வீ. செல்வராஜ்
வீ. செல்வராஜ் (பிறப்பு: மே 16 1935, இறப்பு: மே 31 2000, மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மலேசியா எழுத்தாளர்களுக்காக பல நல்ல காரியங்களைச் செய்தவராக இனங்காட்டப்படுகின்றார். யாராவது புத்தகங்கள் வெளியிட்டால், உடனை தொடர்பு கொண்டு பாரி புத்தக விற்பனை மையத்துக்கு இருபது புத்தகங்களை பெற்றுக்கொள்வார். தேசிய நூலகத்துக்கு ஐந்து புத்தகங்கள், மலாயா பல்கலைக்கழகத்திற்குப் பத்துப் புத்தகங்கள் கொடுக்க ஏற்பாடு செய்வார்.
புத்தக வெளியீடு
தொகுவீ. செல்வராஜ் பதினேழு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவற்றில், ஆறு புத்தகங்கள், 1988- 1998 ஆம் ஆண்டுவரை, அந்தந்த ஆண்டுகளில் பிற எழுத்தாளர்கள் எழுதிய மிகச் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, டாக்டர். இரா. தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவையின் கீழ் 'மலேசியத் தமிழ் இலக்கியம்' என்ற நூலாக்கி வெளியிட்டிருக்கிறார். இதில் சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், நாவல்கள் இடம் பெற்றுள்ளன.
சிறந்த படைப்புகள்
தொகுஒவ்வொரு ஆண்டும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் வெளியாகும் படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை 'மலேசியத் தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் தனது சொந்த செலவில் தொகுத்து கடந்த பத்து ஆண்டுகளாக சீரிய முறையில் தமிழ்த்தொண்டாக செய்து வந்திருக்கின்றார்.
வெளியிடப்பட்ட நூல்கள்
தொகு- சில உண்மைகள்
- ஓர் இலட்சியவாதி ஓர் அரசியல்வாதி
- நின்றதுபோல் நின்றனையே நெடுந்தூரம் சென்றனையே
- திருக்கோயில் வழிபாடு
- கருவைத்தேடி
- ஒரு வித்தியாசமான பார்வை
- மகாபாரத மணித்துளிகள்
- மலேசியத் தமிழ் இலக்கியம் 1988
- மலேசியத் தமிழ் இலக்கியம் 1989/90
- மலேசியத் தமிழ் இலக்கியம் 1991/92
- மலேசியத் தமிழ் இலக்கியம் 1993/94
- மலேசியத் தமிழ் இலக்கியம் 1995/96
- ஞானவித்து
- தனியொருவன்
- ஒரு பத்திரிக்கையாளனின் பார்வையில்
- பிரதமர் ஆடினால்.
- மலேசியத்தமிழ் இலக்கியம் 1999 (அவரது இறுதி முயற்சி)