உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Kurinjinet: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 241: வரிசை 241:
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:05, 31 மே 2017 (UTC)
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:05, 31 மே 2017 (UTC)

::வணக்கம் [[பயனர்:Kurinjinet|குறிஞ்சி]]! நீங்கள் விரிவாக்கிய [[நல்ல உற்பத்தி நடைமுறைகள்]] கட்டுரை, போட்டிக் கட்டுரைகள் பட்டியலில் இல்லை. தவிரவும், மொத்தமாக 11,726 பைட்டுக்களை மட்டுமே கொண்டுள்ளது. தயவுசெய்து, போட்டிக்கான விதிகளைப் பார்த்து, அதற்கேற்ப கட்டுரைகளை விரிவாக்குங்கள். [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி]], [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம்]] இலுள்ள விபரங்களைப் பாருங்கள். நன்றி. {{ping|Shriheeran}}. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:48, 1 சூன் 2017 (UTC)

16:49, 1 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Kurinjinet, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--AntonTalk 05:22, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், Kurinjinet!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


வணக்கம், Kurinjinet!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 05:22, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Kurinjinet!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 16:09, 1 பெப்ரவரி 2015 (UTC)

உங்கள் பார்வைக்கு

வணக்கம், இயற்பியல் கட்டுரை உருவாக்கத்திற்கு எனது பாரட்டுகள். எனது சந்தேகத்தை இங்கு கேட்டிருக்கிறேன். உங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:02, 3 பெப்ரவரி 2015 (UTC)

@Booradleyp1 ஐயா உங்கள் கூற்று சரியே, திருத்திவிடுகிறேன். நான் வீக்கிபிடியாவிற்கு புதிது ஆகவே தடுமாற்றமும், எழுத்துபிழைகளும் தற்போதைய நிலையில் உள்ளது, திருத்திக்கொள்கிறேன்.

கவலையே வேண்டாம். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் முனைப்பான பயனர்களின் பேச்சுப் பக்கங்களிலோ அல்லது அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலோ கேளுங்கள். அனைவரும் வந்து உதவுவார்கள். (எனது உண்மைப் பெயர் பூங்கோதை, அப்பெயராலும் அழைக்கலாம்). பேச்சுப்பக்கங்களில் நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை தட்டச்சு செய்தபின் உங்கள் கையொப்பத்தை இடுவதற்கு பக்கத்தின் மேற்புறமுள்ள நீலநிறப் பட்டையிலுள்ள பேனா வடிவைச் சொடுக்குங்கள். உங்கள் பயனர் பக்கத்தை உருவாக்கி அதில் உங்களைப் பற்றிய பகிரக்கூடிய "பொதுவான" விவரங்களைத் தாருங்கள். தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களிப்பதற்கு எனது வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 14:24, 3 பெப்ரவரி 2015 (UTC)

செய்தி

செய்திகள் தரும் போது தகுந்த ஆதாரத்துடன் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 04:03, 14 பெப்ரவரி 2015 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 05:50, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 16:56, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

Guruvayor Express

வணக்கம்! தேவையற்றப் பக்கங்களை நீக்க இயலக்கூடிய வசதி, நிருவாக அணுக்கம் உள்ள பயனர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. நாசவேலைத் தொகுப்புகளிலிருந்து (vandalism) கட்டுரைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:36, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஆர்வமிருப்பின் வார்ப்புரு:இந்திய இரயில்வே எனும் பக்கத்தினை மொழிபெயர்ப்பு செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கியிடை இணைப்புகளும் மேற்கோள்களும்

வணக்கம், இந்திய ரெயில்வே குறித்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை எங்கிருந்து மொழிபெயர்க்கிறீர்கள்? ஆங்கில விக்கியில் இருந்து என்றால், ஆங்கில விக்கிக்கான இணைப்பை விக்கித் தரவு மூலம் தாருங்கள். அத்துடன், உங்கள் கட்டுரைகளுக்கான மேற்கோள்களையும் கட்டுரைகளில் தாருங்கள். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் எதிர்காலத்தில் நீக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.--Kanags \உரையாடுக 23:03, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

உங்கள் கட்டுரைகளுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் இருந்தால் அவற்றுக்கு விக்கியிடை இணைப்புகளைத் தாருங்கள். விக்கிப்பீடியாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இது மிக மிக அவசியம். எவ்வாறு இணைப்பது எனத் தெரியாவிட்டால் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 12:24, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Kanags: வணக்கம், எந்த கட்டுரையை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பெரும்பாலான பக்கங்களுக்கு சான்றுகள் சேர்த்துவிட்டேன். தெளிவுபடுத்தவும். நன்றி ----குறிஞ்சி (பேச்சு) 13:00, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

சான்றுகளைக் குறிப்பிடவில்லை. அது வேறு பிரச்சினை. ஆனால் நீங்கள் எழுதும் கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கில விக்கியில் இருந்தே மொழிபெயர்க்கிறீர்கள். அப்படியிருக்க அந்தப் பக்கத்துக்கு இணைப்புத் தருவது முக்கியம். தமிழ்க் கட்டுரையின் இடது பக்கத்தில் அடிப்பகுதியில் add links என்பதை சொடுக்கி இணைப்புத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 21:09, 12 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Kanags: வணக்கம், இதுவரை எம்மால் எழுதப்படும் அனைத்து மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கும் இணைப்புதனை add links வசதியினை பயன்படுத்தி நானேதான்உடனே கொடுத்துவருகின்றேன் . ஆயினும் சிலநேரம் சூழ்நிலைகளின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும் சில மணிநேரங்கள் கழித்தாவது அடுத்த புகுபதிகையின்பொழுது அதையும் சரிசெய்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

ஆம் பெரும்பாலான இரயில்வே கட்டுரைகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தாலும்(Link கொடுத்துவிடுவேன்), ஆங்கிலபக்கத்தில் இல்லாத தமிழர்களுக்கு நெருக்கமான தகவல்களை கோர்த்துவருவதை வழமையாக்கி கொண்டிருக்கிறேன். அந்தநிலைகளில் சான்றுகளை இணைக்க தவறுவதில்லை.

உங்கள் எழுதும் பழக்கம் எப்படி என்பதை அறிந்துகொண்டால், எம்பழக்கத்தினை மேம்படுத்திக்கொள்ள உதவும், எனினும் உங்கள் அர்பணிப்புக்கும், ஆலோசனைக்கும் நன்றி, தொடர்ந்து பேசுவோம்.

கட்டுரை நீக்கம்

வணக்கம், நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றை நீக்க வேண்டுமானால் கட்டுரையின் ஆரம்பத்தில் {{delete|நீக்கல் வேண்டுதலுக்கான காரணம்}} வார்ப்புருவை சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:45, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

Wikipedia Motivation Award விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
நன்றி! - நேசத்துடன்... மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:10, 30 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 12:26, 30 செப்டம்பர் 2015 (UTC)


வழி காட்டியமைக்கு நன்றிகள்

வணக்கம், குறிஞ்சி அவர்களே. எனது பிழைகளை கனிவாக சுட்டிக்காட்டி வழி காட்டியுள்ளீர், மேலும் உங்களது ஆரம்பகால எழுத்து பணியை எடுத்துக்காட்டாக எனக்களித்து ஆதரவாகவும், அனுசரணையாகவும் உரையாடியுள்ளீர் தங்களது ஆதரவுப்பேச்சு கண்டு ஆனந்தமடைகிறேன். தொடரந்து இந்த அடியேனுக்காக வழிக்காட்டுங்கள்,நன்றிகள் பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி 20:10, 30 செப்டம்பர் 2015 (UTC)

வார்ப்புரு

வார்ப்புருக்கள் (குறிப்பாக Infobox settlement போன்ற சிக்கலான வார்ப்புருக்கள்) பற்றிய தொழினுட்பம் தெரியாமல் தொகுக்க வேண்டாம். மாற்றம் தேவையென்றால் அவ்வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்திலேயே ஒத்தாசைப் பக்கத்திலேயோ கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:29, 9 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, இருப்பினும் நான் மீட்டெடுத்துவிட்டேன். எப்படி அங்குள்ள ஆங்கில பெயர்களை தமிழ்படுத்துவது...

உங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! அமராவதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் வெளியிடுவதற்கு மேற்கோள் தரத் தேவையில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 06:41, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
@மா. செல்வசிவகுருநாதன்: ஐயா நன்றி உங்கள் மாறுதலுக்கு, தன்யானேன்.
@Kanags: ஐயா, உங்கள் குறிப்புக்கும் நன்றி. அமராவதி பற்றிய செய்தி முதல் பக்கத்தில் இடம்பெறத்தக்கதே என்பது திண்ணமான எண்ணம். தமிழ்நாட்டின் எல்லையிலிருந்து 500கி.மீ தொலைவிற்குள் ஒரு புதிய உலகாளவிய நகரம் உருவெடுப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. வருங்காலத்தில் அந்த நகரத்தில் 45இலட்சம் மக்கள் வசிக்கலாம் என ஆந்திர அரசினால் எதிர்பார்க்கப்படுகிறது, அந்த நிலையில் அங்கே வருங்காலத்தில் குறைந்தப்பட்சம் 30000தமிழ் மக்கள்தொகை இருக்கலாம் என்பேன், அந்த நிலையில் இந்த ஒரு வரிச் செய்தி என் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்களும் அதை ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். வருங்காலத்தில் முதல்பக்க செய்தியாக போடும்பொழுது எதைப் போடுவது என்று உங்கள் கருத்தை ஆலோசனையாக எடுத்துக்கொள்கிறேன். நன்றி.. மற்றுமொரு விண்ணப்பம், எனக்கு கொஞ்சம் மென்பொருள் நிபுணத்துவம் உண்டு கடந்த காலங்களில் பெர்ல்(PERL), போன்ற மொழிகளில் வேலைப் பார்த்த அனுபவம் உண்டு. அதனால் எனக்கு எப்படி வீக்கி நிரல்மொழிகளை அணுகுவது என்று சொன்னால், தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு என்னாளான மற்றுமொரு பங்களிப்பை அளிக்கமுடியும். --குறிஞ்சி (பேச்சு) 14:20, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

எனது பங்களிப்பு குறைவாக இருக்கும் காலங்களிலும், ஒவ்வொரு நாளும் இங்கு ஒருமுறையாவது வந்து போவேன். எவரேனும் உதவி கேட்டால் செய்ய இயலும். எனவே உதவி தேவைப்படும் நேரங்களில் எனது பேச்சுப் பக்கத்தில் பேசுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:14, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வாக்கிடுக

மின்னஞ்சல் கண்டேன். மகிழ்ச்சி. விரிவான திட்டத்துடன் தொடர்பு கொள்கிறேன்.விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் என்பதில் வாக்கிடுக.--உழவன் (உரை) 08:58, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]


@உழவன் (உரை) தாமதத்திற்கு மன்னிக்கவும், சென்னை வெள்ளம் எம்மை இங்கிருந்து அங்கிழுத்துவிட்டது, நிலைமை சரியான பிறகு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்... --குறிஞ்சி (பேச்சு) 08:36, 5 திசம்பர் 2015 (UTC)
[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:02, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:25, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

கட்டுரைகள்

கட்டுரைகள் குறைந்தது 3 வரிகளைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அவை நீக்கப்படும். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் 3 வரிகளைக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள். --AntanO 15:54, 18 பெப்ரவரி 2017 (UTC)==விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்== வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:59, 25 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:44, 10 மார்ச் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:27, 26 ஏப்ரல் 2017 (UTC)

ஆதரவுக்கு நன்றி! அருள்கூர்ந்து கருத்துக்கள் இருப்பின் இடுக!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:04, 26 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:04, 1 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அதற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி

இதன்படி அருள்கூர்ந்து தொழினுட்பம் கட்டுரையை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 3 மே 2017 (UTC)[பதிலளி]
தொழினுட்பம் விரிவாக்கியதற்குப் பாராட்டுகள்! இக்கட்டுரை போட்டிக்கு ஏற்புடையது. ஆகவே நீங்கள் தாமதமின்றி இங்கு கட்டுரையை சமர்ப்பிக்கலாம்[--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:27, 4 மே 2017 (UTC)[பதிலளி]
மீண்டும் ஞாபகமூட்டுகின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:08, 5 மே 2017 (UTC)[பதிலளி]

26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:36, 6 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் குறிஞ்சி! நீங்கள் கட்டுரை விரிவாக்கப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பெயரை இங்கே பதிவு செய்து வைத்தீர்கள் என்றால், பொதுவான தகவல்களைப் போட்டியாளர்களுக்கு அனுப்பும்போது ஒருங்கிணைப்பாளர்களுக்கு இலகுவாக இருக்கும். எனவே இணைத்துவிடுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 18:43, 13 மே 2017 (UTC)[பதிலளி]

படிமம்

தற்போது நீங்கள் பதிவேற்றிய படிமம் பதிப்புரிமை விபரங்களைக் கொண்டிருக்கவில்லை. File Upload Wizard செய்வது பயனுள்ளது. ஆனால் நீங்கள் இலகுவான முறையைப் பின்பற்றியுள்ளீர்கள் என நினைக்கிறேன். --AntanO 06:18, 10 மே 2017 (UTC)[பதிலளி]

படிமத்தை நீக்கிவிடுகிறேன். மீண்டும் முயற்சித்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அல்லது இதனையே திருத்திவிடவா? --AntanO 06:19, 10 மே 2017 (UTC)[பதிலளி]
நீக்கிவிட்டேன். முயற்சித்துவிட்டு, உதவிதேவையென்றால் குறிப்பிடுங்கள். --AntanO 06:42, 10 மே 2017 (UTC)[பதிலளி]

எவ்வாறு பதிப்புரிமை விவரங்களை தருவது. இது ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து தருவிக்கப்பட்டது. -- குறிஞ்சி

இலகு வழிகாட்டி : சிறப்பு:Upload என்பதனூடாக அனுமதி என்பதில் சின்னம் என்பதைத் தெரிந்து பதிவேற்றுங்கள். --AntanO 06:55, 10 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றி, படிமத்தினை பதிவு ஏற்றிவிட்டேன், எனினும் கட்டுரையில் அது பிரதிபலிக்கவில்லை, என்ன காரணம்.? -- குறிஞ்சி

வார்ப்புருவில் திருத்தம் தேவை. மேலும், படிமப் பெயர் பிழையாகவும் இருந்தது. திருத்தியுள்ளேன்.--AntanO 07:18, 10 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:05, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் குறிஞ்சி! நீங்கள் விரிவாக்கிய நல்ல உற்பத்தி நடைமுறைகள் கட்டுரை, போட்டிக் கட்டுரைகள் பட்டியலில் இல்லை. தவிரவும், மொத்தமாக 11,726 பைட்டுக்களை மட்டுமே கொண்டுள்ளது. தயவுசெய்து, போட்டிக்கான விதிகளைப் பார்த்து, அதற்கேற்ப கட்டுரைகளை விரிவாக்குங்கள். விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி, விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம் இலுள்ள விபரங்களைப் பாருங்கள். நன்றி. @Shriheeran:. --கலை (பேச்சு) 16:48, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]