கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot(பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:14, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பட்டியல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இந்திய டி 20 தொடரில் கொடுக்கப்படும் விருதுகளைப் பட்டியலிடுகிறது. இத்தொடர் வீரர்களை கௌரவப்படுத்த பல்வேறு விருதுகளை தொடரின் இறுதியில் வழங்கும். இவை: ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பி, அதிக சிக்ஸர்கான விருது, விலைமதிப்பற்ற வீரர் விருது மற்றும் இவ்வருடத்திற்கான சிறந்த வளர்ந்து வரும் வீரர்.
ஆரஞ்சு தொப்பி வருடாவருடம் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும். [1][2] ஏப்ரல் 25, 2008 அன்று ஐபிஎல் ஆரம்ப சீசன் தொடங்கி ஒரு வாரம் கழித்து இது அறிமுகப்படுத்தப்பட்டது. ப்ரெண்டன் மெக்கல்லம் ஆரஞ்சு தொப்பியை அணிந்த முதல் வீரர் ஆவார், [2]ஷான் மார்ஷ் இந்த விருதை முதன்முதலில் வென்றார்.