லிண்டா லவ்லேஸ்
லிண்டா லவ்லேஸ் (சனவரி 10, 1949 – ஏப்ரல் 22, 2002) என்ற திரைப்பெயரால் அறியப்படும் லிண்டா சுசன் போர்மன் ஒரு போர்னோகிராபி நடிகை. டீப் துறோட் (1972) என்ற போர்னோகிராபித் திரைப்படம் மூலம் பிரபலமானவர். பின்னாளில் போர்னோகிராபிக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.[1]
லிண்டா சூசன் | |
---|---|
பிறப்பு | லிண்டா சூசன் போரேமன் சனவரி 10, 1949 Bronx, New York, U.S. |
இறப்பு | ஏப்ரல் 22, 2002 Denver, Colorado, U.S. | (அகவை 53)
வேறு பெயர்(கள்) | Linda Lovelace |
உயரம் | 5 அடி 8 அங் (1.73 m) |
கண் நிறம் | Brown |
தலைமயிர் நிறம் | Brunette |
இனம் | Caucasian |
வயது வந்தோர் படங்கள் | 12 |
1980 இல் போர்னொகிராபிக்கு எதிரான பெண்ணிய இயக்கத்தில் இணைந்தார். 1986 இல் நீங்கள் டீப் துறோட் திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதைப் பார்க்கிறீர்கள் என வாக்குமூலம் அளித்தார். இவரைப் பற்றி 5 வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன.[1]
2002 ஏப்ரல் 3 இல் இவரது கார் தடம்புரண்டதில் கடும் காயங்களுக்குள்ளாகி சில வாரங்களில் காலமானார்.[2]
"டீப் துறோட்" என்ற திரைப்படம் போர்னோகிராபி வரலாற்றிலேயே மிக செல்வாக்கு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். "டீப் துறோட்" என்பது ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Linda Lovelace - Death, Movies & Career". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
- ↑ Langton, James (2012-04-12). "Linda Lovelace dies after crash". Evening Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.