம்புகின்றனர், ஏனென்றால் இந்த மலைத்தொடர்கள் பூமியின் மொத்த மழையளவை அதிகரிக்கச் செய்திருக்கின்றன என்பதோடு சிஓ2 வீதம் காற்றுமண்டலத்திலிருந்து துடைத்தழிக்கப்பட்டு பசுமையில்ல விளைவைக் குறைத்திருக்கிறது.[35] இமாலய மலைத்தொடர்களின் உருவாக்கமானது இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு யூரேஷிய தட்டோடு மோதிய ஏறத்தாழ 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியிருக்கிறது, அத்துடன் இமாலய மலைத்தொடர்கள் இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு இப்போதும் வருடத்திற்கு 67 மில்லிமீட்டர் என்ற அளவில் நகரத்தொடங்கியிருப்பதால் வருடத்திற்கு 5 மில்லிமீட்டர் அளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கின்றன. இமாலய மலைத்தொடர்களின் வரலாறு 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய-இயோசின் காலகட்டத்திலிருந்து பூமியின் சராசரி வெப்பநிலையில் நீண்டகால குறைவோடு பரந்தகன்ற முறையில் பொருந்திப்போகிறது.

கடல் ஓட்டங்களில் ஏற்றத்தாழ்வுகள்

தொகு

பண்டைக்கால சுற்றுச்சூழல் காலகட்டத்திற்கான மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாக கண்டத்தின் நிலை, கடல் மட்டங்கள், உப்புத்தன்மை மற்றும் பிற காரணிகளால் மேம்படுத்தப்பட்ட கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாறுபாடு இருக்கிறது. அவை குளிர்விக்கும் திறனையும் (எ.கா. அண்டார்டிக் பனிக்கட்டி உருவாக்கத்திற்கு உதவியிருக்கிறது) கதகதப்பாக்கும் திறனையும் (எ.கா. போரியல் காலநிலைக்கு எதிராக பிரித்தானிய தீவுகளை கதகதப்பாக்கியிருக்கின்றன) பெற்றிருக்கின்றன. ஏறத்தாழ 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனாமா ஜலசந்தி மூடப்பட்டது வெப்பமண்டல அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையிலான தண்ணீர் பரிமாற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் வட அமெரிக்காவிற்கு மேல் தற்போதிருக்கும் வலுவான பனி உறைவை துரிதப்படுத்தியிருக்கிறது.[38]

கடல் நீரோட்ட ஏற்றத்தாழ்வுகள் சமீபத்திய பனி உறைவு துரிதமாக்கலுக்கு காரணமாக அமைந்திருக்கும் என்று ஆய்வுகள் குறி்ப்பிடுகின்றன. கடைசி பனி உறைவு காலகட்டத்தின்போது கடல் மட்டமானது முக்கியமாக வடக்கு அரைக்கோள பனிப்படலங்களில் தண்ணீர் பிரிந்தபோது 20–30 மீட்டர்களுக்கு ஏற்றத்தாழ்வடைந்தது. பனி சேர்ந்து கடல் மட்டம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வீழ்ந்தபோது பெரிங் ஸ்ட்ரெய்ட் (சைபீரியாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையில் இருக்கும் இந்த குறுகலான ஜலசந்தி இன்று 50 மீட்டர் ஆழமுள்ளதாக இருக்கிறது) வழியாக ஓடிய தண்ணீர் குறைந்தது, இது வடக்கு அட்லாண்டிக்கிலிருந்து ஓட்டம் அதிகரிப்பதற்கு காரணமானது. இது அட்லாண்டிக்கில் தெர்மொஹலின் சுழற்சியை மறுசீரமைப்பு செய்து ஆர்டிக்கிற்குள்ளான வெப்ப மாற்றத்தை அதிகரித்ததானது துருவ பனிச்சேர்க்கைகளை உருகச்செய்ததோடு பிற கண்ட பனிப் படலங்களை குறைத்தது. தண்ணீர் வெளியிடப்பட்டதானது கடல் மட்டங்களை மீண்டும் அதிகரிக்கச் செய்து வடக்கு அரைக்கோள பனிச் சேர்க்கைகளுக்கு மாற்றப்படுவதோடு இணைந்து பசிபி்க்கைச் சேர்ந்த குளிர் நீர் சென்று சேர்வதை மீட்டது.[39]

திபெத்திய பீடபூமி மற்றும் மற்றும் பனிக்கோட்டிற்கு மேலை சுற்றியுள்ள மலைத்தொடர் பகுதிகள் உயர்வு

தொகு

மத்தியாஸ் குலேயின் பனி யுக உருவாக்க புவியியல் கோட்பாடு பனி யுகங்களின்போது (கடைசி பனிப்படல உச்சநிலை?) திபெத்திய பீடபூமியை சூழ்ந்திருந்த பனிப்படலங்களின் இருப்பினால் குறிப்பிடப்படுகிறது. குலேயின் கூற்றுப்படி பனிக்கோட்டிற்கு அருகாமையில் திபெத்திய டெக்டோனிக் தட்டு உயர்ந்திருப்பது வெற்று நிலப்பரப்பைக் காட்டிலும் 70 சதவிகிதத்திற்கு அதிகமான எதிரொளிப்புத் திறனோடு சி. 2.4 கிமீ² பனித்தளத்திற்கு காரணமாகியிருக்கிறது. வெற்று வெளியில் ஆற்றல் பிரதிபலிப்பது உலகளாவிய குளிர்ச்சிக்கு காரணமாக அமைந்து பிளைஸ்டோசின் பனி யுகத்தை தூண்டியிருக்கிறது. இந்த உயர்நிலம் துணை வெப்பமண்டல அட்சரேகையில் 4 முதல் 5 மடங்குகள் வரையிலான உயர்-அட்சரேகை பகுதிகளில் வெயில் காய்வதால் பூமியின் வலுவான வெப்பமேற்று மேற்பரப்பாக இருக்கவேண்டியது குளிர்ச்சியான மேற்பரப்பாக மாறிவிட்டது.

பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாக ஏற்பட்ட கதிரியக்க மாற்றங்களின் 100000 வருட சுழற்சியைக் கொண்டு குலே மித பனியுறைவு காலகட்டங்களை விளக்குகிறார். அதிகமாக சுமத்தப்பட்ட எடையின் காரணமாக நார்டிக் உள்நிலம் பனிப்பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை ஒன்றிணைக்கும்போது இந்த ஒப்பீட்டுரீதியில் குறிப்பிடத்தகுந்த வெப்பமடைதல் உள்நில பனிப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் நிகழும் பனி உருகலுக்கு காரணமாகிறது.[40][41][42]

பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாறுபாடுகள் (மிலான்கோவிச் சுழற்சிகள்)

தொகு

மிலான்கோவிச் சுழற்சிகள் என்பவை சூரியனை சுற்றும் பூமியின் சுற்றுப்பாதையினுடைய குணவியல்பில் ஏற்படும் சுழற்சி மாறுபாடுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு சுழற்சியும் வேறுபட்ட நீளத்தைக் கொண்டிருக்கிறது, இதனால் சிலபோது அவற்றின் விளைவுகள் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன என்பதோடு மற்றொரு சமயத்தில் அவை (பகுதியளவிற்கு) ஒன்றையொன்று நீக்கவும் செய்கின்றன.

மிலான்கோவிச் சுழற்சி பனி யுகத்தை (தொடர் பனிக்காலங்கள்) தொடங்கியோ அல்லது முடித்தோ வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு:

  • அவற்றின் விளைவுகள் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன என்றாலும் போதுமான அளவிற்கு வலுவாக இல்லை.
  • "முகடுகள்" (ஒன்றையொன்று வலுப்படுத்தும் விளைவுகள்) மற்றும் "பள்ளங்கள்" (ஒன்றையொன்று வலுவிழக்கச் செய்யும் விளைவுகள்) ஆகியவை மிகவும் சாதாரணமானவை என்பதோடு உணரப்பட்ட பனி யுகங்களைக் காட்டிலும் மிகவும் தொடர்ச்சியானவை.
 
65 வடக்கு அட்சரேகையில் கோடைகால உச்சத்தின் ஒரு நாளில் காற்றுமண்டல உச்சியில் உள்ள தினசரி சராசரி எதிரொளிப்பின் கடந்தகாலமும் எதிர்காலமும்.

முரண்பாடாக, பனி யுகத்திற்குள்ளாகவே பனியுறைவு மற்றும் மித பனியுறைவுகளின் தோற்றத்தை மிலான்கோவிச் சுழற்சிகள் பாதித்திருக்கின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போதைய பனி யுகங்கள் அதிகமும் ஆய்வு செய்யப்பட்டு நன்கு புரிந்துகொள்ளப்பட்டவை, குறிப்பாக கடந்த 400,000 ஆண்டுகால காலகட்டங்கள், இந்த காலகட்டம் பனிக்கட்டி மையக்கருக்களால் சூழப்பட்டவை என்பதால் அது காற்றுமண்டல உருவாக்கம் மற்றும் பனிக்கட்டி அளவு ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறது. இந்த காலகட்டத்திற்குள்ளாக மிலான்கோவிச் சுழல்பாதை விசையியக்க காலகட்டங்களுக்கான பனியுறைவு/மிதமான பனியுறைவின் பொருத்தப்பாடு பொதுவாக ஏற்கப்பட்டுள்ள சுழல்பாதை இயக்கவிசைக்கு நெருக்கமாக இருக்கிறது. சூரியனிலிருந்து மாறுபடும் தொலைவின் இந்த ஒருங்கிணைந்த விளைவுகள், பூமி அச்சினுடைய முன்னேற்றம் மற்றும் பூமி அச்சின் மாறுபடும் சாய்வுநிலை பூமியால் பெறப்படும் சூரிய ஒளியை மறுபகிர்வு செய்கிறது. பருகாலங்களின் தீவிரத்தை பாதிக்கச் செய்யும் புவி அச்சினுடைய சாய்வில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணத்திற்கு, 65 பாகைகள் வடக்கு அட்சரேகையில் ஜுலை மாதத்தில் ஏற்படும் சூரிய உட்பாய்வு 25 (450 W/m² முதல் 550 W/m² வரை) சதவிகிதம் அளவிற்கு மாறுபடுகிறது. முந்தைய குளிர்காலத்தில் உருவான பனிப்பொழிவை உருகச்செய்ய கோடைகாலங்கள் மிகவும் குளிர்ச்சியடையும்போது பனிப் படலங்கள் முன்னேற்றமடைகின்றன என்று பரவலாக நம்பப்படுகிறது. சுற்றுப்பாதையின் விசை வலுவாக இருப்பது பனியுறைவுகளை தூண்டுவதற்கு மிகவும் குறைவானது என்று சிலர் நம்புகின்றனர், ஆனால் சிஓ2 போன்ற பின்னூட்ட இக்கவியல்கள் இந்த பொருத்தமின்மையை விளக்குகின்றன.

மிலான்கோவிச் விசையியக்கம் பூமியின் சுற்றுப்பாதை ஆக்கக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் பனியுறைவுப் பதிவுகளில் தெரியவரலாம் என்று அனுமானிக்கின்ற அதே நேரத்தில் பனியுறைவு மற்றும் மித-பனியுறைவு காலகட்டங்களின் நேர அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உணரப்படும் சுழற்சிகளை விளக்குவதற்கான கூடுதல் விளக்கங்களும் அவசியமானவை. குறிப்பாக கடந்த 800,000 ஆண்டுகளில் பனியுறைவு-மித பனியுறைவு காலங்கள் துரிதமடைந்தது 100,000 ஆண்டுகள் மட்டுமே, இது பூமியின் சுற்றுப்பாதை ஒழுங்கின்மை மற்றும் சுற்றுப்பாதை சரிவு ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களோடு தொடர்புகொண்டிருக்கிறது. இது இப்போதுவரை மிலான்கோவிச்சால் அனுமானிக்கப்பட்ட மூன்று தொடர்களில் மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. 3.0–0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் பனியுறைவின் முதன்மையான உருமாதிரி பூமியின் ஒழுங்கின்மையில் ஏற்பட்ட 41,000 ஆண்டுகள் மாற்றங்களின் காலகட்டத்தோடு தொடர்புகொண்டிருக்கிறது. ஒரு நிகழ்மைக்கு எதிரான மற்றொரு நிகழ்மைக்கான காரணங்கள் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்பதோடு தற்போதைய ஆராய்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது, ஆனால் இதற்கான விடை பூமியின் காலநிலை அமைப்பில் ஏற்பட்ட ஒரு வகையான எதிரொலிப்புத் திறனோடு தொடர்புகொண்டிருக்கலாம்.

"வழக்கமான" மிலான்கோவிச் விளக்கம் கடைசி எட்டு சுழற்சிகளில் 100,000 ஆண்டுகள் சுழற்சியின் ஆக்கிரமிப்பை விளக்க முயற்சிக்கிறது. ரிச்சர்ட் ஏ. முல்லர் மற்றும் கார்டன் ஜே மெக்டொனால்ட் [1] பரணிடப்பட்டது 2008-03-05 at the வந்தவழி இயந்திரம் [2] [3] மற்றும் சிலர் இந்த கணக்கீடுகள் யாவும் பூமியின் இரு பரிமாண சுழற்சிக்கானவை என்றும், முப்பரிமாண சுற்றுப்பாதை சுற்றுப்பாதை சரிவின் 100,000 ஆண்டுகள் சுழற்சியையும் கொண்டிருக்கிறது என்றும் வாதிடுகின்றனர். சுற்றுப்பாதை சரிவில் ஏற்பட்ட இந்த மாறுதல்கள் சூரிய மண்டலத்தில் உள்ள தூசுப் பட்டைகளுக்கு உள்ளும் வெளியிலுமாக நகர்ந்தபோது எதிரொளிப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது வழக்கமான கண்ணோட்டத்தில் வேறுபட்ட இயக்கவியல் என்றபோதிலும், கடந்த 400,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட "அனுமானித்த" காலகட்டங்கள் அனைத்தும் ஏறத்தாழ ஒரேவிதமானதே. முல்லர் மற்றும் மெக்டொனால்ட் கோட்பாடு அடுத்தபடியாக ஜோஸ் அண்டோனியோ ரியல் என்பவரால் சவாலுக்கு உட்படுகிறது[4] பரணிடப்பட்டது 2008-10-15 at the வந்தவழி இயந்திரம்.

41,000- மற்றும் 26,000-வருட சுழற்சிகளில் பசுமையில்ல வாயு பின்னூட்டங்களை இணைத்து சுழலச்சி (26,000 வருட சுழற்சி) மீதான ஒழுங்கற்ற சுழற்சியின் (பலவீனமான 100,000 வருட சுழற்சி) மேம்பட்ட விளைவைக் கொண்டு 100,000 வருட சுழற்சியை விளக்கும் மாதிரியை வில்லியம் ருடிமன் பரிந்துரைக்கிறார். 41,000 வருட சுழற்சிதான் எப்போதுமே முதன்மையாக இருந்திருக்கிறது என்றும், ஆனால் இரண்டாவது அல்லது மூன்றாவது பனி யுகத்தை தூண்டியிருக்கும் காலநிலை முறைமையில் புவி நுழைந்திருக்கிறது என்றும் வாதிடும் பீட்டர் ஹ்யூபர்ஸ் என்பவரால் மற்றொரு கோட்பாடும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 100,000 ஆண்டுகள் என்ற காலகட்டம் உண்மையில் 80,000 மற்றும் 120,000 ஆண்டுகள் நீடிக்கின்ற சுழற்சிகளை ஒன்றாக இணைத்து சராசரியாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றமே என்பதை இது உணர்த்துகிறது (நேச்சர் 434, 2005, [5]). இந்தக் கோட்பாடு டிடியர் பெய்லார்ட் என்பரால் முன்மொழியப்பட்ட எளிய அனுபவவாத மாதிரியோடு பொருந்திப்போகிறது [6]. பிற்காலத்திய பிளைஸ்டோடின் பனியுறைவு சுழற்சிகள் மூன்று குவாஸி-நிலைப்படுத்தப்பட்ட காலநிலை அமைப்புக்களுக்கு இடையே தாவிச்சென்றவை போல் காணப்படுவதாக பெய்லார்ட் குறிப்பிடுகிறார். இந்தத் தாவல்கள் சுற்றுப்பாதை விசையால் தூண்டப்பட்டிருக்கலாம், அதேசமயம் ஆரம்பகால பிளைஸ்டோஸினில் 41,000 ஆண்டுகள் பனியுறைவு சுழற்சிகள் இரண்டு காலநிலைகளுக்கு இடையில் மட்டுமே தாவிச்செல்ல காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த செயல்முறையை விளக்கும் ஒரு வலுவான மாதிரி பீட்டர் டிட்லெவ்ஸன் என்பவரால் முன்மொழியப்பட்டிருக்கிறது [7]. பிற்காலத்தைய 100,000 ஆண்டுகள் ஒழுங்கற்ற சுழற்சியின் பலவீனத்தால் பிற்காலத்தைய பிளைஸ்டோஸின் பனியுறை சுழற்சிகள் ஏற்படவில்லை என்பதை இது குறிப்பிடுகிறது, ஆனால் நேர்கோடின்மை 41,000 வருட வீழ்நிலை சுழற்சிக்கு மட்டுமே பதிலுரைக்கிறது.

சூரியனின் ஆற்றல் வெளிப்பாட்டில் ஏற்படும் மாறுபாடுகள்

தொகு

சூரியனின் ஆற்றல் வெளிப்பாட்டில் இரண்டு வகையான மாறுபாடுகளாவது இருக்கின்றன:

  • நீண்ட காலகட்டத்தில், சூரியனின் ஆற்றல் வெளிப்பாடு ஒரு பில்லியன் (109) ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
  • சூரியப்பகுதி சுழற்சிகள் போன்ற குறுகியகால மாறுபாடுகள் மற்றும் நீண்ட மேண்டர் மினிமம் போன்றவை சிறிய பனி யுகத்தின் குளிர்ச்சியான பகுதிகளிலேயே ஏற்பட்டிருக்கின்றன.

சூரியனின் வெளிப்பாட்டிலான நீண்டகால அதிகரிப்பு பனி யுகங்களுக்கு காரணமாக அமைந்திருக்க முடியாது.

எரிமலையாக்கம்

தொகு

எரிமலை உமிழ்வுகள் பனி யுக காலகட்டங்களின் முடிவுக்கு காரணமாக அமைந்திருக்கலாம். பேலியோசின்-இயோசின் தெர்மல் மேக்ஸிமமின் விளக்கத்திற்கானதாக குறிப்பிடப்படும் ஒன்று கடலுக்கு அடியில் இருந்த எரிமலைகள் கிளாதேரேட்களில் இருந்து மீதேனை வெளியிட்டிருக்கலாம் என்பதும் அவ்வகையில் பசுமையில்ல விளைவில் பெரிய மற்றும் விரைவான அதிகரிப்பிற்கு காரணமாகியிருக்கலாம் என்பதுமே ஆகும். இதுபோன்ற உமிழ்வுகளுக்கு சரியான நேரத்தில் புவியியல் ஆதாரங்கள் கிடைக்காததுபோல் தோன்றுகிறது, ஆனால் இது இவை நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அல்ல.

சமீபத்திய பனியுறைவு மற்றும் மித பனியுறைவு பகுதிகள்

தொகு
 
கடைசி பனி யுகங்களின்போது வடக்கு அரைக்கோள பனியுறைவு.மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரையிலான கெட்டியான பனிப் படலங்கள் கடல் மட்டம் 120 மீட்டர் அளவு தாழ்வுறுவதற்கு காரணமாகிறது.

வட அமெரிக்காவில் பனி உறைவு நிலைகள்

தொகு

வட அமெரிக்காவில் உள்ள தற்போதைய பனி யுகத்தின் முக்கியமான பனி உறைவு நிலைகளாக இலினோயன், சங்கமோனியன் மற்றும் விஸ்கான்சின் நிலைகள் இருக்கின்றன. வட அமெரிக்க பனி யுகத்தை மேலும் பிரிப்பதற்கான நெப்ராஸ்கான், ஆஃப்டான், கன்சான் மற்றும் யார்மெதியன் (யார்மோத்) நிலைகளின் பயன்பாடு குவாடர்னரி புவியியலாளர்கள் மற்றும் ஜியோமார்பாலஜிஸ்டுகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுகளில் முன்-இலினோயன் நிலையோடு இணைக்கப்பட்டன.[43][44][45]

மிகச்சமீபத்திய வட அமெரிக்க பனியுறைவின்போது, விஸ்கான்சின் நிலையின் (26,000 இல் இருந்து 13,300 ஆண்டுகளுக்கு முன்பு) பிற்காலத்தின்போது பனிப் படலங்கள் ஏறத்தாழ 45 பாகைகள் வடக்கு பூமத்திய ரேகை வரை நீண்டிருந்தன. இந்தப் படலங்கள் 3 முதல் 4 கிமீ வரை கெட்டியானவை.[44]

இந்த விஸ்கான்சின் பனியுறைவு வட அமெரிக்க நிலவமைப்பில் பரவலான தாக்கத்தை விட்டுச்சென்றிருக்கிறது. பெரிய ஏரிகள் மற்றும் விரல் ஏரிகள் ஆகியவை பழம் பள்ளத்தாக்குகளில் பனி ஆழமடைந்ததால் குடையப்பட்டிருக்கின்றன. மினோசட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகியவற்றில் உள்ள பெரும்பாலான ஏரிகள் பனிப்படலங்களால் வெட்டப்பட்டிருக்கின்றன என்பதோடு பின்னாளில் பனிப்படலங்கள் உருகிய தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இந்த பழைய தீயேஸ் ஆறு கழிவுநீர்ப் போக்கு அமைப்பு பழம் முறையில் மாற்றியமைக்கப்பட்டு பெருமளவிற்கு ஓஹியோ ஆறு கழிவுநீர்ப் போக்கு அமைப்போடு மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற ஆறுகள் அணைகட்டப்பட்டு புதிய கால்வாய்களில் மாற்றிவிடப்பட்டிருக்கின்றன, அதாவது நீரோட்டம் சுண்ணாம்புக்கல் முகடுகளை எதிர்கொள்ளும்போது பெரும் நீர்வீழ்ச்சியையும் மலை முகடுகளையும் உருவாக்குகின்ற நயகரா போன்று. நியூயார்க், சைராகஸ் அருகில் கிளார்க் ரிசர்வேஷன் ஸ்டேட் பார்க்கில் இருந்த இதேபோன்ற மற்றொரு நீர்வீழ்ச்சி தற்போது வறண்டுபோய்விட்டது.

லாங் ஐலேண்டிலிருந்து நாண்டக்கெட் வரையிலான பகுதி பனிக்கட்டி மண்ணிலிருந்து உருவாகியிருக்கிறது, வடக்கு கனடாவில் உள்ள கனடியன் ஷீல்டில் உள்ள பிலிதோரா ஏரிகள் முற்றிலும் பனிக்கட்டியின் செயல்பாட்டினால் உருவாகியிருக்கின்றன. பனிக்கட்டி மீண்டும் கூடி பாறைத் தூசு உலர்கையில் காற்று இந்தப் பொருட்களை நூற்றுக்கணக்கணக்கான மைல்களுக்கு கொண்டுசென்று மிஸோரி பள்ளத்தாக்கில் பல டஜன் அடிகள் கெட்டியான உலர்மண் படுகைகளை உருவாக்கியிருக்கிறது. பனிக்கட்டி அழுத்தம் பெரிய ஏரிகளையும் பனிப் படுகைகளின் எடைக்குக் கீழேயுள்ள பிற பகுதிகளையும் தொடர்ந்து மறுவடிவமாக்கியிருக்கிறது.

அடித்துச்செல்லப்படாத மண்டலமான மினோசெட்டா, ஐயோவா மற்றும் இலினாய்ஸ் ஆகியவற்றோடு இணைந்த மேற்கத்திய மற்றும் தென்மேற்கு விஸ்கான்சின் பகுதி பனிப்படலங்களால் சூழப்படவில்லை.

பனிப்படலமாதலின் விளைவுகள்

தொகு
 
கடல் கழிமுகங்கள் மற்றும் ஏரிகள் போன்ற பனி யுக உறைவின் விளைவுகளை ஸ்காண்டிநேவியா காட்டுகிறது.

கடைசி பனிப்படல காலகட்டம் 8,000 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுற்றது என்றாலும் அதனுடைய விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. உதாரணத்திற்கு, கனடா (பார்க்க கனடிய ஆர்டிக் தீவுகள்), கிரீன்லாந்து, வடக்கு யூரோஷியா மற்றும் அண்டார்டிகா ஆகியவற்றில் நகரும் பனிக்கட்டி நிலவமைப்பை சுரண்டியிருக்கிறது. ஒழுங்கற்ற சுழல் பாறைகள், மண், மலைமுகடுகள், குடைவுகள், செங்குத்துப் பாறைகள், சிற்றேரிகள், பனிக்குவியல்கள் போன்றவை பனியுறைவுகளுக்கு பின்னால் மீதமிருப்பவையாகும்.

பனிப்படலங்களின் எடை அவை பூமியின் தட்டு மற்றும் மேலோட்டை வடிவமிழக்கச் செய்யும் அளவிற்கு அதிகமாக இருக்கிறது. பனிப்படலங்கள் உருகிய பின்னர் பனி மூடிய நிலம் மீண்டும் உருவாகிறது (பார்க்க பனியுறைவுக்குப் பிந்தைய மறு உருவாக்கம்). பூமியின் அதிக பசைத்தன்மையின் காரணமாக மறு உருவாக்க நிகழ்முறையைக் கட்டுப்படுத்தும் மேலோட்டுப் பாறைகளின் ஓட்டம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது - இது இன்றைய மறு உருவாக்கத்தின் மையத்திற்கு அருகாமையில் வருடத்திற்கு 1 செமீ என்ற வீதத்தில் இருக்கிறது.

பனியுறைவின்போது உயர் பூமத்திய ரேகைகளில் பனிக்கட்டியை உருவாக்க கடல்களிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு உலகளாவிய கடல் மட்டம் ஏறத்தாழ 120 மீட்டர்களுக்கு குறைந்து கண்டம் உயர்வதை வெளிக்காட்டவும் விலங்குகள் இடம்பெயர்வதற்காக நிலங்களுக்கு இடையில் நில-பாலங்களையும் உருவாக்குகிறது. பனி உருகலின்போது உருகிய பனிக்கட்டி தண்ணீர் கடல்களுக்குத் திரும்புகின்றன, இது கடல் மட்டம் உயர காரணமாகிறது. இந்த நிகழ்முறை கடற்கரைகள் மற்றும் நீருடன் கலக்கும் அமைப்புகளில் திடீர் மாற்றங்களுக்கு காரணமாவது புதிதாக இணைகின்ற, உருவாகின்ற நிலங்களுக்கும் காரணமாகின்றன, உடைந்த பனிக்கட்டி அணைகள் ஏரிகள் உப்புநீராவதற்கு காரணமாகின்றன, புதிய பனிக்கட்டி அணைகள் பரந்த அளவிலான நன்னீர் அமைப்புக்களை உருவாக்குகின்றன. இது தற்காலிக மறு பனியுறைவிற்கும் காரணமாகலாம். விரைவாக மாறிவரும் நிலம், பனிக்கட்டி, உப்புநீர் மற்றும் நன்னீரின் இந்த வகைப்பட்ட குழப்பமான அமைப்பு பால்டிக் மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதிகளுக்கான மாதிரியாக இருக்கலாம் என்று கூறப்படுவதோடு வரலாற்றுக்கு முந்தைய கடைசி ஒருசில ஆயிரம் ஆண்டுகளில் மட்டுமே அடையப்பெற்றிருக்கும் இன்றுள்ள கடற்கரைகளோடு கடைசி பனியுறைவின் முடிவில் மத்திய வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் ஸ்காண்டிநேவியா உயர்ந்ததன் விளைவாக தற்போது வடக்குக் கடலின் அடியில் இருக்கின்ற பெரும் கண்டச் சமவெளி மூழ்கடிக்கப்பட்டது, இது ஐரோப்பா கண்டத்தோடு பிரித்தானிய தீவுகளை இணைக்கிறது.

புவியின் மேற்பகுதியில் பனி-நீரின் மறுபகிர்வு மற்றும் மூடகப் பாறைகளின் ஓட்டம் ஆகியவை ஈர்ப்புவிசைத் தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் புவியின் சுழற்சி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சுழற்சி முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கோண விசை, அச்சு மற்றும் புவியின் சுழற்சியினுடைய அதிர்வில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாகிறது (பார்க்க பின்-பனியுறைவு மறுபிணைப்பு). லித்தோஸ்பியரில் ஏற்றப்பட்டிருக்கும் மறுபகிர்மான மேற்பரப்பு அடர்த்தியின் எடை வளைவதற்கு காரணமானதுடன் புவிக்குள்ளான அழுத்தத்தையும் தூண்டியது. பனியுறைவுகள் இருப்பது பொதுவாகவே கீழேவுள்ள பிழைகளின் இயக்கத்தை அமுக்கச் செய்கிறது (ஜான்சன் 1989, வு & ஹசேவா 1996, டர்பினன் மற்றும் சிலர். 2008). இருப்பினும், பனி உருகலின்போது பலவீனங்கள் துரிதப்படுத்தப்பட்ட சரிவை எதிர்கொள்வதோடு பூகம்பங்களும் தூண்டப்படுகின்றன (பின்-பனியுறைவு மறுபிணைப்பு). பனி விளிம்புகளுக்கு அருகாமையில் தூண்டப்படும் பூகம்பங்கள் அடுத்தபடியாக பனி உடைவைத் துரிதப்படுத்துகிறது என்பதுடன் இது ஹென்ரிச் நிகழ்வுகளுக்கும் காரணமாக அமையலாம் (ஹண்ட் & மலின் 1998). பனி விளிம்புகளுக்கு அருகாமையில் அதிக பனிக்கட்டி நீக்கப்படுவது, மிகவும் உள்ளடுக்கிலான பூகம்பங்கள் தூண்டப்படுகின்றன, இந்த நேர்மறைப் பின்னூட்டம் பனி உறைவுகள் வேகமாக சிதைந்துபோவதற்கான விளக்கமான இருக்கலாம்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. J. Imbrie and K.P.Imbrie, Ice Ages: Solving the Mystery (Short Hills NJ: Enslow Publishers) 1979.
  2. J. Gribbin, Future weather (New York: Penguin) 1982.
  3. Rémis, Frédéric et Testus, Laurent "Mais comment s’écoule donc un glacier ? Aperçu historique ". C. R. Geoscience 338 (2006) and republished online by Science direct. pp. 368–385. Accessed 22 June 2009. Note: p.374
  4. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte [The Discovery of the Ice Ages. International Reception and Consequences for the Understanding of climate history], Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 69.
  5. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 106 et seqq.
  6. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 189
  7. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 111 and 189.
  8. Goethe, Johann Wolfgang von: Geologische Probleme und Versuch ihrer Auflösung, Mineralogie und Geologie in Goethes Werke, Weimar 1892, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-423-05946-X, book 73 (WA II,9), p. 253, 254.
  9. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 111.
  10. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 59.
  11. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 84 and 86.
  12. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 118-119.
  13. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 121 et seqq.
  14. Davies, Gordon L.: The Earth in Decay. A History of British Geomorphology 1578-1878, London 1969, p. 267f. Cunningham, Frank F.: Forbes, James David Forbes. Pioneer Scottish Glaciologist, Edinburgh 1990, p. 15.
  15. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 179 et seqq.
  16. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 136-137.
  17. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 188-191.
  18. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 194-196.
  19. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 207-210.
  20. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 213.
  21. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 216-217.
  22. Agassiz, Louis: Etudes sur les glaciers. Ouvrage accompagné d'un atlas de 32 planches, Neuchâtel, 1840.
  23. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 223-224. De Charpentier, Jean: Essais sur les glaciers et sur le terrain erratique du bassin du Rhône, Lausanne 1841.
  24. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 220-223.
  25. Krüger, Tobias: Die Entdeckung der Eiszeiten. Internationale Rezeption und Konsequenzen für das Verständnis der Klimageschichte, Basel 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2439-4, p. 540-542.
  26. How are past temperatures determined from an ice core?, Scientific American, September 20, 2004
  27. Neoproterozoic 'snowball Earth' simulations with a coupled climate/ice-sheet model.
  28. "Cryogenian Snowballs". Archived from the original on 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
  29. EPICA community members (2004-06-10). "Eight glacial cycles from an Antarctic ice core" (PDF). Nature 429: 623. doi:10.1038/nature02599 இம் மூலத்தில் இருந்து 2008-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080408210651/http://www.up.ethz.ch/people/flueckiger/publications/epica04nat.pdf. பார்த்த நாள்: 2010-06-03. 
  30. "CLIMATE: An Exceptionally Long Interglacial Ahead?". Science. 2002. பார்க்கப்பட்ட நாள் 2007-03-11.
  31. "Next Ice Age Delayed By Rising Carbon Dioxide Levels". ScienceDaily. 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.
  32. Did Early Climate Impact Divert a New Glacial Age? Newswise, Retrieved on December 17, 2008.
  33. Ewing, Maurice and William L. Donn. 1956. A Theory of Ice Ages.[தொடர்பிழந்த இணைப்பு] Science 123:1061-6, Retrieved on 2009-02-24
  34. Ruddiman, W.F. and J.E. Kutzbach. 1991. Plateau Uplift and Climate Change. Scientific American 271:62-68.
  35. 35.0 35.1 Raymo, M.E., W.F. Ruddiman, and P.N. Froelich (1988) Influence of late Cenozoic mountain building on ocean geochemical cycles. Geology, v. 16, p. 649-653.
  36. Clark, Peter U.; Dyke, Arthur S.; Shakun, Jeremy D.; Carlson, Anders E.; Clark, Jorie; Wohlfarth, Barbara; Mitrovica, Jerry X.; Hostetler, Steven W.; McCabe, A. Marshall (2009), "The Last Glacial Maximum", Science, 325 (5941): 710–714, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.1172873 {{citation}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  37. Ruddiman, William F. (2003). "The Anthropogenic Greenhouse Era Began Thousands of Years Ago". Climatic Change 61 (3): 261–293. doi:10.1023/B:CLIM.0000004577.17928.fa இம் மூலத்தில் இருந்து 2005-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051106022751/http://earth.geology.yale.edu/~avf5/teaching/Files_pdf/Ruddiman2003.pdf. பார்த்த நாள்: 2010-06-03. 
  38. We are all Panamanians பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம் - formation of Isthmus of Panama may have started a series of climatic changes that led to evolution of hominids
  39. Hu, Aixue; Gerald Meehl, Bette L. Otto-Bliesner, Claire Waelbroeck, Weiqing Han, Marie-France Loutre, Kurt Lambeck, Jerry X. Mitrovica & Nan Rosenbloom (Published online 10 January 2010). "Influence of Bering Strait flow and North Atlantic circulation on glacial sea-level changes". Nature Geoscience. doi:10.1038/ngeo729. 
  40. Kuhle, M.(1988): The Pleistocene Glaciation of Tibet and the Onset of Ice Ages- An Autocycle Hypothesis. GeoJournal 17 (4, Tibet and High-Asia. Results of the Sino-German Joint Expeditions (I), 581-596.
  41. Kuhle, M. (2004): The High Glacial (Last Ice Age and LGM) ice cover in High and Central Asia. Development in Quaternary Science 2c (Quaternary Glaciation - Extent and Chronology, Part III: South America, ஆசியா, Africa, Australia, Antarctica, Eds: Ehlers, J.; Gibbard, P.L.), 175-199. (Elsevier B.V., Amsterdam)
  42. Kuhle, M. (1999): Reconstruction of an approximately complete Quaternary Tibetan inland glaciation between the Mt. Everest- and Cho Oyu Massifs and the Aksai Chin. A new glaciogeomorphological SE–NW diagonal profile through Tibet and its consequences for the glacial isostasy and Ice Age cycle. In: GeoJournal 47 (1-2), (Results of Investigations into High Mountain Geomorphology, Paleo-Glaciology and Climato­logy of the Pleistocene), Tibet and High Asia (V). Kuhle, M. (ed.); Kluwer, Dordrecht/ Boston/ London: 3-276.
  43. Hallberg, G.R., 1986, Pre-Wisconsin glacial stratigraphy of the Central Plains region in Iowa, Nebraska, Kansas, and Missouri. Quaternary Science Reviews. vol. 5, pp. 11-15.
  44. 44.0 44.1 Richmond, G.M. and D.S. Fullerton, 1986, Summation of Quaternary glaciations in the United States of America. Quaternary Science Reviews. vol. 5, pp. 183-196.
  45. Gibbard, P.L., S. Boreham, K.M. Cohen and A. Moscariello, 2007, Global chronostratigraphical correlation table for the last 2.7 million years v. 2007b. , jpg version 844 KB. Subcommission on Quaternary Stratigraphy, Department of Geography, University of Cambridge, Cambridge, England

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ice age
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_யுகம்&oldid=3925336" இலிருந்து மீள்விக்கப்பட்டது