மிரி பிரிவு
மிரி பிரிவு | |
---|---|
Miri Division | |
சரவாக் | |
கொடி | |
சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு | |
ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | மிரி பிரிவு |
நிர்வாக மையம் | மிரி |
உள்ளூர் நகராட்சி | 1. மிரி மாநகர மன்றம் Miri City Council (MBM) 2. சுபிசு மாவட்ட மன்றம் Majlis Daerah Subis (MDS) 3. மருடி மாவட்ட மன்றம் Majlis Daerah Marudi (MDM) |
அரசு | |
• ஆளுநர் (Resident) | முசுதபா சுலகி (Hj. Mastapa bin Hj. Julaihi) |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,777.1 km2 (10,338.7 sq mi) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 3,16,400 |
• அடர்த்தி | 12/km2 (30/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | QM |
மிரி பிரிவு (மலாய் மொழி: Bahagian Miri; ஆங்கிலம்: Miri Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். காப்பிட் பிரிவுக்குப் பிறகு, மாநிலத்தில் இரண்டாவது பெரிய பிரிவு. இந்த பிரிவின் தலைநகர் மிரி நகரம்.
மிரி நகரமும் மிரி பிரிவும் வளர்ச்சி அடைவதற்கு முக்கியக் காரணம் அங்கு தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணறுகள் தான். மிரி நகரம் நிறுவப் படுவதற்கு முன்பு, சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக மருடி (Marudi) நகரம் இருந்தது. பெட்ரோலியத் தொழில் காரணமாக, அதிக அளவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் உள்ளனர்.
பொது
[தொகு]இனக்குழுக்களின் அடிப்படையில் மிரி பிரிவில் அதிகமாக வாழும் மக்கள் இனவாரியாக:
- இபான்
- சீனர்கள்
- மலாய்க்காரர்
- புரூணை மலாய்க்காரர்
- கெடாயான்
- மெலனாவ்
- காயான்
- கென்னியா
- லுன் பாவாங்
- கெலாபிட்
மிரி பிரிவு மாவட்டங்கள்
[தொகு]மிரி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- மிரி மாவட்டம் (Miri District)
- மருடி மாவட்டம் (Marudi District)
- தெலாங்கு ஊசான் மாவட்டம் (Telang Usan District)
வரலாறு
[தொகு]1910-ஆம் ஆண்டில், ராயல் டச்சு செல் (Royal Dutch Shell) எனும் நிறுவனத்தின் மூலமாக முதல் எண்ணெய்க் கிணறு மிரியில் தோண்டப்பட்டது. அதன் பின்னர்தான் மிரி எனும் நகரமே வெளிச்சத்திற்கு வந்தது.
மிரியில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டது, மிரி நகரத்தின் விரைவான வளர்ச்சிக்கு பெரிய அளவில் வழிவகுத்தது. அதன் விளைவாக 1929-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாகவும் மாறியது.
பொது
[தொகு]2005-ஆம் ஆண்டில், மிரி பிரிவில் உள்ள மிரி நகரம், மலேசியாவின் அதிகாரப்பூர்வ மாநகரத் தகுதியைப் பெற்றது. மலேசியாவில் மாநகர்த் தகுதியைப் பெற்ற 10-ஆவது நகரமாக விளங்குகிறது. அத்துவடன் மிரி பிரிவு பல வரலாற்றுத் தடங்களைக் கொன்டு உள்ளது.
- முலு மலை தேசியப் பூங்கா (Gunung Mulu National Park);
- லோகான் பூனுட் தேசியப் பூங்கா (Loagan Bunut National Park);
- லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா (Lambir Hills National Park),
- நியா தேசிய பூங்கா (Niah National Park)
- மிரி-சிபுட்டி பவளப்பாறை தேசியப் பூங்கா (Miri-Sibuti Coral Reef National Park)
ஆகியவற்றின் முக்கிய சுற்றுலா இடங்களின் நுழைவாயிலாகவும் மிரி விளங்குகிறது.[1][2]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Diving in Miri-Sibuti Coral Reefs National Park". Sarawak Tourism Board. Archived from the original on 21 March 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
- ↑ "Miri Nature Society: Coral reefs in Miri under threat". The Borneo Post. 21 June 2010 இம் மூலத்தில் இருந்து 22 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222041018/http://www.theborneopost.com/2010/06/21/miri-nature-society-coral-reefs-in-miri-under-threat/.