1898
1898 (MDCCCXCVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1898 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1898 MDCCCXCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1929 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2651 |
அர்மீனிய நாட்காட்டி | 1347 ԹՎ ՌՅԽԷ |
சீன நாட்காட்டி | 4594-4595 |
எபிரேய நாட்காட்டி | 5657-5658 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1953-1954 1820-1821 4999-5000 |
இரானிய நாட்காட்டி | 1276-1277 |
இசுலாமிய நாட்காட்டி | 1315 – 1316 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 31 (明治31年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2148 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4231 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 15 - அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 25 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மேல் போரை அறிவித்தது.
- ஜூன் 12 - பிலிப்பைன்ஸ் ஸ்பெயின் இடமிருந்து விடுதலையை அறிவித்தது.
- ஜூலை 25 - ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ றிக்கோ நாட்டை ஆக்கிரமித்தது.
- செப்டம்பர் 10 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 24 - மக்லியொட் மருத்துவமனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.
- டிசம்பர் 10 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
- டிசம்பர் 26 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
தேதி அறியப்படாதவை
தொகு- பெப்ரவரி - தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறையொன்றை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி அதிபர் வண. டண் (Fr. Dunne) வெளியிட்டார்.
- ஏப்ரல் - சிலோன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்த ஜோன் காப்பர் (John Capper) இங்கிலாந்தில் 85வது வயதில் காலமானார்.
- தமிழ் வைத்திய விசாரணி இதழ் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 22 – தில்லையாடி வள்ளியம்மை, தென்னாப்பிரிக்க இந்திய வ்விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1914)
- மார்ச் 31 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
- ஏப்ரல் 10 – ஆபிரகாம் கோவூர், இந்திய-இலங்கைப் பகுத்தறிவாளர், உளவியலாளர் (இ. 1978)
- ஆகத்து 5 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)
இறப்புகள்
தொகு- பெப்ரவரி 5 – எம். சி. சித்திலெப்பை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1838)
- மே 13 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)
- தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (பி. 1839)