வானிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 18: | வரிசை 18: | ||
சீரற்ற சூரிய வெப்பமே (வெப்ப மண்டல உருவாதல் மற்றும் ஈரப்பத சரிவுகள் அல்லது வளிமுகப் பிறப்பு (''gradients'') ) புவியில் வானிலை மாற்றங்களுக்கும் மேகங்கள் உருவாதலுக்கும் பணிப்படிவுகள் ஏற்படுவதற்கும் காரணிகளாக அமைகின்றன<ref>Ron W. Przybylinski. [http://www.crh.noaa.gov/lsx/science/pdfppt/ron.ppt The Concept of Frontogenesis and its Application to Winter Weather Forecasting.] Retrieved on 28 June 2008.</ref>. புவியின் உயரமான பகுதிகள் தாழ்நிலப்பகுதிகளை விட ஒப்பீட்டளவில் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. இதனால் அதிகமான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் எதிரொலிப்பு வெப்பநிலையும் சேர்ந்து வெப்பப்பரிமாற்ற வீதத்தை (''adiabatic lapse rate'') உருவாக்குகிறது. சில சூழ்நிலைகளில் இயல்பாகவே உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபடுகிறது. இந்த தழைகீழான மாற்றம் மலையுச்சிகளில் அதிக [[வெப்பநிலை|வெப்பநிலையும்]] அதன் கீழாக உள்ள பள்ளத்தாக்குகளில் குறையளவு வெப்பநிலை போன்றவை மூடுபனி உருவாகிறது. இது இடி மின்னலும் ஏற்படுவதை தடுத்துக்கிறது.உள்ளூர் அளவுகளில், வெப்பநிலை வேறுபாடுகள் ஏற்படலாம். ஏனெனில் வெவ்வேறு பரப்புகளில் ( [[கடல்|கடல்கள்]], [[காடு|காடுகள்]], பனிப்படலங்கள், அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்) மாறுபட்ட பௌதீக குணவியல்புகளான [[எதிரொளிப்பு|எதிரொளிப்புத்தன்மை]], கடினத்தன்மை, அல்லது ஈரப்பத உள்ளடக்கம் ஆகியவை இருக்கின்றன. |
சீரற்ற சூரிய வெப்பமே (வெப்ப மண்டல உருவாதல் மற்றும் ஈரப்பத சரிவுகள் அல்லது வளிமுகப் பிறப்பு (''gradients'') ) புவியில் வானிலை மாற்றங்களுக்கும் மேகங்கள் உருவாதலுக்கும் பணிப்படிவுகள் ஏற்படுவதற்கும் காரணிகளாக அமைகின்றன<ref>Ron W. Przybylinski. [http://www.crh.noaa.gov/lsx/science/pdfppt/ron.ppt The Concept of Frontogenesis and its Application to Winter Weather Forecasting.] Retrieved on 28 June 2008.</ref>. புவியின் உயரமான பகுதிகள் தாழ்நிலப்பகுதிகளை விட ஒப்பீட்டளவில் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. இதனால் அதிகமான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் எதிரொலிப்பு வெப்பநிலையும் சேர்ந்து வெப்பப்பரிமாற்ற வீதத்தை (''adiabatic lapse rate'') உருவாக்குகிறது. சில சூழ்நிலைகளில் இயல்பாகவே உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபடுகிறது. இந்த தழைகீழான மாற்றம் மலையுச்சிகளில் அதிக [[வெப்பநிலை|வெப்பநிலையும்]] அதன் கீழாக உள்ள பள்ளத்தாக்குகளில் குறையளவு வெப்பநிலை போன்றவை மூடுபனி உருவாகிறது. இது இடி மின்னலும் ஏற்படுவதை தடுத்துக்கிறது.உள்ளூர் அளவுகளில், வெப்பநிலை வேறுபாடுகள் ஏற்படலாம். ஏனெனில் வெவ்வேறு பரப்புகளில் ( [[கடல்|கடல்கள்]], [[காடு|காடுகள்]], பனிப்படலங்கள், அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்) மாறுபட்ட பௌதீக குணவியல்புகளான [[எதிரொளிப்பு|எதிரொளிப்புத்தன்மை]], கடினத்தன்மை, அல்லது ஈரப்பத உள்ளடக்கம் ஆகியவை இருக்கின்றன. |
||
மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகள் அழுத்த மாறுபாடுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. வெப்பமான மேற்பரப்புகள் இதன் மேல்பகுதியிலுள்ள காற்றினையுன் சூடாக்குகிறது<ref>Michel Moncuquet. [http://www.lesia.obspm.fr/~moncuque/theseweb/tempioweb/node6.html Relation between density and temperature.] Retrieved on 28 June 2008.</ref> . இதன் காரணமான சூடான காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைகிறது. இது மேற்பரப்பு அழுத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக செங்குத்து அழுத்தம் காற்றினை மேலிருந்து கீழாக நகர்த்தி காற்று வீச்சினை உருவாகிறது. கோரியாலிஸ் விளைவவின் காரணமாக புவியின் சுழற்சி காற்று ஓட்டத்தில் விலகளை ஏற்படுத்துகிறது<ref>Encyclopedia of Earth. [http://www.eoearth.org/article/Wind Wind.] Retrieved on 28 June 2008.</ref>. இந்த எளிய அமைப்பு முறையே பின்னர் சிக்கலான காலநிலை அமைப்பியல் முறையாக மாறுகிறது. |
|||
[[வளிமண்டலம்|வளிமண்டலமானது]] [[ஒழுங்கின்மை கோட்பாடு|ஒழுங்கின்மை அமைப்பாகும்]] (chaotic system) இதன் விளைவாக வளிமண்டல அமைப்பில் ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மொத்த அமைப்பிலும் பெரும் மாற்றமாக தீவிரமடையக்கூடும்<ref>Spencer Weart. [http://www.aip.org/history/climate/chaos.htm The Discovery of Global Warming.] Retrieved on 28 June 2008.</ref> . இதனால் வானிலையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆயினும் வானிலை முன்கணிப்பாளர்கள் தினமும் அறிவியல் முறையான கணக்கீடுகளால் ஓரளவு துல்லியத்துடன் வானிலையை கணிக்கின்றனர். |
|||
==புவியில் வானிலையின் தாக்கம்== |
==புவியில் வானிலையின் தாக்கம்== |
08:52, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரை 'தியாகு கணேஷ்' எனும் பயனரால் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக சூன் 17, 2017 அன்று முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, வேறு எவரும் 10 நாட்களுக்கு இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புருவை நீக்கிவிட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம். |
இயற்கைத் தொடரின் பகுதி |
வானிலை |
---|
வானிலை (Weather) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. வானிலை நடப்பு நிலையைக் குறிக்கிறது. இது நீண்டகால அடிப்படையிலான சராசரி வளிமண்டல நிலைமைகளைக் குறிக்கப் பயன்படும் தட்பவெப்பநிலை என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலைத் தோற்றப்பாடுகள் காற்று, முகில், மழை, பனி, மூடுபனி, தூசிப் புயல்கள் போன்ற பொது வானிலைத் தோற்றப்பாடுகளையும்; அரிதாக நிகழும் இயற்கை அழிவுகள், சூறாவளி, பனிப் புயல் போன்றவற்றையும் உள்ளடக்கியது.
வானிலை இடத்துக்கிடம் வேறுபாடாக அமையும் அடர்த்தி (வெப்பநிலை, ஈரலிப்பு ஆகியவை) நிலைமைகளையொட்டி அமைகின்றது. இவ்வேறுபாடுகள், குறிப்பிட்ட இடத்தில் உள்ள சூரியனுடைய கோணத்தினால் உண்டாகிறது. சூரியனுடைய கோணம் குறித்த இடத்தின் அகலக்கோட்டு (latitude) அமைவிடத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது.
ஒரு பிரதேசத்தின் வானிலையை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றழுத்தம் என்பன சில முக்கிய காரணிகளாகும். இதில் காற்றழுத்த வேறுபாடே காற்று, மழை ஆகியவை இருக்கக்கூடிய பிரதேசத்தைத் தீர்மானிக்கின்றது. புவியின் வளிமண்டலம் சிக்கலானதென்பதால் அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். வானிலை மாற்றங்களுக்கான அனைத்து சக்தியும் சூரியனிடமிருந்தே பெறப்படுகின்றது. வானிலை புவிக்கு மட்டுமல்லாமல் வளிமண்டலம் உள்ள அனைத்து கோள்களுக்கும் பொதுவானது. உதாரணமாக வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்களிலும் சிக்கலான வானிலை நிலவுகின்றது. வியாழனில் உள்ள பெரும் சிவப்புப் புள்ளி எனப்படும் எதிர்-சூறாவளி அமைப்பானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு வானிலையமைப்பாகும்.
காரணம்
புவியின் ஒவ்வொரு இடமும் வெவ்வேறு வெப்பநிலையுடன் இருத்தலே வானிலைக்கான முக்கிய காரணமாகும். இதுவே பனிப்புயல் முதல் வெப்பவலை வரைபல்வேறு வானிலை வேறுபாடுகளை உருவாக்குகின்றது. அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை காற்றழுத்த மற்றும் ஈரப்பதத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றது. அதிக காற்றழுத்தத்திலிருந்து குறைந்த காற்றழுத்தத்துக்கு காற்று வீசும். காற்றானது புவியின் சுழற்சியால் ஓர் வளைந்த வடிவிலேயே பயணிக்கும். தாழமுக்க நிலையும் காற்றுச்சுழற்சியும் ஒழுங்கமைப்பு ஒன்றைப் பேணி வளர்ச்சியடைந்து அது சூறாவளியாக மாற்றமடையலாம்.
வானிலையானது தொடக்க நிலைக்கான காரணம் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடுவததே ஆகும். இந்த வேறுபாடுகள் பூமியின் ஏதாவது ஒரு புள்ளி மீது சூரியக் கதிர்கள் படும் கோண அளவுகளில் மாறுபாடுகள் இருப்பதாலும், பூமியின் துருவப்பகுதியிலிருந்து மத்தியப் பகுதி வரை மாறுபடும் படுகோணத்தாலும் வானிலையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக துருவப் பகுதியில் சூரியக்கதிர்களின் வீீச்சு ஒரு புள்ளியில் குவிக்கப்பட வாய்ப்பில்லாமல் பரந்த நிலப்பகுதியல் விரவியவாறு பரப்பப்படுவதால் அத்தகைய பகுதிகளில் மிகக் குளிச்சியான வானிலை நிலவுகிறது[1] . இவ்வாறு துருவப்பகுதிக்கும் வெப்பமண்டலப் பகுதிக்குமிடையே நிலவும் வலிமையான வெப்பநிலை மாறுபாடுகள் வளிமண்டல காற்றுச் சுழற்சிகளை உண்டாக்குகின்றன[2]. மைய அட்சப்பகுதிகளில் நிலையற்ற வேகமாக வீசும் காற்றுகளால் புற வெப்பமண்டலச் சூறாவளிகள் தோன்றுகின்றன[3].
ஏனெனில் பூமியின் அச்சு சற்று சாய்வாக இருப்பதால் சூரிய ஒளியானது வருடத்தில் மாறுபடும் நேர அளவுகளில் மாறுபடும் படுகோணத்தில் புவி மீது விழுகிறது.சூன் மாதத்தில் புவியின் வடதுருவம் சூரியனை நோக்கி சற்று சாய்வாக உள்ளதால் திசம்பர் மாதத்தை விட சூரிய ஒளி முழுவது்ம் துருவப்பகுதியல் விழுகிறது. இத்தகைய விளைவுகளே புவியின் காலநிலை மாறுபாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன[4] . புவியன் சுற்றுப்பாதை துணைக்கூறுகளும் சூரிய ஆற்றலை புவி பெற்றுக்கொள்ளும் விதமும் நீண்டகால ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் காலநிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன (பார்க்க : Milankovitch cycles)[5]
சீரற்ற சூரிய வெப்பமே (வெப்ப மண்டல உருவாதல் மற்றும் ஈரப்பத சரிவுகள் அல்லது வளிமுகப் பிறப்பு (gradients) ) புவியில் வானிலை மாற்றங்களுக்கும் மேகங்கள் உருவாதலுக்கும் பணிப்படிவுகள் ஏற்படுவதற்கும் காரணிகளாக அமைகின்றன[6]. புவியின் உயரமான பகுதிகள் தாழ்நிலப்பகுதிகளை விட ஒப்பீட்டளவில் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. இதனால் அதிகமான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் எதிரொலிப்பு வெப்பநிலையும் சேர்ந்து வெப்பப்பரிமாற்ற வீதத்தை (adiabatic lapse rate) உருவாக்குகிறது. சில சூழ்நிலைகளில் இயல்பாகவே உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபடுகிறது. இந்த தழைகீழான மாற்றம் மலையுச்சிகளில் அதிக வெப்பநிலையும் அதன் கீழாக உள்ள பள்ளத்தாக்குகளில் குறையளவு வெப்பநிலை போன்றவை மூடுபனி உருவாகிறது. இது இடி மின்னலும் ஏற்படுவதை தடுத்துக்கிறது.உள்ளூர் அளவுகளில், வெப்பநிலை வேறுபாடுகள் ஏற்படலாம். ஏனெனில் வெவ்வேறு பரப்புகளில் ( கடல்கள், காடுகள், பனிப்படலங்கள், அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்) மாறுபட்ட பௌதீக குணவியல்புகளான எதிரொளிப்புத்தன்மை, கடினத்தன்மை, அல்லது ஈரப்பத உள்ளடக்கம் ஆகியவை இருக்கின்றன.
மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகள் அழுத்த மாறுபாடுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. வெப்பமான மேற்பரப்புகள் இதன் மேல்பகுதியிலுள்ள காற்றினையுன் சூடாக்குகிறது[7] . இதன் காரணமான சூடான காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைகிறது. இது மேற்பரப்பு அழுத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக செங்குத்து அழுத்தம் காற்றினை மேலிருந்து கீழாக நகர்த்தி காற்று வீச்சினை உருவாகிறது. கோரியாலிஸ் விளைவவின் காரணமாக புவியின் சுழற்சி காற்று ஓட்டத்தில் விலகளை ஏற்படுத்துகிறது[8]. இந்த எளிய அமைப்பு முறையே பின்னர் சிக்கலான காலநிலை அமைப்பியல் முறையாக மாறுகிறது.
வளிமண்டலமானது ஒழுங்கின்மை அமைப்பாகும் (chaotic system) இதன் விளைவாக வளிமண்டல அமைப்பில் ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மொத்த அமைப்பிலும் பெரும் மாற்றமாக தீவிரமடையக்கூடும்[9] . இதனால் வானிலையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆயினும் வானிலை முன்கணிப்பாளர்கள் தினமும் அறிவியல் முறையான கணக்கீடுகளால் ஓரளவு துல்லியத்துடன் வானிலையை கணிக்கின்றனர்.
புவியில் வானிலையின் தாக்கம்
பாறைகளின் அரிப்படைதலில் வானிலைக்கு பெரும்பங்குண்டு. பாறைகளுடன் மழைநீரும் அதன் அமிலத்தன்மையும் வேதியல் தாக்கமடைவதன் மூலம் பாறைகள் அரிப்படைந்து மண் உருவாகின்றது. உதாரணமாக வரண்ட வானிலை எப்போதும் நிலவும் நஸ்கா மற்றும் எகிப்து பிரதேசங்களில் உள்ள நஸ்கா கோடுகள் மற்றும் பிரமிட்டுகள் சேதமடையவில்லை. இது இயற்கை புவியியல் அம்சவியலிலும் தாக்கம் செலுத்தும்.
வெளி இணைப்புகள்
- ↑ NASA. World Book at NASA: Weather. Archived copy at WebCite (10 March 2013). Retrieved on 27 June 2008.
- ↑ John P. Stimac. Air pressure and wind. Retrieved on 8 May 2008.
- ↑ Carlyle H. Wash, Stacey H. Heikkinen, Chi-Sann Liou, and Wendell A. Nuss. A Rapid Cyclogenesis Event during GALE IOP 9. Retrieved on 28 June 2008.
- ↑ Windows to the Universe. Earth's Tilt Is the Reason for the Seasons! Retrieved on 28 June 2008.
- ↑ Milankovitch, Milutin. Canon of Insolation and the Ice Age Problem. Zavod za Udz̆benike i Nastavna Sredstva: Belgrade, 1941. ISBN 86-17-06619-9.
- ↑ Ron W. Przybylinski. The Concept of Frontogenesis and its Application to Winter Weather Forecasting. Retrieved on 28 June 2008.
- ↑ Michel Moncuquet. Relation between density and temperature. Retrieved on 28 June 2008.
- ↑ Encyclopedia of Earth. Wind. Retrieved on 28 June 2008.
- ↑ Spencer Weart. The Discovery of Global Warming. Retrieved on 28 June 2008.