உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்டாக் மில்லியனயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:슬럼독 밀리어네어
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: it:The Millionaire (film 2008)
வரிசை 89: வரிசை 89:
[[hu:Gettómilliomos]]
[[hu:Gettómilliomos]]
[[id:Slumdog Millionaire]]
[[id:Slumdog Millionaire]]
[[it:The Millionaire]]
[[it:The Millionaire (film 2008)]]
[[ja:スラムドッグ$ミリオネア]]
[[ja:スラムドッグ$ミリオネア]]
[[jv:Slumdog Millionaire]]
[[jv:Slumdog Millionaire]]

08:57, 7 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சிலம்டாக் மில்லியனயர்
Slumdog Millionaire
இயக்கம்டானி பாயில்
லவ்லீன் டாண்டன் (இணை தயாரிப்பாளர்: இந்தியா)
தயாரிப்புகிறிஸ்டியன் கொல்சன்
கதைசைமன் பியூஃபோய்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புதேவ் பட்டேல்
பிரெய்ரா பிண்டோ
அனில் கபூர்
இர்பான் கான்
ஒளிப்பதிவுஅந்தனி மாண்டில்
படத்தொகுப்புகிற்றிஸ் டிக்கன்ஸ்
விநியோகம்ஃபொக்ஸ் சேர்ச்லைட் பிக்சர்ஸ்
வார்னர் சகோதரர்கள் (அமெ)
பத்தே
வெளியீடுநவம்பர் 12 2008 (மட்டுப்படுத்தப்பட்டது)
டிசம்பர் 26 2008 (உலகெங்கிலும்)
ஜனவரி 9 2009 (ஐக்கிய இராச்சியம்)
ஜனவரி 23 2009 (இந்தியா)
ஓட்டம்120 நிமி.
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
இந்தி
ஆக்கச்செலவு$15 மில்லியன்
மொத்த வருவாய்$37,983,676

சிலம்டாக் மில்லியனயர் (Slumdog Millionaire) என்பது 2008 ஆம் ஆண்டில் வெளியான பிரித்தானியத் திரைப்படமாகும். இது இந்ந்திய எழுத்தாளர் விக்காஸ் சுவரூப் என்பவர் எழுதிய கியூ அண்ட் ஏ (Q and A) என்ற புதினத்தைத் தழுவி படமாக்கப்பட்டது.

திரைக்கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மும்பையின் ஒதுக்குப்புறமான குப்பத்து சிறுவன் ஜமால் மதக்கலவரத்தில் தாயை இழந்துவிட, வயிற்றுக்காக ஜமாலும் அவனது அண்ணனும் ஓடுகிறார்கள். வயிற்றுக்காக சின்னச்சின்ன தவறுகள் செய்யத் தொடங்கி, கடைசியில் சிறுவர்களை பிச்சையெடுக்கவிட்டு பணம் பார்க்கிறவனிடம் சேர்கிறார்கள். ஜமாலை குருடனாக மாற்ற அவர்கள் முனைகிறபோது ஜமாலைக் காப்பாற்றி தப்பிக்கிறான் அண்ணன். உடனிருந்த தோழி லத்திகாவை அங்கே விட்டுவிடுகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிற குருட்டு பிச்சைக்கார நண்பன் மூலம் லத்திகாவை மீண்டும் சந்திக்கிறார்கள் ஒரு விபசார விடுதியில் அவளை அந்நிலைக்குத் தள்ளிய பிச்சைக்கூட்டத் தலைவனை ஜமாலின் அண்ணன் சலீம் சுட்டுத்தள்ள, மூவரும் தப்பிக்கிறார்கள். லத்திகாவின் உடலுக்காக அண்ணன் ஜமாலை விரட்டியடிக்க பிரிகிறார்கள். லத்திகாவுடன் மும்பை தாதாவிடம் சேர்கிறான் அண்ணன் ஜமால்-லத்திகா நட்பு மெல்ல மெல்ல காதலாகிறது.

இச்சூழலில்தான் தொலைக்காட்சியில் கோடீஸ்வரன் கேள்வி பதில் நிகழ்ச்சி பரபரப்பாக மக்களால் பார்க்கப்படுகிறது. காதலியும் பார்ப்பாள், சந்திக்க முடியும் என நினைத்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறான் ஜமால். கேட்கப்படும் கேள்விகளுக்கு வாழ்வில் நேர்ந்த அனுபவங்களிலிருந்து பதில் சொல்கிறான் ஜமால். லட்சங்களைத் தாண்டத் தாண்ட நிகழ்ச்சி நடத்துவோரின் அரசியல் நெருக்குகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறான்? காதலியை சந்திக்கிறானா? அண்ணன் என்ன ஆனான்? என்பது தான் கதை[1].

விருதுகள்

  • சிறந்த படம்
  • சிறந்த இயக்குனர் – டானி பொயில்
  • சிறந்த இசையமைப்பு – ஏ. ஆர். ரகுமான்
  • சிறந்த மூலப் பாடல் – "ஜெய் ஹோ", (ஏ. ஆர். ரகுமான் (இசை) & குல்சார் (பாடல்)
  • சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை– சைமன் பியூஃபோய்
  • சிறந்த ஒளிப்பதிவு – ஆந்தனி டொட் மாண்டில்
  • சிறந்த படத்தொகுப்பு – கிறிஸ் டிக்கன்ஸ்
  • சிறந்த ஒலிக்கலப்பு – ரெசுல் பூக்குட்டி, ரிச்சார்ட் பிரைக், இயன் டாப்


  • பரிந்துரைப்பு: சிறந்த ஒலித்தொகுப்பு – டொம் சயேர்ஸ்
  • பரிந்த்ரைப்பு: சிறந்த மூலப் பாடல் – "ஓ..சாயா", ஏ. ஆர். ரகுமான், எம். ஐ. ஏ (பாடல்)
    • சிறந்த திரைப்படம்
    • சிறந்த தயாரிப்பாளர் (டானி பொயில்)
    • சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்)
    • சிறந்த இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரகுமான்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்