4
கிபி ஆண்டு 4 (IV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு அல்லது செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும் (பார்க்க: நெட்டாண்டு வழு). அக்காலத்தில் இவ்வாண்டு "கேட்டசு மற்றும் சட்டர்னியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Lamia and Servilius) எனவும், "ஆண்டு 757" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 4 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது நான்காவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 3 ஆகும்.
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 20கள் கிமு 10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள்
|
ஆண்டுகள்: | 1 2 3 - 4 - 5 6 7 |
4 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 4 IV |
திருவள்ளுவர் ஆண்டு | 35 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 757 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2700-2701 |
எபிரேய நாட்காட்டி | 3763-3764 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
59-60 -74--73 3105-3106 |
இரானிய நாட்காட்டி | -618--617 |
இசுலாமிய நாட்காட்டி | 637 BH – 636 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 254 |
யூலியன் நாட்காட்டி | 4 IV |
கொரிய நாட்காட்டி | 2337 |
நிகழ்வுகள்
தொகுஇடம் வாரியாக
தொகுரோமப் பேரரசு
தொகு- பேரரசன் ஆகுஸ்டசு டிபேரியசு என்பவனை ரோமுக்கு அழைத்து தனது வாரிசாகவும், தனக்கு அடுத்த பேரரசன் ஆகவும் அறிவித்தான். அதே நேரம், அகிரிபா பஸ்துமசு என்பவனையும் தனது வாரிசாக அறிவித்தான்.
- டிபேரியசு தனது வார்சாக செருமானிக்கசு என்பவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.
- ரோமப் பேரரசுக்கும் செருமனிய பழங்குடி செருஸ்க்கி என்பவர்களுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
மத்திய கிழக்கு
தொகுபார்த்தியா நிலப்பகுதியின் (இன்றைய ஈரானில்) அரசன் பிராத்தசிசு மற்றும் அரசி மூசா ஆகியோர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அறிவியல்
தொகு- டமாஸ்கசின் நிக்கலாசு 15 பாகம் கொண்ட உலக வரலாற்றை எழுதினார்.
பிறப்புகள்
தொகு- இயேசு கிறிஸ்து இவ்வாண்டிலேயே பிறந்ததாக சிலர் நம்புகின்றனர்[1].
இறப்புகள்
தொகு- ஆர்மீனியாவில் இடம்பெற்ற சமர் ஒன்றில் கையசு சீசர் கொல்லப்பட்டான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ E. P. Sanders, The Historical Figure of Jesus, Penguin Books, 1993, pp. 10–11.