சமூக நிகழ்வுகளுக்கும், திட்டங்களுக்கும் உரிய சில வழிகாட்டுதல்கள், கீழே நெறிமுறைகளாகத் தரப்பட்டுள்ளன. சமூக நிகழ்வுகளுக்கும், திட்டங்களுக்கும், குறிப்பிடத்தகுந்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கும், CIS-A2K செயலூக்கியாக இருந்து உதவ விரும்புகிறது. எனவே, விண்ணப்பிக்கும் முன், தரப்பட்டுள்ள நெறிமுறைகளை முழுமையாக வாசித்து அறிந்துகொள்ளவும்:
இந்திய குடிமகன்கள் மட்டுமே இந்த உதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
உங்கள் விக்கிஊடக கணக்கின் வழியே, வேண்டுகோள் விண்ணப்பத்தை இடுக.
விக்கிஊடகச் சமூகமானது நேரடி நிகழ்வாக, ஓரிரு நாட்களுக்கான பயிலரங்குகள், தொடர் தொகுத்தலோட்டங்களையும், நிழற்படப் போட்டிகள் போன்றவற்றையும், இணைய வழியாக போட்டி மற்றும் தொகுத்தலோட்டங்களையும், ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை நடத்தலாம். பிற திட்டங்களை ஒரு மாதம் முதல் மூன்று மாத கால அளவில் நடத்தலாம்.
இந்த நல்கைக்கு விண்ணப்பம் செய்பவர், தனது விக்கிமீடிய ஆலமரத்தடியில், பிறரின் ஆதரவை கேட்க வேண்டும். விண்ணப்பத்திற்கான கலந்துரையாடல்களின் வழியே, தொடர்ந்து தொகுப்புகளைச் செய்து வரும் பயனர்கள் ஐந்து பேரின் ஆதரவுகளை, குறைந்தபட்சம் பெறுதல் வேண்டும். இதன் பிறகே, CIS-A2K-வின் நிகழ்வுகள், திட்டங்கள் பக்கப்பிரிவில், விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்
இந்திய உரூபாய் 40,000/-க்கும் குறைவான திட்டச்செலவு இருப்பின், நிகழ்வு/திட்டம் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னும், இந்திய உரூபாய் 40,000/-க்கும் அதிகமான திட்டச்செலவு இருப்பின், நிகழ்வு/திட்டம் நடப்பதற்கு 60 நாட்களுக்கு முன்னும் விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் நல்கைக்கான நிகழ்வுகள், திட்டங்கள் குறித்து, இந்திய மின்னஞ்சல் பட்டியிலும், தமிழ் மொழிக்குரிய மின்னஞ்சல் பட்டிகளிலும், இத்திட்டத்திற்கான விக்கிமீடிய ஆலமரத்தடியிலும் தெரிவிக்கும்படி, ஆழ்ந்து அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
நல்கைக்கான முன்மொழிவு விண்ணப்பத்தில், விண்ணப்ப இலக்கு, நோக்கங்கள், செயலாக்கத் திட்டம், ஒப்படைப்புகள், எதிர்பார்க்கும் பயன்கள் ஆகியன இருத்தல் வேண்டும். விண்ணப்ப நல்கையின் வரம்பானது, இந்திய உரூபாய் ஒரு இலகரத்திற்குள் (1,00,000/-) இருக்க வேண்டும்.
விண்ணப்ப நல்கையானது இந்திய உரூபாய் 40,000 விட அதிகமாக இருந்தால், CIS-A2K-ஆல் உருவாக்கப்பட்ட, திட்ட மதிப்பாய்வு செயற்குழுவால் மதிப்பீடு செய்யப்படும்.
விண்ணப்பத்திற்கான திட்டச்செலவு மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றக்கொள்ளப்பட்டவுடன், நிகழ்வினை நடத்தும் சமூகத்தினர், ஒதுக்கீடு செய்ப்பட்ட நிதி நல்கைக்குள் செலவு செய்தல் வேண்டும்.
செலவு செய்யப்பட்ட தொகையானது அனுமதியளிக்கப்பட்ட திட்டச்செலவினை விட 10% அதிகமானால், அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அதற்குரிய விளக்கங்களை CIS-A2K-விடம் தந்து, இசைவைப் பெற வேண்டும்.
பொதுப் போக்குவரவு, பயணச்சீட்டுகள் தவிர, நிகழ்விற்கான அனைத்து இரசீதுகளும் CIS-A2K பெயரில் இருத்தல் வேண்டும்.
அனைத்து செலவுகளுக்குமான அசல் இரசீதுகளும், ஏற்கத்தக்க வகையில், CIS-A2K-க்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். நமது அமைப்பு தணிக்கைக்காக இவற்றை வழங்குவதற்கு சட்டரீதியாக கடமைப்பட்டுள்ளது
வானூர்தி பயணக்கட்டணத் தொகையானது, ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமான பயணங்களுக்கு மட்டுமே, போதுமான நாட்களுக்கு முன்னமே, அனுமதி பெறப்படும் சூழலில் வழங்கப்படும்.
பயணம், பயணவிடுதி, உணவு ஆகியச் செலவுகளுக்கான ஈட்டுத்தொகையை, CIS-A2K-வின் விதிமுறைகளுக்கு ஒப்பப் பெறலாம்.
நல்கை நிகழ்வு நடைபெறும் பொழுது, CIS-A2K-வின் பணியாளர் நேரிலோ அல்லது இணையவழியாகவோ கலந்து கொள்ளவார்.
நல்கை நிகழ்வு முடிந்தவுடன், நிகழ்வு குறித்த அறிக்கையை மேல்-விக்கியில். கட்டாயமாகத் தெரிவித்தல் வேண்டும்.
விக்கிமீடிய அறக்கட்டளை மற்றும் CIS ஒப்பந்ததாரர்களும், மானியம் பெறுபவர்கள், பணியாளர்களும் இந்த நல்கைநிதியைப் பெற இயலாது.