பித்தப்பைக்கல்
பித்தப்பைக்கல் அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும். இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்கியுள்ள கல்லீரல்-பித்தப்பைத் தொகுதியின் பித்தப்பைக்கான், பொதுப் பித்தக்கான், கணையக் கான், வாட்டரின் குடுவையம் முதலிய வழிகளுக்குச் செல்லக்கூடியது.
பித்தக்கல் | |
---|---|
எண்ணிறந்த சிறிய பித்தக்கற்கள் பெரும்பாலும் கொலசுட்ராலால் உருவானவை. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
ஐ.சி.டி.-10 | K80. |
ஐ.சி.டி.-9 | 574 |
ம.இ.மெ.ம | 600803 |
நோய்களின் தரவுத்தளம் | 2533 |
மெரிசின்பிளசு | 000273 |
ஈமெடிசின் | emerg/97 |
ம.பா.த | D042882 |
பித்தப்பையில் பித்தக்கற்கள் தேங்கியிருப்பது அழற்சி தொடர்புடைய இடர்ப்பாடான கடிய பித்தப்பையழற்சிக்கு வழிகோலலாம். கடிய பித்தப்பையழற்சியில் பித்தம், பித்தக்கற்கள் பித்தப்பையில் தேங்கியிருப்பதால் குடல் நுண்ணுயிரிகளால் இரண்டாம்நிலைத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஏனைய பித்தவழிகளில் கற்கள் தேங்குதல் பித்தக்கான்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை கணையவழற்சி, பித்தக்கான் அழற்சி போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரு இடர்ச் சந்தர்ப்பங்களும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இவை அவசரநிலை மருத்துவ தேவைகளாகக் கருதப்படுகின்றன.
சிறப்பியல்புகள்
தொகுபித்தக்கற்கள் வெவ்வேறு உருவங்களையும் அளவுகளையும் கொண்டவை. ஒரு சிறிய மணற் துணிக்கையின் அளவில் இருந்து குழிப்பந்தின் அளவு வரை இவற்றின் பருமன்கள் வேறுபடக்கூடியவை.[1] பித்தப்பையுள் ஒரு தனித்த பெருங்கல்லாகவோ அல்லது சிறிய பல கற்களாகவோ காணப்படலாம். கற்கள் ஆக்கப்பட்ட பொருட்களைப் பொறுத்து பித்தக்கற்களை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்: கொலசுட்ரால் கற்கள், கரும் நிறமியக் கற்கள், கலப்புக் கற்கள் (பழுப்பு நிறக் கற்கள்)
கொலசுட்ரால் கற்கள்
தொகுகல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீர் கொலசுட்ராலால் அதிசெறிவூட்டப்பட்டதன் விளைவாக கொலசுட்ரால் கற்கள் உருவாகுகின்றன.[2] பொதுவாக இவற்றின் நிறங்கள் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்து கரும்பச்சை, பழுப்பு, சுண்ணாம்பு வெள்ளை நிறம் வரை வேறுபடும். பித்தக்கற்கள் என்று பொதுவாகப் பார்க்குமிடத்து அவற்றில் 80% ஆனவை கொலசுட்ரால் கற்கள் ஆகும்.[3]
கருமை நிறமியக் கற்கள்
தொகுஇவை சிறியவை, கருமையானவை. பிலிரூபின் மற்றும் கல்சியத்தால் ஆக்கப்பட்டுள்ளவை.[4]
உசாத்துணைகள்
தொகு- ↑ Gallstones - Cholelithiasis; Gallbladder attack; Biliary colic; Gallstone attack; Bile calculus; Biliary calculus Last reviewed: July 6, 2009. Reviewed by: George F. Longstreth. Also reviewed by David Zieve
- ↑ Gerard, M. Doherty (2010). Current Diagnosis & Treatment of Surgery. McGraw-Hill Companies, Inc. p. 551. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780071638494.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Harvard University (September 1, 2005). "What to do about gallstones — TheFamily Health Guide". Harvard Health Publications. பார்க்கப்பட்ட நாள் Jan 29, 2015.
- ↑ The Merck Manual (November 2013). "Cholelithiasis". பார்க்கப்பட்ட நாள் Jan 29, 2015.