முன்னிலை (இலக்கணம்)
(முன்னிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் யாரை விழித்துப் பேசுகிறாரோ, அவரை அல்லது அவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் முன்னிலை என்பதனுள் அடங்கும்.
பெயர்ச் சொற்கள்
தொகுதமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன முன்னிலைச் சொற்களாகும்.
வேற்றுமை உருபேற்றம்
தொகுவேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.
வேற்றுமை | உருபு | சொல் | |||
---|---|---|---|---|---|
1 | - | நீ | நீர் | நீங்கள் | |
2 | ஐ | உன்னை | உம்மை | உங்களை | |
3 | ஆல் | உன்னால் | உம்மால் | உங்களால் | |
4 | கு | உனக்கு | உமக்கு | உங்களுக்கு | |
5 | இன் | உன்னின் | உம்மின் | உங்களின் | |
6 | அது | உனது | உமது | உங்களது |
வினைச் சொற்கள்
தொகுதமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் முன்னிலை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- | இறந்த காலம் | நிகழ் காலம் | எதிர் காலம் |
---|---|---|---|
ஒருமை | செய்தாய் | செய்கிறாய் | செய்வாய் |
பன்மை | செய்தீர் | செய்கிறீர் | செய்வீர் |
(மரியாதை) |
செய்தீர்கள் | செய்கிறீர்கள் | செய்வீர்கள் |