உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லமுத்து இராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லமுத்து இராமமூர்த்தி
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1956-1962
தொகுதிசென்னை மாநிலம்
முதல்வர் இராணி மேரிக் கல்லூரி, சென்னை
பதவியில்
1946-1950
முன்னையவர்மிஸ் மியர்ஸ்
பின்னவர்எம். இலட்சுமி அம்மாள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-06-15)15 சூன் 1896
இறப்பு13 நவம்பர் 1972(1972-11-13) (அகவை 76)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

டி. நல்லமுத்து இராமமூர்த்தி (Nallamuthu Ramamurthi) என்பவர் இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு மதராஸ் மாநிலத்திலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியினால் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1946ஆம் ஆண்டு மிஸ் மியர்ஸுக்குப் அடுத்து சென்னை இராணி மேரி கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர். இவர்தான் இக்கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் ஆவார்.[1][2][3][4][5][6]

வாழ்க்கை குறிப்பு

[தொகு]

இவர் முத்துலட்சுமி ரெட்டியின் சகோதரி ஆவார். இவர் சென்னையில் உள்ள மகளிர் பள்ளியில் படித்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். பிரித்தானிய அரசாங்கத்தின் பொருளுதவியோடு மேற்படிப்புக்காக இலண்டன் சென்றார். பின்னர் இவர் இராணிமேரி கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார். ராணி மேரி கல்லூரியில் ஐரோப்பிய பெண்களே கல்லூரி முதல்வராக இருந்து வந்த நிலையில். அந்த நடைமுறை மாற்றப்பட்டு முதல் இந்தியப்பெண் முதல்வராக இவர் பொறுப்பேற்றார்.

இதரப் பணிகள்

[தொகு]

• 1926ல் பாரிசில் நடைபெற்ற பிரித்தானிய காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

• இந்திய மகளிர் சங்கத்தின் சென்னை மாநிலத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

• 1932ல் மகளிருக்கு வாக்குரிமை வழங்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட லோதியன் குழுவில் பங்கெடுத்துள்ளார்.

• செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்.

• வரதட்சணை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற துணைக்குழுவின் உறுப்பினர்.

• பன்னாட்டுப் பெண்கள் அமைதி சங்கத்திற்கான துணைத்தலைவர்

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  2. S. Vats; Shakuntala Mudgal (1998). Development of women in modern India. Om Publications. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86867-01-3. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  3. Radha Krishna Sharma (1981). Nationalism, Social Reform and Indian Women: A Study of the Interaction Between Our National Movement and the Movement of Social Reform Among Indian Women, 1921-1937. Janaki Prakashan. p. 92. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  4. Sport & Pastime. 1964. p. 46. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  5. Monica Felton (2003). A Child Widow's Story. Katha. pp. 138–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87649-91-5. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  6. "PRINCIPAL'S LIST QUEEN MARY'S COLLEGE (AUTONOMOUS), CHENNAI-4". Queen Mary's college. Archived from the original on 25 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.