உள்ளடக்கத்துக்குச் செல்

போல்க்ஸ்வேகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபோல்க்ஸ்வேகன்
நிறுவுகை28 மே 1937
நிறுவனர்(கள்)பெர்டினாண்ட் போர்ஷே
தலைமையகம்வுல்ஃப்ஸ்பர்கில், ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்மார்ட்டின் விண்டர்கார்ன்: தலைவர்
தொழில்துறைதானியங்கி
உற்பத்திகள்கார்கள்
உற்பத்தி வெளியீடுIncrease4,591,851 யூனிட்கள் (2010)
வருமானம்Increase€80.251 பில்லியன் (2010)
தாய் நிறுவனம்ஃபோல்க்ஸ்வேகன் குழுமம்
இணையத்தளம்Volkswagen.com

ஃபோல்க்ஸ்வேகன் (வோல்ஸ்வேகன், Volkswagen) எனபது வோல்ஸ்வேகன் குழும நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெர்மனியில் உள்ள வுல்ஃப்ஸ்பர்கில் 28 மே 1937ல் தொடங்கப்பட்டது. வோல்ஸ்க்வேகன் என்ற சொல் ஜெர்மானிய மொழியில் மக்களுடைய கார் என்று பொருள்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து வோல்ஸ்வேகன் இந்தியாவில் செப்டம்பர் 2007ம் ஆண்டு பஸட் மாதிரி காரை அறிமுகப்படுத்தியது.

1932-1938: மக்களின் கார் திட்டம்

[தொகு]

வோல்க்ஸ்வகேன் முதன் முதலில் 1937ல் பெர்லினில் ஜெர்மானிய தொழிலாளர் முன்னணியால் உருவாக்கப்பட்டது. முற்பகுதிகளில் ஜெர்மன் வாகன தொழில் ஆடம்பர மாதிரிகளை கொண்டதாகவே அமைந்தது, சராசரி ஒரு ஜெர்மானியர் அரிதாக ஒரு மோட்டார் சைக்கிளை விட வேறு ஒன்றும் பெற்று விட முடியாது.இதன் விளைவாக ஜெர்மனியில் 5௦ பேருக்கும் குறைவானோரே கார் வைத்திருந்தனர்.புதிய புதிய சந்தையை தேடிக்கொண்ட சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மக்கள் கார் தயாரிப்பு திட்டத்தை பயன்படுத்திக்கொண்டன மெர்சிடஸ் 170H, ஆட்லர் ஆட்டோபன், ஸ்டேர் 55, மற்றும் ஹனோமக் 1.3L ஆகியவை.