1வது வட மாகாண சபை
1வது வட மாகாண சபை (1st Northern Provincial Council) என்பது 2013 செப்தெம்பர் 21 இல் நடைபெற்ற 2013 மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இலங்கையின் வட மாகாண சபையின் அமர்வுகளைப் பற்றியது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாகாணசபை ஒன்றின் ஆட்சிக் காலம் அதன் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டு காலம் ஆகும். இச்சபையின் முதலாவது அமர்வு 2013 அக்டோபர் 25 ஆம் நாள் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள புதிய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது.[1] சி. வி. கே. சிவஞானம், அன்ரன் ஜெயநாதன் ஆகியோர் சபைத் தலைவராகவும், பிரதித் தலைவராகவும் போட்டியின்றி முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2][3][4]
1வது வட மாகாண சபை → | |
---|---|
தலைவர்கள் | |
தலைவர் (தவிசாளர்) | சி. வி. கே. சிவஞானம், ததேகூ (2013-) |
பிரதித் தலைவர் | அந்தனி ஜெயநாதன், ததேகூ (2013-) |
முதலமைச்சர் | க. வி. விக்னேஸ்வரன், ததேகூ (2013-) |
எதிர்க்கட்சித் தலைவர் | சின்னத்துரை தவராசா, ஐமசுகூ (2014-) |
முக்கிய நாட்கள் | |
நியமனப் பத்திரம் தாக்கல் | 25 யூலை 2013 - 1 ஆகத்து 2013 |
தேர்தல் | 21 செப்தெம்பர் 2013 |
முதல் கூட்டம் | 25 அக்டோபர் 2013 |
இடம் | கைதடி, யாழ்ப்பாணம் |
அமர்வுகள் | |
1: 25 அக்டோபர், 2013 – | |
np.gov.lk |
தேர்தல்
தொகு1வது வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்தெம்பர் 2013 இல் நடைபெற்றது. பொதுவாக இலங்கைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பாணம், வன்னி என இரண்டு தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை முதற்தடவையாக வட மாகாணத்தின் ஐந்து நிருவாக மாவட்டங்களும் ஐந்து தேர்தல் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன. தேசிய மட்டத்தில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இலங்கைத் தமிழர்களை முக்கியமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைப்பில் தேர்தலில் நின்றது. மொத்தமுள்ள 36 இடங்களில் ததேகூ 28 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[5] ஐமசுகூ 7 இடங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றின.[5] ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன.
முடிவுகள்
தொகுகூட்டணி | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 353,595 | 78.48% | 30 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[6][7] | 82,838 | 18.38% | 7 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[7] | 6,761 | 1.50% | 1 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 3,062 | 0.68% | 0 | |
சுயேட்சைக் குழுக்கள் | 1,904 | 0.42% | 0 | |
சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு | 826 | 0.18% | 0 | |
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் | 300 | 0.07% | 0 | |
இலங்கை மக்கள் கட்சி | 292 | 0.06% | 0 | |
மக்கள் விடுதலை முன்னணி | 288 | 0.06% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 188 | 0.04% | 0 | |
சனநாயகக் கட்சி | 170 | 0.04% | 0 | |
சோசலிச சமத்துவக் கட்சி | 101 | 0.02% | 0 | |
ஜன செத்த பெரமுன | 90 | 0.02% | 0 | |
நமது தேசிய முன்னணி | 87 | 0.02% | 0 | |
இலங்கை தொழிற் கட்சி | 32 | 0.01% | 0 | |
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை | 15 | 0.00% | 0 | |
தேசிய ஐக்கிய அமைப்பு | 14 | 0.00% | 0 | |
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி | 8 | 0.00% | 0 | |
முசுலிம் விடுதலை முன்னணி | 3 | 0.00% | 0 | |
மொத்தம் | 450,574 | 100.00% | 38 | |
நிராகரிக்கப்பட்டவை | 35,239 | |||
மொத்த வாக்குகள் | 485,813 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 719,477 | |||
வாக்குவீதம் | 67.52% |
அரசு/அமைச்சர்கள்
தொகு1வது வட மாகாண சபையின் அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு:
- சபையின் தலைவர் (தவிசாளர்): சி. வி. கே. சிவஞானம்; (இ.த.அ.க, யாழ்ப்பாணம்)
- சபையின் பிரதித் தலைவர்: அன்ரன் ஜெயநாதன், (இ.த.அ.க, முல்லைத்தீவு)
அமைச்சரவை
தொகுவட மாகாண சபையின் அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட ஆகக்கூடியது ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். வட மாகாண சபைக்கு 2013 இல் நடைபெற்ற தேர்தல் வரையில் அமைச்சரவை இருக்கவில்லை.
முதலமைச்சர்
தொகுமுதலாவது வட மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் 2013 செப்தெம்பர் 23 இல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.[8] விக்னேசுவரன் 2013 அக்டோபர் 1 இல் ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.[9][10][11] இவர் பின்னர் 2013 அக்டோபர் 7 இல் முதலமைச்சராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.[12][13][14]
அமைச்சர்கள்
தொகு1வது அமைச்சரவைக்கு 2013 அக்டோபர் 10 ஆம் நாள் பின்வரும் நான்கு அமைச்சர்கள் முதலமைச்சரினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்டோபர் 11 இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.[15][16]
- வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்: பொ. ஐங்கரநேசன் ஈபிஆர்எல்எஃப், யாழ்ப்பாணம்)
- கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சர்: த. குருகுலராஜா (இ.த.அ.க, கிளிநொச்சி)
- சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர்: மரு. ப. சத்தியலிங்கம் (இ.த.அ.க, வவுனியா)
- மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்: பா. டெனீஸ்வரன் (ரெலோ, மன்னார்)
இவற்றை விட வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும்.[17]
உறுப்பினர்கள்
தொகுயாழ்ப்பாண மாவட்டம்
தொகுபெயர் |
தேர்தல் மாவட்டம் |
விருப்பு வாக்குகள் |
பதவியேற்ற நாள் |
வரை |
தெரிவு செய்த கட்சி |
தெரிவு செய்த கூட்டணி |
தற்போதைய கட்சி |
தற்போதைய கூட்டணி |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
சி. வி. விக்னேஸ்வரன் | யாழ் | 1,32,255 | 2013-10-07 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | முதலமைச்சர் |
அனந்தி சசிதரன் | யாழ் | 87,870 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
தர்மலிங்கம் சித்தார்த்தன் | யாழ் | 39,715 | 2013-09-21 | 2015-08-17 | புளொட் | ததேகூ | புளொட் | ததேகூ | 2015 தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18] |
இம்மானுவேல் ஆனல்ட் | யாழ் | 26,888 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
சி. வி. கே. சிவஞானம் | யாழ் | 26,747 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | அவைத் தலைவர் (தவிசாளர்) |
பாலச்சந்திரன் கஜதீபன் | யாழ் | 23,669 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
எம். கே. சிவாஜிலிங்கம் | யாழ் | 22,660 | 2013-09-21 | - | ரெலோ | ததேகூ | ரெலோ | ததேகூ | |
பொ. ஐங்கரநேசன் | யாழ் | 22,268 | 2013-10-11 | - | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் |
சந்திரலிங்கம் சுகிர்தன் | யாழ் | 20,541 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
கேசவன் சயந்தன் | யாழ் | 20,179 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
விந்தன் கனகரத்தினம் | யாழ் | 16,463 | 2013-09-21 | - | டெலோ | ததேகூ | டெலோ | ததேகூ | |
அரியகுட்டி பரஞ்சோதி | யாழ் | 16,359 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
கந்தையா சர்வேஸ்வரன் | யாழ் | 14,761 | 2013-09-21 | - | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | |
வேலுப்பிள்ளை சிவயோகன் | யாழ் | 13,479 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
கந்தசாமி கமலேந்திரன் | யாழ் | 13,632 | 2013-10-17 | மார்ச்சு 2014 | ஈபிடிபி | ஐமசுகூ | ஈபிடிபி | ஐமசுகூ | மார்ச்சு 2014 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[19] |
அங்கஜன் இராமநாதன் | யாழ் | 10,031 | 2013-10-17 | 2015-08-17 | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | 2015 தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18] |
சின்னத்துரை தவராஜா | யாழ் | - | 2014-04-23 | - | ஈபிடிபி | ஐமசுகூ | ஈபிடிபி | ஐமசுகூ | கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டதை அடுத்து இவர் தெரிவானார்.[20] |
கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் | யாழ் | 2015-09-18 | - | - | ததேகூ | - | ததேகூ | த. சித்தார்த்தன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டார்.[21] | |
சிறீ ரங்கேஸ்வரன் | யாழ் | 2015-08-25 | - | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | அங்கஜன் இராமநாதன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டார். |
கிளிநொச்சி மாவட்டம்
தொகுபெயர் |
தேர்தல் மாவட்டம் |
விருப்பு வாக்குகள் |
பதவியேற்ற நாள் |
வரை |
தெரிவு செய்த கட்சி |
தெரிவு செய்த கூட்டணி |
தற்போதைய கட்சி |
தற்போதைய கூட்டணி |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
பசுபதி அரியரத்தினம் | கிளிநொச்சி | 27,264 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
தம்பிராஜா குருகுலராஜா | கிளிநொச்சி | 26,427 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சர் |
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை | கிளிநொச்சி | 26,132 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
வை. தவநாதன் | கிளிநொச்சி | 3,753 | 2013-10-17 | - | ஈபிடிபி | ஐமசுகூ | ஈபிடிபி | ஐமசுகூ |
முல்லைத்தீவு மாவட்டம்
தொகுபெயர் |
தேர்தல் மாவட்டம் |
விருப்பு வாக்குகள் |
பதவியேற்ற நாள் |
வரை |
தெரிவு செய்த கட்சி |
தெரிவு செய்த கூட்டணி |
தற்போதைய கட்சி |
தற்போதைய கூட்டணி |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
மரியாம்பிள்ளை அந்தனி ஜெயநாதன் | முல்லைத்தீவு | 9,309 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | அவைப் பிரதித் தலைவர் |
சிவப்பிரகாசம் சிவமோகன் | முல்லைத்தீவு | 9,296 | 2013-10-14 | 2015-08-17 | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | 2015 தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18] |
துரைராஜா ரவிகரன் | முல்லைத்தீவு | 8,868 | 2013-10-14 | - | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | |
கனகசுந்தரசுவாமி வீரவாகு | முல்லைத்தீவு | 8,702 | 2013-10-11 | 2015-02-17 | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | 2015 பெப்ரவரி 17 இல் காலமானார்.[22] |
அகமது லெப்பை யாசின் ஜவாகிர் | முல்லைத்தீவு | 1,726 | 2013-10-17 | - | முஸ்லிம் காங்கிரசு | ஐமசுகூ | முஸ்லிம் காங்கிரசு | ஐமசுகூ | |
கந்தையா சிவனேசன் | முல்லைத்தீவு | - | 2015-05-01 | - | புளொட் | ததேகூ | புளொட் | ததேகூ | கனகசுந்தரசுவாமி வீரவாகு காலமானதை அடுத்து நியமிக்கப்பட்டார்.[23] |
வல்லிபுரம் கமலேஸ்வரன் | முல்லைத்தீவு | 2015-08-25 | - | - | ததேகூ | - | ததேகூ | சி. சிவமோகன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டார்.[21] |
வவுனியா மாவட்டம்
தொகுபெயர் |
தேர்தல் மாவட்டம் |
விருப்பு வாக்குகள் |
பதவியேற்ற நாள் |
வரை |
தெரிவு செய்த கட்சி |
தெரிவு செய்த கூட்டணி |
தற்போதைய கட்சி |
தற்போதைய கூட்டணி |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
பத்மநாதன் சத்தியலிங்கம் | வவுனியா | 19,656 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | சுகாதார அமைச்சர் |
க. தா. லிங்கநாதன் | வவுனியா | 11,901 | 2013-09-21 | - | புளொட் | ததேகூ | புளொட் | ததேகூ | |
ம. தியாகராசா | வவுனியா | 11,681 | 2013-10-16 | - | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | |
இராமநாதர் இந்திரராசா | வவுனியா | 11,535 | 2013-10-14 | - | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | |
தர்மபால செனிவிரத்தினா | வவுனியா | 5,148 | 2013-10-17 | - | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | |
ஏ. ஜெயதிலக்க | வவுனியா | 4,806 | 2013-10-17 | - | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ | சுதந்திரக் கட்சி | ஐமசுகூ |
மன்னார் மாவட்டம்
தொகுமன்னார் மாவட்டத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் விபரங்கள்:[24]
பெயர் |
தேர்தல் மாவட்டம் |
விருப்பு வாக்குகள் |
பதவியேற்ற நாள் |
வரை |
தெரிவு செய்த கட்சி |
தெரிவு செய்த கூட்டணி |
தற்போதைய கட்சி |
தற்போதைய கூட்டணி |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
பிரிமுஸ் சிராய்வா | மன்னார் | 12,927 | 2013-10-11 | - | தமிழரசுக் கட்சி | ததேகூ | தமிழரசுக் கட்சி | ததேகூ | |
டெனிசுவரன் பாலசுப்பிரமணியம் | மன்னார் | 12,827 | 2013-11-10 | - | ரெலோ | ததேகூ | ரெலோ | ததேகூ | மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் |
ஜி. குணசீலன் | மன்னார் | 12,260 | 2013-10-14 | - | ரெலோ | ததேகூ | ரெலோ | ததேகூ | |
றிப்கான் பதியுதீன் | மன்னார் | 11,130 | 2013-10-17 | - | அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் | ஐமசுகூ | அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் | ஐமசுகூ | |
கபிர் முகமது ரயீஸ் | மன்னார் | 3,165 | 2013-10-17 | - | முஸ்லிம் காங்கிரஸ் | முஸ்லிம் காங்கிரஸ் | முஸ்லிம் காங்கிரஸ் | முஸ்லிம் காங்கிரஸ் |
மேலதிக உறுப்பினர்கள்
தொகுதேர்தலில் ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன. இந்த இரண்டு இடங்ளில் ஒன்று ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கும், மற்றையது பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் ஒருவருக்கு அளிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.[25]
பெயர் |
தேர்தல் மாவட்டம் |
விருப்பு வாக்குகள் |
பதவியேற்ற நாள் |
வரை |
தெரிவு செய்த கட்சி |
தெரிவு செய்த கூட்டணி |
தற்போதைய கட்சி |
தற்போதைய கூட்டணி |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
அயூப் அஸ்மின் | மன்னார் | 1,009 | 2013-10-11 | - | நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு | ததேகூ | நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு | ததேகூ | |
மேரி கமலா குணசீலன் | முல்லைத்தீவு | 2013-10-11 | 2015-04-07 | தமிழர் விடுதலைக் கூட்டணி | ததேகூ | தமிழர் விடுதலைக் கூட்டணி | ததேகூ | ஒப்பந்தப்படி ஓராண்டிற்குப் பின்னர் பதவி விலகினார். | |
எம். பி. நடராஜ் | 2015-04-07 | - | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | ஈபிஆர்எல்எஃப் | ததேகூ | மேரி குணசீலனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். |
மேற்கோள்கள்
தொகு- ↑ Srinivasan, Meera (26 அக். 2013). "Sri Lanka Northern Council holds historic first session". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/sri-lanka-northern-council-holds-historic-first-session/article5273775.ece.
- ↑ "Inaugural Session of Northern Provincial Council held at Kaithady". வட மாகாண சபை. பார்க்கப்பட்ட நாள் 25 October 2013.
- ↑ Palakidnar, Ananth (26 October 2013). "Chandrasiri must go". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 29 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029035145/http://www.ceylontoday.lk/27-45852-news-detail-chandrasiri-must-go.html.
- ↑ "New Chairman of NPC". தி ஐலண்டு. 26 அக். 2013 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303235155/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=90872.
- ↑ 5.0 5.1 "Provincial Council Elections 2013 : Northern Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
- ↑ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
- ↑ 7.0 7.1 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சி மன்னார் மாவட்டத்தில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தும் போட்டியிட்டது
- ↑ முதலமைச்சர் பதவிக்குரியவராக விக்னேஸ்வரன் தேர்வு, பிபிசி, September 23, 2013
- ↑ "New Chief Minister appointed to Northern Provincial Council – 01 October 2013". வட மாகாண சபை. 1 October 2013.
- ↑ "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments &c., by the Governors NORTHERN PROVINCE PROVINCIAL COUNCIL Appointment made by the Governor of the Northern Province". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1831/01. 7 October 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Oct/1831_01/1831_01(E).pdf. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2013.
- ↑ "C.V. Vigneswaran receives appointment letter". Ceylon Today. 1 அக். 2013 இம் மூலத்தில் இருந்து 2015-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150610201601/http://www.ceylontoday.lk/16-43934-news-detail-cv-vigneswaran-receives-appointment-letter.html.
- ↑ "Wigneswaran takes oath as Northern Province CM". தி இந்து/Indo-Asian News Service. 9 October 2013. http://www.thehindu.com/news/international/south-asia/cm-wigneswaran-takes-oath-in-sri-lankas-northern-province/article5209907.ece.
- ↑ "Wigneswaran sworn-in as NPC CM". டெய்லிமிரர். 7 அக். 2013. http://www.dailymirror.lk/caption-story/36694-wigneswaran-sworn-in-as-ncp-cm.html.
- ↑ "Sri Lanka poll: Tamil minister Wigneswaran says 'peace possible'". பிபிசி. 7 அக். 2013. http://www.bbc.co.uk/news/world-asia-24179990.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக். 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக். 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.
- ↑ ஜனாதிபதி முன்னிலையில் சி.வி. அமைச்சராக சத்தியப்பிரமாணம், டெய்லிமிரர், அக்டோபர் 17, 2013
- ↑ 18.0 18.1 18.2 "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "ஐ.ம.சுதந்திர முன்னணியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்". தமிழ்வின். 11 மார்ச்சு 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "வடமாகாணசபை உறுப்பினராக தவராஜா பதவியேற்பு". தமிழ்மிரர். 23 April 2014.
- ↑ 21.0 21.1 "வட மாகாண சபையின் வெற்றிடத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்!". தமிழ்வின். 18 September 2015. Archived from the original on 2015-09-20. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
- ↑ "வட மாகாண சபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார்". 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்". தமிழ்வின். 1 மே 2015. Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2015.
- ↑ மன்னார் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், அத தெரண, செப்தெம்பர் 23, 2013
- ↑ பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு, பிபிசி, செப்தெம்பர் 29, 2013