அலைநடத்தி ( Waveguide ) என்பது மின்காந்த அலைகள் , ஒலி அலைகள் போன்ற அலைகளை நடத்தும் ஒரு வடிவம் ஆகும் . ஒவ்வொரு வகையான அலைகளுக்கும் பலவகையான அலைநடத்திகள் உள்ளன .[1][2][3]

அலைநடத்தி

அலைனடத்திகளின் வடிவவியல் மாறுபடும் . ஏனென்றால் பலகையில் உள்ளது போல் ஒரு பரிமாணங்களிலும் , இழைகள் அல்லது குழாய்களில் போல் இரு பரிமாணங்களிலும் இருக்கும் . இதனோடு , பல்வேறு அலைனடத்திகள் பல்வேறு அதிர்வெண்களை நடுத்துவதாக இருக்க வேண்டும் .

இயற்கையாகவே அலைனடத்திகளுக்கு வடிவங்கள் உண்டு . சான்றாக , ஆழ்கடலின் மேற்புறத்தில் உள்ள நீரானது வேல் மீன்கள் இசைப்பதினை வெகு தூரத்திற்கு கடத்த வழிநடத்தும் பண்பைக் கூறலாம் .

அலைகள் அலைனடத்தி சுவரினால் முற்றிலும் எதிர்க்க படுவதால் தொடர்ந்து அந்த சுவரில் முட்டி முட்டி அலைனடுத்தியின் எல்லையிலேயே பயணிக்கிறது .

நியமம்

தொகு

அலைகள் , கோள அலைகளைப் போல் திறந்த வெளியில் அனைத்து திசைகளிலும் பயணிக்கும் . இதன்வழியில் , அவைகள் தனது ஆற்றலை நீளத்தின் சதுக்கத்துக்கு இழக்கிறது . அதாவது R நீளத்தை கடக்கும் பொழுது அதன் ஆற்றலை மூல ஆற்றலில் இருந்து R2 இல் வகுப்பதாக கணிக்கப்படுகின்றது .அலைனடத்தி அலைகளை ஒரு பரிமாணங்களில் வழிநடத்தவும் , அதன் எல்லைக்கும் இருக்கவும் உதவுவதால் , அங்கே ஆற்றலை இழப்பது இல்லை . இதனால் தான் அலைகள் வெகு தூரங்கள் தன் ஆற்றலை இழக்காமல் பயணிக்க முடிகிறது .

மின்காந்த அலைனடத்தி

தொகு

மின்காந்த நிழற்பட்டையின் விரிந்த பகுதியான அலைகளை எடுத்துச் செல்ல அலைக்கடத்தியானது உருவாக்கப் படுகிறது . ஆனால் இது குறிப்பாக ஒலியலை அதிர்வெண்ணிலும் , மைக்ரோ அலைகளிலும் பயன்படுகிறது . அதிர்வெண்களை பொருத்து , அவை உருவாக்கப் படும் மூலப்பொருளான கடத்து பொருளா ? இல்லை இருமுனைகடத்து பொருளா ? என்று தீர்மானிக்கப்படும் .

ஒளி அலைனடத்தி

தொகு

ஒளியதிர்வெண்ணில் பயன்படுத்தும் அலைனடத்திகள் குறிப்பாக இருமுனை மின்கடத்திகள் ஆகும் .

ஒலி அலைனடத்தி

தொகு

ஒலி அலைகளை நடத்தும் ஒலி அலைனடத்திகள் இயல்பானவை . ஒலி நடத்தும் நாளம் ஒரு கடத்தும் பட்டையாக செயல்படுகிறது .

மேற்கோள்கள்

தொகு
  1. Radatz, Jane. The IEEE Standard Dictionary of Electrical and Electronics Terms (6 ed.). IEEE Standards Association. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1559378336.
  2. Weber, R. H. (1902). "Elektromagnetische Schwingungen in Metallrohren". Annalen der Physik 8 (4): 721–751. doi:10.1002/andp.19023130802. Bibcode: 1902AnP...313..721W. 
  3. For bandwidths lower than 2:1 it is more common to express them as a percentage of the center frequency, which in the case of 1.360:1 is 26.55 %. For reference, a 2:1 bandwidth corresponds to a 66.67 % bandwidth. The reason for expressing bandwidths as a ratio of upper to lower band edges for bandwidths greater than 66.67 % is that in the limiting case that the lower edge goes to zero (or the upper edge goes to infinity), the bandwidth approaches 200 %, which means that the entire range of 3:1 to infinity:1 map into the range 100 % to 200 %.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைநடத்தி&oldid=4116281" இலிருந்து மீள்விக்கப்பட்டது