லிவீவ் மாகாணம்
லிவீவ் மாகாணம்
Львівська область | |
---|---|
லிவீவ்ஸ்கா மாகாணம்[1] | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | லிவீவ் |
அரசு | |
• ஆளுநர் | மாக்சிம் கோசிட்ஸ்கி[2] |
• லிவீவ் மாகாணச் சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் |
• தலைவர் | அலெக்சாந்தர் ஹனுஸ்சின் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,833 km2 (8,430 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 17-வது இடம் |
ஏற்றம் | 296 m (971 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ▼ 24,97,750 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 79-82 |
வட்டார குறியீடு | +380-32 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-46 |
மாவட்டங்கள் | 20 |
நகரங்கள் (மொத்தம்) | 44 |
• மண்டல நகரங்கள் | 9 |
நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 34 |
கிராமங்கள் | 1849 |
FIPS 10-4 | UP15 |
இணையதளம் | www.loda.gov.ua |
லிவீவ் மாகாணம் (Lviv Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கு கோடியில், போலந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் லிவீவ் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 24,97,750 ஆகும்.
புவியியல்
[தொகு]கார்பேத்திய மலைகள் இம்மாகாணத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் வடக்கிலிருந்து தினிஸ்டர் ஆறு மற்றும் சான் ஆறுகள் பாய்கிறது. இம்மாகாணத்தில் பைன் மரக்காடுகளும், நிலக்கரிச் சரங்கங்கள் அதிகம் உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]இம்மாகாணத்தின் கார்பேத்திய மலைப்பகுதிகளில் சனவரி மாதத்தில் சராசர் வெப்பம் −7 °C (19 °F) முதல் −3 °C (27 °F) வரை இருக்கும். சூலை மாதத்தில் சராசரி வெப்பம தினிஸ்டர் மற்றும் சான் ஆற்றுச் சமவெளிகளில் 14–15 °C (57–59 °F) வரையும், கார்பேத்திய மலைப்பகுதிகளில் 16–17 °C (61–63 °F) வரையும் இருக்கும்.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]லிவீவ் மாகாணம் 20 மாவட்டங்கள், 44 நகரங்கள், 34 நகர்புற குடியிருப்பு பகுதிகள், 1849 கிராமங்கள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 94.8%, உருசிய மொழி பேசுபவர்கள் 3.6% உள்ளனர்.[3]
இம்மாகாணத்தில் முதலிடத்தில் 59% பேர் உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்க சமயத்தினராக உள்ளனர். இரண்டாவதாக உக்ரைனிய தன்னாட்சி மரபுவழி திருச்சபையினர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்கள், உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் சிறுபான்மையாக உள்ளனர்.
படக்காட்சிகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- லிவீவ் நகரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Zelensky introduces new head of Lviv Regional State Administration, Ukrinform (6 February 2020)
- ↑ Державний комітет статистики України (2004). "Національний склад населення / Львівська область" [Ukrainian Census, Lviv Oblast]. Internet Archive. Archived from the original on September 26, 2010. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
- Source for statistics used: L'viv Regional State Administration Web Site – accessed February 29, 2004.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் லிவீவ் மாகாணம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- L'viv Regional State Administration Web Site
- Symbols and flags