தம்தரி மாவட்டம்
இந்திய மாநிலமான சட்டீஸ்கரில் தம்தரி மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் தம்தரி நகரில் அமைந்துள்ளது.
தம்தரி மாவட்டம் धमतरी जिला | |
---|---|
தம்தரிமாவட்டத்தின் இடஅமைவு சட்டீஸ்கர் | |
மாநிலம் | சட்டீஸ்கர், இந்தியா |
தலைமையகம் | தம்தரி |
பரப்பு | 4,084 km2 (1,577 sq mi) |
மக்கட்தொகை | 799781 (2011) |
படிப்பறிவு | 75.16% |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
புவிப்பரப்பு
தொகுஇந்த மாவட்டத்தில் மகாநதி பாய்கிறது. இந்த ஆற்றின் நீர்வளத்தையும், துணை ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்தியும் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.
பொருளாதாரம்
தொகுஇங்கு 136 அரிசி அரவை ஆலைகள் இயங்குகின்றன. [1]
ரவிசங்கர் சாகர் அணையில் இருந்து பெறும் நீரை குடி நீராகப் பயன்படுத்துகின்றனர். அதைக் கொண்டு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிலப்பரப்பில் 52 சதவிகிதப் பகுதிகள் காட்டுப் பகுதியாக உள்ளன. [2]
மக்கள் தொகை
தொகு2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 7,99,781 மக்கள் வாழ்ந்தனர். [3]சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 236 பேர் வாழ்கின்றனர். [3] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [3] இங்கு வாழ்பவர்களில் 78.95% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]
சான்றுகள்
தொகு- ↑ "Dhamtari Government Website". பார்க்கப்பட்ட நாள் 2006-09-22.
- ↑ "Dhamtari District NCCR". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-09-22.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
தொகு