உள்ளடக்கத்துக்குச் செல்

பொங்கல் (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கல்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, பாசிப்பருப்பு, பால்(பொங்கல் பண்டிகையின், பொங்கல்)
வேறுபாடுகள்சக்கரைப்பொங்கல், வெண் பொங்கல்

பொங்கல் என்பது தென்னிந்தியாவில் அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல் எனப் பல வகைப்படும். மிளகுப் பொங்கல் காலை உணவாகவும், சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கப்படுகிறது.

இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கி இருக்கின்றன.[1][2][3]

பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது.

உலையில் உள்ள நீரைப் பொங்கவிட்டுப் பொங்கல் செய்யப்படுவதால், பொங்கல் என்பதை ஆகு பெயராகவும் கருதலாம்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Verma, Priyanka (2014). Pongal: Festival Of India. Diamond Pocket Books Pvt Ltd. p. 4.
  2. Shanmugalingam, Cynthia (2022). Rambutan: Recipes from Sri Lanka. Bloomsbury Publishing. p. 210.
  3. Everyday Ayurveda Cooking for a Calm, Clear Mind: 100 Simple Sattvic Recipes. Shambhala. 2018. p. 261.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கல்_(உணவு)&oldid=4101096" இலிருந்து மீள்விக்கப்பட்டது