டைக்கோ பிராகி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டைக்கோ ஆட்டசென் பிராகி Tycho Ottesen Brahe | |
---|---|
பிறப்பு | 14 டிசம்பர் 1546 இசுக்கானியா, டென்மார்க் |
இறப்பு | 24 அக்டோபர் 1601 பிராகா, புனித உரோமைப் பேரரசு | (அகவை 54)
தேசியம் | டென்மார்க்கியர் |
கல்வி | தனிப்பட்ட |
பணி | வானியலாளர் |
சமயம் | லூதரனியம் |
பெற்றோர் | ஓட்டெ பிராகி, பீட் |
வாழ்க்கைத் துணை | கிர்ஸ்டன் பார்பரா |
பிள்ளைகள் | 8 |
கையொப்பம் |
டைக்கோ ஆட்டசென் பிராகி (Tyge Ottesen Brahe) என்னும் இயற்பெயர் கொண்ட டைக்கோ பிராகி (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் டென்மார்க்கின் ஒரு பகுதியாகவும், இன்று சுவீடன் நாட்டில் அடங்கியுள்ளதுமான ஸ்கேனியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு வானியலாளராகவும், இரசவாதியாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே பிரா ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.