சனவரி 2014
<< | சனவரி 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
சனவரி 2014 (January 2014) , 2014 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் சனவரி 14, செவ்வாய்க்கிழமை தொடங்கி, பெப்ரவரி 12 புதன்கிழமை முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435ம்ஆண்டின் ரபி உல் அவ்வல் மாதம் சனவரி 3 வெள்ளிகிழமை தொடங்கி சனவரி 31 வெள்ளிகிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- சனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
- சனவரி 1 - சாக்கிய நாயனார் குருபூசை
- சனவரி 8 - வாயிலார் நாயனார் குருபூசை
- சனவரி 7 - கிறிஸ்துமஸ் (மரபுவழி)
- சனவரி 13 - போகி
- சனவரி 14 - தமிழ்ப் புத்தாண்டு
- சனவரி 14 - தைப்பொங்கல்
- சனவரி 15 - மாட்டுப் பொங்கல்
- சனவரி 15 - திருவள்ளுவர் ஆண்டு (2041) பிறப்பு
- சனவரி 16 - காணும் பொங்கல்
- சனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்
- சனவரி 26 - உலக சுங்கத்துறை நாள்
- சனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்
- சனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- சனவரி 31:
- பிலிப்பீன்சு இராணுவத்தினருக்கும் பாங்சமாரோ இசுலாமிய விடுதலை இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் 52 போராளிகள் உட்பட 53 பேர் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டனர். ஏஎஃப்பி)
- அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கையை வந்தடைந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அமெரிக்கத் தூதரகத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். (தமிழ்வின்)
- சனவரி 30:
- இந்தியாவிற்குள் ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேசத்தின் ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மொதியுர் ரகுமான் நிசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் இரண்டு மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 55 ஆக உயர்ந்துள்ளது.
- பக்தாத் நகரில் இடம்பெற்ற ஆறு தற்கொலைத் தாக்குதல்களில் 24 பணயக் கைதிகள் கொல்லப்பட்டனர். [(ராய்ட்டர்சு)
- பிலிப்பீன்சு சிறையில் இருந்து 182 கைதிகள் தப்பித்தனர். இவர்களில் 148 பேர் கைது செய்யப்பட்டனர். (பொக்சு)
- சனவரி 29:
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் ஐந்து மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 53 ஆக உயர்ந்துள்ளது.
- பிலிப்பீன்சில் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற வன்முறைகலில் 40 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்தியாவின் மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எண்ணெய்த் தாங்கியுடன் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர். (என்டிரிவி)
- எட்வேர்ட் சுனோவ்டன் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். (புளூம்பர்க்)
- சாதாரண கலங்களை குருத்தணுவாக மாற்றும் முயற்சியில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். (நியூயோர்க் டைம்சு)
- சனவரி 28:
- நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உக்ரைன் பிரதமர் மிக்கொலா அசாரொவ் தனது பதவி விலகல் கடிதத்தை அரசுத்தலைவரிடம் கையளித்தார். (சிபிசி)
- சீனாவின் கிழக்கே படவைக் காய்ச்சலால் 19 பேர் இறந்ததை அடுத்து அங்கு கோழி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. (நியூஸ்.கொம்)
- சனவரி 27:
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் மூன்று மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 47 ஆக உயர்ந்துள்ளது.
- நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகளில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது
- நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சினைப் படுகொலை செய்தாரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பலத்த காவலின் மத்தியில் மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டார். (தமிழ்மிரர்)
- சனவரி 26
- அந்தமான் தீவுக் கரையில் சுற்றுலாப் படகு மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்தனர், 11 பேரைக் காணவில்லை. (பிபிசி)
- 2014 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் நடாலை வென்றார். (பிபிசி)
- கிரேக்கத்தின் கெபலோனியா தீவை நிலநடுக்கம் தாக்கியது
- சனவரி 25:
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் ஒரு மண்டையோடு மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 43 ஆக உயர்துள்ளது. (தமிழ்வின்)
- 2007 ஆம் ஆண்டில் கப்பல் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அறுவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- அல்லாஹ் பெயரால் எழுந்த சிக்கலை அடுத்து மலேசிய அரசு அங்கு இனப்படுகொலை நடத்துவதாக மலேசியக் கிறித்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள். (மலே மெயில்)
- சனவரி 24:
- நாடு திரும்ப விரும்பிய இலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- சனவரி 23:
- எஸ்என் 2014ஜே என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பு மெசியர் 82 என்ற விண்மீன் பேரடையில் கண்டுபிடிக்கப்பட்டது, (AAVSO)
- சனவரி 22:
- தென்னாப்பிரிக்காவில் மிக அரிதான நீல வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
- புவி சூடாதல் தொடர்வதாக நாசா, மற்றும் தேசிய கடல், வளிமண்டல நிருவாக மையம் அறிவித்துள்ளன. (ஏபிசி)
- சனவரி 21:
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் 700 பேர் தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர். (லங்காசிறீ).
- உக்ரைன் தலைநகர் கீவில் இரண்டாம் நளாகக் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை இடம்பெற்றது. (பிபிசி)
- தீவிரவாதிகள் 26 பேர் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டனர். (ஏபி)
- இந்தியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்து விட்டதாகக் கூறி, 15 பேரின் மரணதண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது. (பிபிசி)
- சனவரி 20:
- நியூசிலாந்தின் வடக்குத் தீவில் தலைநகர் வெலிங்டனுக்கு அருகே 6.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (நியூசிலாந்து எரால்டு)
- உருசியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசுத்தலைவர் பூட்டினுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் (லங்காசிறீ).
- பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் (லங்காசிறீ).
- சனவரி 19:
- பாக்கித்தானில் பான்னு நகரில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நோர்வேயின் வரலாற்றுப் புகழ்மிக்க லார்டல்சியோரி என்ற கிராமத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 10 வீடுகள் சேதமடைந்தன. (பிபிசி)
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 18-30 வரையான ஆண்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என பிரதமர் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்தார். (அராபியன் பிசினெசு)
- ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து ஈரானில் உள்ள அணு உலைகளைப் பார்வையிட பன்னாட்டு அணுவாற்றல் கழக நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தெகரான் வந்து சேர்ந்தனர். (தினமணி)
- ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். (பிபிசி)
- செவ்வாய்க் கோளில் தானியங்கள் பயிரிட முடியும் என அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். {லங்காசிறீ)
- நாளாந்தம் 20 கோடி குறுந்தகவல்களை ஐக்கிய அமெரிக்கா உளவு பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லங்காசிறீ)
- பிபிசி ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கொம்லா டுமொர் காலமானார் (பிபிசி).
- சனவரி 18:
- மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. (பிபிசி)
- உருசியாவின் தாகெஸ்தான் மாநிலத்தில் மக்காச்கலா நகருக்கு அருகில் பாதுகாப்புப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் 7 இசுலாமியப் போராளிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- தெற்கு சூடானின் போர் நகரை இராணுவத்தினர் போராளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினர். (பிபிசி)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் மத வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன. (பிபிசி)
- சனவரி 17:
- மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. (தமிழ்வின்)
- தாய்லாந்து, பேங்காக் நகரில் அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் குண்டுகள் வெடித்ததில் பலர் படுகாயமடைந்தனர். (ஏபி)
- காபூலில் உணவகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 14 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட சப்பானியர்களில் கடைசியாக சரணடைந்தவர்களில் ஒருவர் ஹிரூ ஒனோடா (1974 இல் பிலிப்பீன்சில் சரணடைந்தார்) 91வது வயதில் காலமானார். (சீஎனென்)
- இங்கிலாந்தின் வின்ஸ்டர் நகரில் 1999 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட இடுப்பு வளைய எலும்புத் துண்டு பேரரசர் ஆல்பிரட் அல்லது அவருடைய மகன் மூத்த எட்வர்டுடையது என கணிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- மும்பை நகரில் முஸ்லிம் மதத்தலைவர் முகம்மது புரானுதீன் வீட்டில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். (எஸ்பிஎஸ்)
- சனவரி 16:
- வட மாகாண சபை முதலமைச்சர் க. வி. விக்னேசுவரனின் புதிய உள்ளூராட்சி அமைச்சு பணியகம் யாழ்ப்பாணம், இல. 26, சோமசுந்தரம் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. (தமிழ்வின்)
- ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் பிரிவினர் ஈராக்கியர்களின் உடல்களை எரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டன. (சீஎனென்)
- ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வெப்பநிலை 43.பாகை செல்சியசை எட்டியதை அடுத்து ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. (ராய்ட்டர்சு)
- சனவரி 15:
- இந்தியக் கோயில் ஒன்றில் திருடப்பட்ட 11ம்-12ம் நூற்றாண்டு சிற்பங்களை ஐக்கிய அமெரிக்கா [இந்தியா]]விடம் திரும்ப ஒப்படைக்கவிருக்கிறது. (பிபிசி)
- ஒருபால் திருமணம் புரிவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் நைஜீரியாவில் நிறைவேற்றப்பட்டது. (விஓஏ)
- தேசிய பாதுகாப்பு முகவர் நிலயன் கணினிகளை நோட்டமிட வானொலி அலைகளைப் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (நியூயோர்க் டைம்சு)
- சனவரி 14:
- மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை அருகி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
- சனவரி 13:
- புவேர்ட்டோ ரிக்கோ கரையோரப் பகுதியில் 6.5 நிலநடுக்கம் பதிவானது. (ராய்ட்டர்சு)
- போர்த்துகல் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2013 ஃபீஃபா தங்கப் பந்தை வென்றார். (தி டெலிகிராப்)
- சீனா வூ-14 எனப்படும் மீயுயர்வேக ஏவுகணையை சோதித்தது. இதன் அதியுயர் வேகம் மாக் 8 முதல் 12 ஆகும். (நியூஸ்மாக்ஸ்)
- இலங்கை, நீர்கொழும்பு பகுதியில் ஆமைகளை இறைச்சிக்காக கொலைசெய்து விற்கப்படும் இடம் ஒன்றை காவல்துறையினர் பரிசோதனையில் முடக்கினர்.
- சனவரி 12:
- இலங்கையில் கிக்கடுவை, ஹோமகமை ஆகிய இடங்களில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் பௌத்த மதகுருக்கள், மற்றும் கும்பலினால் சேதமாக்கப்பட்டன. (பிபிசி)
- கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்வு கலிபோர்னியாவில் நடந்தது. (எல்லே டைம்சு)
- இலங்கையின் மேற்கு, தெற்கு மாகாணசபைகள் கலைக்கப்பட்டன. (டெய்லிநியூசு)
- இலங்கை, வடமாகாண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசினார். (தமிழ்மிரர்)
- சனவரி 11:
- திபெத்தின் பழம்பெரும் டுக்கெசோங் நகரின் ஒரு பகுதி தீயினால் அழிந்தது. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்தன. (ஏபிசி)
- குறு ஒளிர்வண்டம் ஒன்றில் பால் வழியின் நடுவில் கருந்துளை ஒன்று விண்மீன் ஒன்றை விழுங்கியது முதற் தடவையாகப் படம் பிடிக்கப்பட்டது. (ஆஸ்ட்ரோனொமி)
- யாழ்ப்பாண மாவட்டத்துக்கான பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பணியில் அமர்ந்தார். (தமிழ்வின்)
- இரணைதீவுக் கடலில் 1998 இல் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட, லயன்எயார் பறப்பு 602 இலிருந்து மீட்கப்பட்ட 72 தடயப் பொருட்கள் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்பாக அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டன. (தமிழ்வின்)
- சனவரி 10:
- 1974 சனவரி 10 இல் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 9 பொதுமக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. (தமிழ்வின்)
- விசா மோசடி தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோபர்கடே அமெரிக்க நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டு பதியப்பட்டு நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார். (யூஎசஸ்ஏ டுடே)
- சனவரி 9:
- சப்பானில் மிட்சுபிசி வேதித் தொழிற்சாலையில் வெடிப்பு ஒன்றில் ஐவர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர். (ஆர்.ரி)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் ஹமா மாகாணத்தில் வாகனக் குண்டு ஒன்று வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- உருசியாவின் ஸ்தாவ்ரபோல் நகரில் 4 வாகனங்களில் சூட்டுக் காயங்களுடன் 5 இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. (சிஎன்என்)
- இந்தோனேசியாவில் சினாபுங் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது. (வயர்ட்)
- கியூபா தலைநகர் அவானாவில் இருந்து 112 மைல் கிழக்கே புளோரிடா நீரிணையில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (மியாமி எரால்டு)
- சனவரி 8:
- தெற்கு ஏமனில் அமெரிக்கா ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குதலில் அல் காயிதா போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- இந்தியாவில் மும்பையில் இருந்து புறப்பட்ட தொடருந்து ஒன்று தீப்பற்றியதிஉல் ஒன்பது பயணிகள் உயிரிழந்தனர். (பிபிசி)
- ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவின் லிட்டில் ஐ லேப்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கியது. (எக்கனொமிக் டைம்ஸ்)
- கத்தாரில் இடம்பெறவிருக்கும் 2022 கால்பந்துப் போட்டிகள் கோடைகாலத்தில் அல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்த இறுதி முடிவு 2014 உலகக் கோப்பைக்குப் பின்னர் எடுக்கப்படும். (பிபிசி)
- சனவரி 7:
- யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் என்ற 9 பேர் அடங்கிய ஆயுதக் குழுவொன்றை காவல்துறையினர் கைது செய்தனர். (தினகரன்)
- சனவரி 6:
- போர்க்குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ராப் ஆறு நாட்கள் அரச முறைப் பயணமாக இலங்கை வந்தார். (கல்ஃப் டைம்சு)
- இலங்கை, மன்னாரில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 7 (மொத்தம் 32) மனித உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. (உதயன்)
- நைஜீரியாவின் மத்திய பகுதியில் சோனொங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை −51 °செ (−60 °ப) ஆகப் பதிவானது. (லொஸ் எஞ்சலீசு டைம்சு)
- சனவரி 5:
- ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசசு கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. (ஏபிசி)
- இந்தியாவின் ஜிசாட்-14 எனும் தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை ஜி. எஸ். எல். வி டி5 ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. (தி இந்து)
- இலங்கையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து முல்லைத்தீவு, பருத்தித்துறைக் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். (தமிழ்மிரர்)
- வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இத்தேர்தலில் பங்குபற்றாமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். (பிபிசி)
- சனவரி 4:
- தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்ததை அடுத்து தனது பயணத்தை இடைநிறுத்தி இந்தியா சென்றார். (தமிழ்வின்)
- இந்தியாவின் கோவா மாநிலத்தில் 5-மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- சனவரி 3:
- ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியைப் பெரும் பனிச் சூறாவளி தாக்கியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 13 பேர் கொல்லப்பட்டனர். (என்பிசி)
- இலங்கை, மன்னார், மாந்தைப் பகுதியில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 4 (மொத்தம் 15) மனித உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. (தமிழ்வின்)
- சர்ச்சைக்குரிய திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது. (தினகரன்)
- சனவரி 2
- லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் இடம்பெற்ற கார்க் குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டு, 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- மேற்கு இந்தியாவில் மால்செச் மலைதொடரில் ஆழ்பள்ளத்தாக்கு ஒன்றில் பேருந்து ஒன்று வீழ்ந்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர். (எம்எஸ்என்)
- ரீயூனியன் தீவை சூறாவளி பெஜிசா தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. (யூரோநியூஸ்)
- அண்டார்க்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் சிக்கிய அக்காதெமிக் சொக்கால்ஸ்கி என்ற உருசிய சுற்றுலா, ஆய்வுக் கப்பல் பயணிகள் 52 பேர் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டனர். (பிபிசி)
- 2014ஏஏ என்ற 5-மீட்டர் விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியது. புவி வளிமண்டலத்திலேயே இது எரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. (ரியாநோவஸ்தி)
- சனவரி 1:
- இந்தோனேசியாவில் காவல்துறையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- சோமாலித் தலைநகர் மொகடிசுவில் உணவு விடுதிக்கு முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 11 பேர் கொல்லப்பட்டனர். (Standard Media), (ராய்ட்டர்சு)
- செக் குடியரசில் பாலத்தீனத் தூதுவர் ஜமால் அல் ஜமால் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். (ராய்ட்டர்சு)
- யூரோ வலயத்தின் 18வது உறுப்பு நாடாக லாத்வியா இணைந்தது
இறப்புகள்
[தொகு]- சனவரி 3 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)
- சனவரி 11 - ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)
- சனவரி 12 - அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
- சனவரி 13 - அஞ்சலிதேவி, திரைப்பட நடிகை (பி. 1927)
- சனவரி 17 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)
- சனவரி 19 - ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பல்சான் பரிசு பெற்றவர் (பி. 1929)
- சனவரி 22 - அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)
- சனவரி 23 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி
- சனவரி 27 - ஆர். ஏ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்