உள்ளடக்கத்துக்குச் செல்

திங் லிரேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:59, 22 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்

திங் லிரேன்
Ding Liren
2023 இல் திங்
நாடுசீனா
பிறப்பு24 அக்டோபர் 1992 (1992-10-24) (அகவை 32)
உவென்சூ, செச்சியாங், சீனா
பட்டம்சதுரங்கப் பேராதன் (2009)[1]
உலக வாகையாளர்2023–இன்று
பிடே தரவுகோள்2799 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2816 (நவம்பர் 2018)
தரவரிசைஇல. 3 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைஇல. 2 (நவம்பர் 2021)

திங் லிரேன் அல்லது திங் லிசேன் (Ding Liren, சீனம்: 丁立人; பிறப்பு: 24 அக்டோபர் 1992) சீன சதுரங்க பேராதனும், நடப்பு உலக சதுரங்க வாகையாளரும் ஆவார். இவர் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்ற சீன சதுரங்க வீரரும், மூன்று முறை சீன சதுரங்க வாகையாளரும் ஆவார். திங் லிரேன் உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டியில் விளையாடி பிடே உலகத் தரவரிசையில் 2800 எலோ மதிப்பெண்ணைக் கடந்த முதல் சீன வீரர் ஆவார்.[2] சூலை 2016 இல், 2875 மின்வல்லு மதிப்பீட்டுடன், இவர் உலகின் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற மின்வல்லு வீரர் ஆவார்.[3] சூலை 2023 இல், திங் 2830 மதிப்பெண்ணுடன் முதல்தர விரைவு வல்லு வீரர் ஆனார்.[4]

ஆகத்து 2017 முதல் நவம்பர் 2018 வரை மரபார்ந்த சதுரங்கத்தில் திங் தோற்கடிக்கப்படவில்லை, 29 வெற்றிகளையும் 71 சமன்களையும் பதிவு செய்தார். இந்த 100-விளையாட்டு ஆட்டமிழக்காத தொடர் உயர்மட்ட சதுரங்க வரலாற்றில் மிக நீளமானது,[5] மாக்னசு கார்ல்சன் 2019 இல் இதை முறியடித்தார்.[6] 2022 ஆம் ஆண்டுக்கான வேட்பாளருக்கான போட்டியில் திங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கார்ல்சன் தனது வாகைப் பட்டத்தைக் காக்க மறுத்ததால், இயான் நிப்போம்னியாசிக்கு எதிரான 2023 உலக சதுரங்க வாகையாளருக்காக திங் தன்னைத் தகுதிப்படுத்தினார். மரபார்ந்த விளையாட்டில் 7-7 என்ற சமநிலைக்குப் பிறகு விரைவு சமன்முறிகளில் நிப்போம்னியாசியை 2½-1½ என்ற கணக்கில் தோற்கடித்து, திங் வென்று, உலக சதுரங்க வாகையாளரானார்.

உலக வாகையாளர் (2023-இன்று)

ஏப்ரல் 2023 இல், "நிப்போம்னியாசி எதிர் திங் திரேன்" உலக வாகையாளர் போட்டி மரபார்ந்த பகுதியுடன் தொடங்கி 7-7 என சமநிலையில் முடிந்தது. திங் பின்னர் நிப்போம்னியாசியை விரைவு சமன்முறியில் தோற்கடித்தார், நான்காவது ஆட்டத்தை கருப்புக் காய்களுடன் விளையாடி வென்றார்.[7] இதன்மூலம் திங் (பெண்கள் அல்லாத) உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைப் பெற்ற முதல் சீன வீரர் ஆனார்.

மதிப்பெண் மரபு புள்ளிகள் விரைவு மொத்தம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
 நிப்போம்னியாசி (பிடே) 2795 ½ 1 ½ 0 1 0 1 ½ ½ ½ ½ 0 ½ ½ 7 ½ ½ ½ 0
 திங் லிரேன் (CHN) 2788 ½ 0 ½ 1 0 1 0 ½ ½ ½ ½ 1 ½ ½ 7 ½ ½ ½ 1

உலக வாகையாளர் பட்டத்தை வென்ற பிறகு, ஊக்கமின்மை காரணமாக திங் போட்டிகளிலிருந்து ஒன்பது மாத இடைவெளி எடுத்தார்.[8] சனவரி 2024 இல் டாட்டா ஸ்டீல் சதுரங்கச் சுற்றில் 13 இற்கு 6 என்ற கணக்கில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.[9]

2024 நவம்பரில் நடக்கவிருக்கும் 2024 உலக வாகையாளர் சுற்றில் இவர் தனது பட்டத்தைத் தக்க வைக்க இந்தியாவின் குகேசை எதிர்த்துப் போட்டியிடுவார்.

மேற்கோள்கள்

  1. Administrator. "FIDE Title Applications (GM, IM, WGM, WIM, IA, FA, IO)".
  2. "Ding Liren: Quiet Assassin". chess24.com. 23 May 2020.
  3. "Search results: July 2016". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  4. "Search results: July 2023". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2 August 2023.
  5. Peterson, Macauley (11 November 2018). "Ding defeated! Tiviakov celebrates!". ChessBase.
  6. Overvik, Jostein; Strøm, Ole Kristian (21 October 2019). "Magnus Carlsen satte verdensrekord: 101 partier uten tap". Verdens Gang.
  7. Graham, Bryan Armen (30 April 2023). "Ding Liren defeats Ian Nepomniachtchi to win World Chess Championship – live" (in en-GB). the Guardian. https://www.theguardian.com/sport/live/2023/apr/30/world-chess-championship-live-tiebreaks-ian-nepomniachtchi-ding-liren. 
  8. Leonard Barden (January 5, 2024). "Chess: forgotten world champion Ding Liren to return at Wijk aan Zee". தி கார்டியன். https://www.theguardian.com/sport/2024/jan/05/chess-world-champion-ding-liren-to-return-at-tata-steel-wijk-aan-zee. 
  9. "Tata Steel Chess 2024: Masters Results".

வெளி இணைப்புகள்

முன்னர் உலக சதுரங்க வாகையாளர்
2023–இன்று
பதவியில் உள்ளார்
முன்னர்
நி உவா
வாங் காவோ
சீன சதுரங்க வாகையாளர்
2009
2010–2011
பின்னர்
வெய் யி
"https://ta.wikipedia.org/w/index.php?title=திங்_லிரேன்&oldid=3938403" இலிருந்து மீள்விக்கப்பட்டது