உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது. மேலும் இது 7000 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியா ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.

இருப்பிடமும் பரவலும்

பரப்பளவில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாகும். இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. களாகும். வடக்கு தெற்காக 3,214 கி.மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.

தென்மேற்கில் இந்தியா அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது. கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது. இதன் தெற்கில் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது.

அரசியல் புவியமைப்பு

இந்திய நாடு 28 மாநிலங்களாகவும், ஆறு ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.

இந்திய தேசப்படம்
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கட்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஓடிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தராஞ்சல்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டீகட்
  3. தாத்ரா நாகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. இலட்சத் தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி

புவியியல் மண்டலங்கள்

இந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  • வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்
  • இந்திய கங்கைச்சமவெளி
  • தார் பாலைவனம்
  • மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி
  • கிழக்குக் கடற்கரை
  • மேற்குக் கடற்கரை
  • சுற்றியுள்ள கடல்களும் தீவுகளும்

மலைகள்

இந்திய கங்கைச் சமவெளி

கங்கைச் சமவெளி

இந்திய கங்கைச் சமவெளி என்பது சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும். இச்சமவெளி மேற்கில் காஷ்மீர் முதல் கிழக்கில் அஸ்ஸாம் வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது. இச்சமவெளி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.

தார் பாலைவனம்

பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.

மலைகள்

உயர்நிலங்க

கிழக்கு கடலோர சமவெளிள்

கிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா இடையே உள்ளது. இது கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் தெற்கு தமிழ்நாட்டில் நீண்டிருக்கிறது. மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் மற்றும் அவர்களின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக 30 ° C மீறுகிறது (86 ° F), மற்றும் உயர்ந்த ஈரப்பதம் இணைந்து வருகிறது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கெண்டது. தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள், வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது. வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது. அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுலம் மற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை. சமவெளி அகலம் 100 முதல் 130 கிமீ (62 மற்றும் 81 மைல்) வேறுபடுகிறது. சமவெளி ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன

மேற்குக் கடற்கரை

தீவுகள்

அந்தமான் நிகோபார் ஆகியன வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த தீவுகளாகும்.

ஆறுகள்

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். கிருஷ்ணா, கோதாவரி, காவிரி போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும். வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்றன. வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது. இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.

நீர்நிலைகள்

சதுப்பு நிலங்கள்

தட்ப வெப்ப நிலை

இயற்கைச் சீற்றங்கள்

இயற்கை வளங்கள்

வார்ப்புரு:Link FA