மெக்சனா மாவட்டம்
மெக்சனா | |
---|---|
மாவட்டம் | |
குஜராத் மாநிலத்தில் மெக்சனா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
தலைமையிடம் | மெகசானா |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,401 km2 (1,699 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,35,064 |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி மொழி, இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | GJ -2 |
இணையதளம் | mehsanadp |
மெகசானா மாவட்டம் அல்லது மகிசானா மாவட்டம் (Mehsana district) or (Mahesana district) (குசராத்தி: મહેસાણા જિલ્લો) மேற்கிந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் மெகசானா நகரம் ஆகும். 2011-இல் இம்மாவட்ட மக்கள் தொகை 2,027,727 ஆகும். பரப்பளவு 4484.10 சதுர கி. மீ., ஆகும். இது 600 கிராமங்களைக் கொண்டது. மோட்டார் வண்டி பதிவு எண் GJ-2. இம்மாவட்டத்தின் மொதெரா நகரத்தில் கலைநயமிக்க கட்டிட அமைப்புகளுடன் சூரியன் கோயில் மற்றும் படிக்கிணறு மற்றும் தரங்கா சமணர் கோயில் அமைந்துள்ளது.[1]. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய தூத்சாகர் கூட்டுறவு பால் பண்னை இங்கு செயல்படுகிறது. மேலும் இம்மாவட்டத்தில் உலகின் பெரிய சர்தார் படேல் விளையாட்டரங்கம் உள்ளது.
அமைவிடம்
[தொகு]வடக்கே பனஸ்கந்தா மாவட்டம், மேற்கே பதான் மாவட்டம் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே காந்திநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டம், கிழக்கே சபர்கந்தா மாவட்டம் எல்லகைகளாக கொண்டது மகிசனா மாவட்டம்.
பார்க்கவேண்டிய இடங்கள்
[தொகு]முக்கிய நகரங்கள்
[தொகு]வரலாறு
[தொகு]பிந்தைய வரலாறு
[தொகு]இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 1964இல் காந்திநகர் மாவட்டமும் பின் 2000இல் பதான் மாவட்டமும் உருவானது.
வருவாய் வட்டங்கள்
[தொகு]4484.10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 10 வருவாய் வட்டங்களையும், 614 கிராமங்களையும் கொண்டது.[2]
- மெஹசானா
- கடி
- கேரலு
- வாத்நகர்
- விஜாபூர்
- விஸ்நகர்
- சட்லாசனா
- ஜோடானா
- உஞ்சா
- பெசராஜி
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1. கேரலு. 2 உஞ்சா 3 விஸ்நகர். 4 பெஜரஜி. 5 கடி. 6 மெகசானா 7 விஜாபூர்
பொருளாதாரம்
[தொகு]வேளாண்மை
[தொகு]சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்படுகிறது.
வணிகம்
[தொகு]மகிசனா மாவட்டத்தில், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், 1200 எண்ணெய் கிணறுகளும், 23 எரிவாயு கிணறுகளும் கொண்டுள்ளது. ஆசியாவின் இரணாவது பால் பண்ணை தொழிற்சாலையான தூத் சாகர் என்ற நிறுவனம் மகிசனா நகரத்தில் செயல்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 2,027,727ஆக உள்ளது.[3] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 462 நபர்கள் என்ற விகிதத்தில் உள்ளது. பாலினவிகிதம் 1000 வ்ஆண்களுக்கு 925 பெண்கள் என்ற அளவில் உள்ளது. எழுத்தறிவு 84.26% ஆக உள்ளது.
படக்காட்சியகம்
[தொகு]மெகசானா மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியன் கோயிலின் படங்கள்
-
சூரிய குளம்
-
சூரிய பகவானின் சிதைந்த சிற்பம்.
-
சூரிய கோயிலின் வெளியே உள்ள சூரிய குண்ட குளக்கரையை நோக்கியுள்ள தூண்கள்.
-
கோயிலின் அருகே தனியாக நிற்கும் இரு தூண்கள்.
-
கோயின் நுழைவுவாயிலில் உள்ள சிற்பங்கள்.
-
குடா மண்டபம்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census Data". Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
- ↑ மெஹசானா மாவட்டத்தின் இணையதளம்
- ↑ in/district.php "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- மாவட்ட ஆட்சியர் இணையதளம் பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- மகிசனாவில் பார்க்கவேண்டிய இடங்கள்
{{#coordinates:}}: cannot have more than one primary tag per page