உள்ளடக்கத்துக்குச் செல்

நிம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிம்பா என்பவர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிக்கப்படும் நபர் ஆவார். இவர் லவோதிக்கேயா திருச்சபையினை சேர்ந்தவர். இவர் வீட்டில் ஆதி திருச்சபை கூடி இறைவேண்டலில் ஈடுபட்டதாக புனித பவுல் குறிக்கின்றார்.[1] இவரின் பெயருக்கு நீரணங்கு என்பது பொருள். இப்பெயர் நிம்பாதோரஸ் என்னும் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். தமிழ் பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தில் இவர் பெண்பாலில் குறிக்கப்பட்டாலும் இவரின் பெயரின் ஒலியழுத்தத்தை வைத்து இவரை ஆணாக கூட குறிக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Colossians 4:15
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்பா&oldid=1730935" இலிருந்து மீள்விக்கப்பட்டது