உள்ளடக்கத்துக்குச் செல்

சியாமளா கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Shyamala Goli" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:39, 5 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்

சியாமளா கோலி ( Shyamala Goli ) கோலி சியாமளா என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய நீச்சல் வீராங்கனையும், தயாரிப்பாளரும் படைபாக்க இயக்குனரும் மற்றும் இயங்குபடத் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். மேலும், பூலா சவுத்ரிக்குப் மார்ச் 2021 இல், பிறகு பாக்கு நீரிணையைக் கடந்த இரண்டாவது இந்தியப் பெண் மற்றும் உலகின் இரண்டாவது பெண்மணி என்ற சாதனையில் இடம்பெற்றார். [1] இவர் தனது 47 வயதில் இந்த சாதனையை முடித்தார் [2]

தொழில்

இவர் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஐதராபாத்தில் ஒரு இயங்கு பட நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு அதன் திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். [3] பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குபட நிறுவனத்தை நடத்தி வந்த இவர், நிதி நெருக்கடி காரணமாக அதிலிருந்து விலக முடிவு செய்தார். [4]

தெலங்காணாவின் ஐதராபாத்தில் சியாமளா, சிறு குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் தனது 44 வயதில் நீச்சலில் ஆர்வத்தைத் தொடர்ந்தார். இதற்காக, 2016 இல் ஒரு கோடைகால முகாமில் சேர்ந்தார் [5] அக்வாபோபியா எனப்படும் நோயிலிருந்து மீள்வதற்காக நீச்சலில் தனது வாழ்க்கையைத் தொடங்கியதாக பின்னர் தெரிவித்தார். இவருக்கு மூத்த இந்தியக் காவல் பணி அலுவலர் ராஜீவ் திரிவேதி பயிற்சி அளித்து வழிகாட்டினார். [6] 2019 இல் பட்னாவில் உள்ள கங்கை ஆற்றில் 13 கி.மீ. தூரம் வரை கடந்து நீச்சலில் தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.  [7]

2019 ஆம் ஆண்டில், விசயவாடாவில் கிருஷ்ணா நதி, பட்னாவில் கங்கை நதி மற்றும் கொல்கத்தாவில் ஹூக்ளி நதி ஆகியவற்றையும் நீந்திக் கடந்தார். தென் கொரியாவின் குவான்ஜுவில் நடைபெற்ற 2020 ஃபினா உலக வாகையாளர் போட்டியில் தெலங்காணாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [8] கங்கை ஆற்ரில் நடந்த 2019 தேசிய திறந்தவெளி நீர்நிலை நீச்சல் போட்டியிலும் போட்டியிட்டார். மேலும் குசராத்தின் போர்பந்தரில் நடைபெற்ற 2019 கடல் நீச்சல் போட்டியிலும் பங்கேற்றார்.

பாக்கு நீரிணை பயணம்

பின்னர், சியாமளா, மார்ச்சு மாதம், 2020 ஆண்டில் 30 மைல் நீளமுள்ள பாக்கு நீரிணையை நீந்த முயன்றார். பாக்கு நீரிணையை நீந்துவதற்கு இவர், தயாராக இருந்தபோதிலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அந்த முயற்சியை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. மார்ச்சு 8, 2020 அன்று, இவரது திட்டமிடப்பட்ட பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. [9]

COVID-19 தொற்றுநோய் காரணமாக ஓய்வு எடுத்த பிறகு, நவம்பர் 2020 இல் பாக்கு நீரிணை சாதனையை முடிப்பதற்காக தனது தயாரிப்பு மற்றும் பயிற்சியைத் தொடங்கினார். பாக்கு நீரிணை பயணத்திற்காக காச்சிபௌலியில் உள்ள தெலங்காணா மாநில நீச்சல் குளத்தில் விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்றார். [8] சரியாக ஒரு வருடம் கழித்து, இந்திய உயர் ஆணையாளர் மற்றும் இலங்கை உயர் ஆணையாளர் ஆகியோரின் ஆதரவுடன் பாக்கு நீரிணையைக் கடக்கும் தனது இரண்டாவது முயற்சியைத் தொடங்கினார். மார்ச்சு 19, 2021 அன்று, சியாமளா, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் அரிச்சல்முனைக்கு தனது பயணத்தை அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி 13 மணி நேரம் 43 நிமிடங்கள் பாக்கு நீரிணையைக் கடந்து வெற்றிகரமாக நீந்தினார். [9] இவர் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு பயணத்தை முடித்தார். [10] பயணத்தின் கடைசி ஐந்து மணி நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டதாக பின்னர் தெரிவித்தார். பயணத்தின் போது, இந்திய நீச்சல் கூட்டமைப்பைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் இவருடன் சென்றனர். [4]

இந்த சாதனையை மேற்கொண்டதினால், இவர் பாக்கு நீரிணையைக் கடந்த இரண்டாவது பெண் நீச்சல் வீரராகவும், உலகளவில், பதின்மூன்றாவது நீச்சல் வீரராகவும், தெலங்காணாவிலிருந்து இச்சாதனையை எட்டிய முதல் நபராகவும் ஆனார். [11] [12] ஆங்கிலக் கால்வாயை நீந்தும்போது நீச்சல் வீரர்கள் வெற்றிகரமாகப் பயணம் செய்ததைப் படித்த பிறகு இவர் பாக்கு நீரிணையை நீந்தத் தூண்டப்பட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். [7]

மேற்கோள்கள்

  1. . 2021-03-20. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. . 2021-03-18. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. . 2021-03-20. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  4. 4.0 4.1 . 2021-03-22. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  5. Service, Tribune News. "Syamala second Indian woman to conquer Palk Strait". பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  6. "Woman swims from Talaimannar to Arichalmunai". 2021-03-19. https://www.thehindu.com/news/cities/Madurai/woman-swims-from-talaimannar-to-arichalmunai/article34111184.ece. 
  7. 7.0 7.1 Adivi, Sashidhar (2021-03-22). "Shyamala Goli swims across the Palk Strait". பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  8. 8.0 8.1 "Hyderabad entrepreneur second woman to swim across Palk Strait". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  9. 9.0 9.1 "Woman swims from Sri Lanka to India across Palk Strait". www.adaderana.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  10. TelanganaToday (19 March 2021). "Hyderabad's Syamala Goli becomes second woman ever to swim across Palk Strait". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  11. "பாக்கு நீரிணையை நீந்தி கடந்த 2வது பெண்; செம சர்ப்ரைஸ் கொடுத்த தெலங்கானா ஆசிரியை!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  12. "Indian becomes the second woman to swim across the Palk Straits". EconomyNext. 2021-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமளா_கோலி&oldid=3903253" இலிருந்து மீள்விக்கப்பட்டது