வடக்கு
வடக்கு(North) என்பது நான்கு திசைகளில் ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையான கிழக்குத் திசையை நோக்கி நிற்பவருக்கு இடது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும்.
நிலப்படம் குறித்தல்
தொகுவழக்கமாக, எப்போதும் நிலப்படங்களை வரையும்போது அதன் மேற்பகுதியானது வடக்குத் திசையாக இருக்கும்படி வரைவதே வழக்கம். குறிப்பாக வடக்குத் திசையானது, மேற்கத்தைய கலாச்சாரத்தின் படி அடிப்படை அல்லது நியம திசையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்குத் திசையானது (வெளிப்படையாக அல்லது மறைமுகமாக) மற்றைய அனைத்துத் திசைகளையும் வரையறுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
காந்த வடக்கு
தொகுசரியாகச் செயற்படும் காந்தத் திசையறி கருவி காட்டும் வடக்குத் திசையே காந்த வடக்கு ஆகும். காந்த வடக்கு உண்மை வடக்கில் இருந்து சற்று விலகியுள்ளது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு காந்த விலக்கம் எனப்படுகிறது. பெரும்பாலான நடைமுறைத் தேவைகளுக்கு இந்த வேறுபாடு கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், துல்லியமான திசை தேவைப்படும் இடங்களில் இந்த வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
திசைகள் |
---|
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு |