உள்ளடக்கத்துக்குச் செல்

எடி மர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எட்டி மர்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எடி மர்பி
201௦ல் மர்பி திர்பெக்கா திரைப்பட திருவிழாவில்
201௦ல் மர்பி திர்பெக்கா திரைப்பட திருவிழாவில்
இயற்பெயர் எட்வர்ட் ரீகன் மர்பி
பிறப்பு ஏப்ரல் 3, 1961 (1961-04-03) (அகவை 63)
புரூக்ளின், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
Medium திரைப்படங்கள், தொலைக்காட்சி, நகைச்சுவை, இசை, புத்தகங்கள்
தேசியம் அமெரிக்கர்
நடிப்புக் காலம் 1980–தற்காலம்
தலைப்பு(கள்) பரவலர் பண்பாடு, மாந்த பாலுணர்வியல்
செல்வாக்கு செலுத்தியோர் ராபின் வில்லியம்ஸ்

எட்வர்ட் ரீகன் "எடி" மர்பி (Eddie Murphy, பிறப்பு ஏப்ரல் 3, 1961) என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார்.[1] பாக்ஸ் ஆபிசில் வெளியாகும் படங்களில் அமெரிக்காவில் 4 வது மிக உயர்ந்த வசூல் செய்யும் நடிகராக கருதப்படுகிறார். 1980 ல் இருந்து 1984 "சாட்டர்டே நைட் லைவ்" என்னும் தொலைக்காட்சி தொடரில் நகைச்சுவையாளராக பணியாற்றி உள்ளார். காமெடி சென்ட்ரல் வெளியிட்ட சிறந்த 100 நகைச்சுவையாளர்களில் இவர் 10ஆம் இடத்தில் உள்ளார்.[2]

48 மணி நேரங்கள், பிவெர்லி ஹில்ஸ் காப் சீரிச், டிரேடிங் பிளேசிஸ் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 2007 ஆம் ஆண்டில் ட்ரீம் கேர்ள்ஸ் திரைப்படத்தில் பாடகராக நடித்த இவரின் கதாப்பத்திரத்திற்கு சிறந்த ஆண் துணைக் கதாப்பாத்திரத்திற்கான அகாதமி விருது பெற்றார்.[3]

மர்பி நடிகராக மட்டும் அல்லாது பின்னணி குரல் கொடுப்பவராகவும் பணிபுரிந்துள்ளார்.குறிப்பாக தெ பி ஜேஸ், ட்ரீம் ஒர்க் நிறுவனத்தின் ஸ்ரெக் தொடரில் டாங்கி, வால்ட் டிஸ்னியின் 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த முலன் திரைப்படத்தில் சீன டிராகன் முசு போன்ற கதாப்பாத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டின்படி இவரின் திரைப்படங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் $3.8 பில்லியன் வசூலையும் உலக அளவில் $6.6 பில்லியன் வசூலையும் பெற்றது.[4] 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிக வசூலைப் பெற்ற நடிகரானார்.[5][6][7]

ஜான் எஃப். கென்னடி நிகழ்த்துக் கலை மையம் இவருக்கு அமெரிக்காவின் சிறந்த நகைச்சுவையாளருக்கான மார்க் ட்வைன் விருது வழங்கப்பட்டது.[8]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

எட்வர்ட் ரீகன் மர்பி ஏப்ரல் 3, 1961 இல் புரூக்ளின், நியூயார்க் நகரத்தில் பிறந்தார்.[9] இவரின் தந்தை சார்லஸ் எட்வர்ட் மர்பி போக்குவரத்து காவல் அதிகாரி, நடிகர் மற்றும் நகைச்சுவையாளரும் ஆவார்.[9][10][11][12][13] தாய்லிலியன் (லேனி) தொலைபேசி இயக்குநர் ஆவார்.

மர்பிக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை 1969 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.[14]

எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது எனது தாயும் தந்தையும் திருமண முறிவு பெற்றனர். எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது எனது தந்தை இறந்துவிட்டார். எனவே அவர்களைப் பற்றிய நினைவுகள் எனக்குத் தெளிவாக ஞாபகம் இல்லை. ஒரு பெண் எனது தந்தையை குத்தினார். எனக்கு நீ கிடைக்கவில்லை எனில் யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் மனநிலையால் இது ஏற்பட்டது.ஒரு நாள் ஒருவர் என்னிடம் உனது தந்தைக்கு நடந்த சம்பவத்தினால் தான் நீயும் எந்தப் பெண்களின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய் எனக் கூறினார். இவ்வாறு மர்பி கூறினார்.

இவருக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தாய் லிலியனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் மர்பியும் அவரது மூத்த சகோதரர் சார்லியும் ஒரு ஆண்டு வளர்ப்புப் பிள்ளைகளாக வளர்ந்தனர். இந்த ஒரு வருடகலத்தில் தான் தனது நகைச்சுவை உணர்வு அதிகரித்ததாக நேர்காணலின் போது மர்பி கூறினார். பின் நியூயார்க் நகரத்தில் உள்ள ரூஸ்வெல்ட் எனும் சிறு கிராமத்தில் மர்பியும் அவரது மூத்த சகோதரரும் அவரது தாய் லிலியன் மற்றும் மாற்றாந் தந்தையான வெர்னான் லின்சினுடன் வாழ்ந்து வந்தனர்.வெர்னான் லின்ச் குளிர்களி தொழிற்சாலை முகவராக பணிபுரிந்தார்.[10]

இவர் பில் காஸ்பி மற்றும் ரிச்சர்டு பிரையர் ஆகியோரால் ஊக்கமடைந்தார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stated in interview on Inside the Actors Studio
  2. "Comedy Central 100 Greatest Standups of all Time". Listology. May 19, 2005. பார்க்கப்பட்ட நாள் August 29, 2010.
  3. Kilday, Gregg (December 14, 2006). "'Dreamgirls' Snares Multiple Golden Globe Nods". The Hollywood Reporter.
  4. "Eddie Murphy". Boxofficemojo.com. பார்க்கப்பட்ட நாள் March 8, 2015.
  5. "IMDb List of Highest Grossing Actors in the United States". பார்க்கப்பட்ட நாள் July 13, 2016.
  6. "Eddie Murphy". Boxofficemojo.com. பார்க்கப்பட்ட நாள் March 8, 2015.
  7. "People Index". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் March 31, 2014.
  8. "Eddie Murphy burns Bill Cosby during his Mark Twain Prize acceptance speech". USA Today. பார்க்கப்பட்ட நாள் October 19, 2015.
  9. 9.0 9.1 "Eddie Murphy Biography (1961–)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் August 29, 2010.
  10. 10.0 10.1 10.2 Stated in interview on Inside the Actors Studio
  11. Flippo, Chet (October 11, 1982). "Eddie Murphy Live: The razor-edged king of late night comedy". New York. https://books.google.com/books?id=j-ICAAAAMBAJ&lpg=PA56&dq=eddie%20murphy%20new%20york%20magazine%20oct.%2011%201982&pg=PA56#v=onepage&q&f=false. பார்த்த நாள்: June 27, 2011. 
  12. [1] பரணிடப்பட்டது நவம்பர் 9, 2011 at the வந்தவழி இயந்திரம்
  13. "Charlie Murphy Obituary on Legacy.com". Legacy.com. பார்க்கப்பட்ட நாள் December 22, 2017.
  14. father Charles Edward Murphy 1940-69; old findagrave service Retrieved November 17, 2017

வெளியிணைப்புகள்

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எடி மர்பி

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடி_மர்பி&oldid=2919054" இலிருந்து மீள்விக்கப்பட்டது