தனித்தமிழ்
Appearance
பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண விதிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம். தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாக கலந்துநிற்கும் சமசுகிருத சொற்களையையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல் இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம். இது அவற்றின் ஆதிக்கத்தால் தோன்றிய எதிர்நிலை எனலாம்.