வே. அகிலேசபிள்ளை
அறிஞர், புலவர் மற்றும் எழுத்தாளர்
வே. அகிலேசபிள்ளை (V. Akilesapillai, 7 மார்ச்சு 1853 – 1 சனவரி 1910), தமிழறிஞரும், ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.
வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளை | |
---|---|
பிறப்பு | திருகோணமலை, இலங்கை | 7 மார்ச்சு 1853
இறப்பு | சனவரி 1, 1910 | (அகவை 56)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | பதிப்பாளர், உரையாசிரியர், புலவர் |
பெற்றோர் | வேலுப்பிள்ளை |
பிள்ளைகள் | இராசக்கோன், அழகக்கோன் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.
இயற்றிய நூல்கள்
தொகு- திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல்
- திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல்
- திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல்
- நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல்
- திருக்கோணைநாயகர் பதிகம்
- திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம்
- திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923)
- வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல் (1887)
- வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை முதலியன.
- திருக்கோணாசல வைபவம் (1950)
பதிப்பித்த நூல்கள்
தொகு- திருக்கரசைப் புராணம் (1890)
- வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1906)
- நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து (1908)
உசாத்துணைகள்
தொகு- பூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக் களஞ்சியம், 1990, கொழும்பு
- சதாசிவம் ஆறுமுகம், Dictionary of biography of the Tamils of Ceylon, 1997