மொங்கோலிய எழுத்துமுறை

இலக்கிய நய அல்லது பாரம்பரிய மொங்கோலிய எழுத்துமுறை (மொங்கோலிய எழுத்துமுறையில்: ᠮᠣᠩᠭᠣᠯ ᠪᠢᠴᠢᠭ மங்யோல் பிசிக்; மங்கோலிய சிரில்லிக்கில்: Монгол бичиг மங்கோல் பிசிக்) என்பது மொங்கோலிய மொழிக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட எழுத்துமுறையாகும். இது ஹுடும் மங்கோல் பிசிக் என்றும் அழைக்கப்படுகிறது. 1946ல் சிரில்லிக் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்ட வரை இதுவே பயன்பாட்டில் இருந்தது. இது பழைய உய்குர் எழுத்துமுறையில் இருந்து உருவாக்கப்பட்டது.[1] இந்த எழுத்துமுறை ஒயிரடு மற்றும் மஞ்சூ மொழிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை மொங்கோலியம், சிபே மற்றும் ஆய்வுரீதியாக எவங்கி மொழிகளை எழுத சீனாவின் உள் மங்கோலியா மற்றும் பிற பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 

எழுத்துக்கள்

தொகு
 
மங்கோலிய எழுத்தில் "மங்கோல்" எழுதப்பட்டுள்ளது: 1.பாரம்பரியம், 2.மடிக்கப்பட்டது, 3. பக்ஸ்-பா, 4. டோடோ, 5.மஞ்சூ, 6.சோயோம்போ, 7. கிடைமட்டம், 8. சிரில்லிக்
 
உள் மங்கோலியாவின் தலைநகரான கோகோட்டில் ஒரு கே.எப்.சி., சீன, மங்கோலிய மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரு மும்மொழி பெயர்ப் பலகையுடன்

உதாரணங்கள்

தொகு
 
செங்கிஸ் கான் என்பது மங்கோலிய எழுத்துமுறையில்
 
மங்கோலிய மக்கள் குடியரசு

உசாத்துணை

தொகு
  1. Campbell, George L. (1997). Handbook of Scripts and Alphabets (in ஆங்கிலம்). Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415183444.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mongolian script
என்பதில் ஊடகங்கள் உள்ளன.