உள்ளடக்கத்துக்குச் செல்

அமுர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுர் ஆறு
Amur River
River
அமுர் ஆறு (எயிலோங் சியாங்)
பெயர் மூலம்: மொங்கோலியன்: அமூர் ("ஓய்வு")
நாடுகள்  உருசியா,  சீனா
பகுதி டார்ட்டரி சலசந்தி
கிளையாறுகள்
 - இடம் சில்கா, ஜெயா, புரியா, அம்ங்குன்
 - வலம் அர்குன் (ஆசியா), ஊமா (எயிலோங் சியாங்), சங்குவா, உசூரி
நகரங்கள் பிளாகோவேஷ்சென்சுக், ஹேய்ஹே, டோங்ஜியாங், காபரோவ்ஸ்க், அமுர்ஸ்க், கோம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர், நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர்
Primary source ஆனன் ஆறு - ஷில்கா ஆறு
 - அமைவிடம் கான் கெண்டி, இது கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதி, கெண்டி மாகாணம்,  மங்கோலியா
 - உயர்வு 2,045 மீ (6,709 அடி)
Secondary source கெர்லான் ஆறு - ஆர்கன் ஆறு
 - location உலான் பத்தூர் இலிருந்து சுமார் 195 கிலோமீட்டர்கள் (121 mi), கெண்டி மாகாணம்,  மங்கோலியா
 - உயர்வு 1,961 மீ (6,434 அடி)
Source confluence
 - location பொக்ரோவ்கா அருகில்,  உருசியா &  சீனா
 - உயர்வு 303 மீ (994 அடி)
கழிமுகம் டார்ட்டரி சலசந்தி
 - அமைவிடம் நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர் அருகில், கபரோவ்ஸ்க் பிரதேசம்,  உருசியா
 - elevation மீ (0 அடி)
நீளம் 2,824 கிமீ (1,755 மைல்) [1]
வடிநிலம் 18,55,000 கிமீ² (7,16,220 ச.மைல்) [1]
Discharge mouth
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
அமுர் ஆற்றின் நீர்த்தேக்க வரைபடம்
அமுர் ஆற்றின் நீர்த்தேக்க வரைபடம்
அமுர் ஆற்றின் நீர்த்தேக்க வரைபடம்

அமுர் ஆறு அல்லது அமூர் ஆறு (Amur River (எவென் Even: Тамур, Tamur; உருசியம்: река́ Аму́р, IPA: [ɐˈmur]) or Heilong Jiang (எளிய சீனம் Chinese: 黑龙江; பின்யின்: Hēilóng Jiāng, "Black Dragon River"; மஞ்சு Manchu: ᠰᠠᡥᠠᠯᡳᠶᠠᠨ ᡠᠯᠠ; மன்சுவின் ஒலிபெயர்ப்பு Möllendorff: Sahaliyan Ula, Sahaliyan Ula, “Black Water”); உலகின் பத்தாவது நெடிய ஆறான இது, உருசியாயாவின் தொலைதூர கிழக்கு (Russian Far East), மற்றும் வடகிழக்கு சீனாவிற்கும் இடையேயான (உட்புற மஞ்சுரியா) எல்லைப் பகுதியில் உருவாகிறது.[2]

அமுர் ஆற்றில் உள்ள மிகப்பெரிய மீன் வகையான கலுகா (kaluga) எனும் மீன், 5.6 மீட்டர் (18 அடி) நீளம் கொண்டது.[3] உலகிலேயே அமுர் ஆற்றில் மட்டுமே மிதமான வெப்பம் நிலவுவதால், பாம்பு போன்ற உருவம் கொண்ட ஆசிய மீன் வகைகளும், ஈட்டி மீன் (pike) போன்ற ஆர்டிக் சைபீரிய மீன்களும் ஒன்றாக வாழ்கின்றன. மேலும் இந்த ஆற்றில், மிகப்பெரிய நன்னீர் மீனும், மற்றும் மற்ற உயிர்களை உண்டு வாழ்வதுமான டெய்மன் மீன் வகைகளும், அமுர் கெளுத்தி (Amur catfish) மற்றும் மஞ்சள்சீக் (yellowcheek) மீன்களும் இவ்வாற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

பெயர் மரபு

[தொகு]

மரபு ரீதியாக, ஒரு ஆற்றை வெறுமனே "நீர்" என்று குறிப்பிடுவது பொதுவானது. மேலும் "நீர்" என்ற வார்த்தை ஆசிய மொழிகளின் படி பல மொழிகளில் இவ்வாறு உள்ளது: கொரிய மொழியில்: mul (물), மங்கோலிய மொழியில்: muren (mörön) மற்றும் ஜப்பானில்: mizu (み ず) ஆகியவை உள்ளன. இந்த ஆற்றுக்கு பின்வருமாறு பெயர் சூட்டப் பெற்றது. "அமுர்" என்ற பெயர் தண்ணீர் எனும் வேர் வார்த்தையிலிருந்து பரிணாமம் பெற்று, "பெரிய நீர்" க்கான அளவு மாற்றியுடன் இணைக்கப்பட்டது.[4]

இந்த ஆற்றின் சீன பெயர், ஹெயிலோங் ஜியாங் (Heilong Jiang) என்றும், அது சீன மொழியில் "கருப்பு டிராகன் ஆறு" "Black Dragon River" என்றும், மேலும் அதன் மங்கோலியப் பெயரான "கர் மோரோன்" Khar mörön (சிரிலிக்: ஹார் மச்சன் Хар мөрөн), "கருப்பு ஆறு" (Black River) என்றும் பொருள் அறியப்பட்டது.[5]

மார்க்கம்

[தொகு]

இந்த அமுர் ஆறு, வடகிழக்கு சீனாவின் மேற்குப் பிராந்திய மலைகளில் சுமார் 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் சில்கா மற்றும், அர்குன் ஆகிய இருபெரும் ஆறுகளால் சங்கமித்து வளர்ச்சி அடைகிறது.[6] இந்த ஆறு சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் கிழக்கு நோக்கி ஓடுகிறது, மேலும் அது, 400 கிலோமீட்டர் (250 மைல்) க்கு மெதுவாக வில் வடிவில் திரும்பி, பல கிளை ஆறுகளை தன்னகத்தே பெற்றுக்கொண்டு பல சிறு நகரங்களை கடந்து செல்கிறது.[7]. ஹுமாவில் மாகாணத்தில் (Huma County) ஓடும் ஹுமா ஆறு (Huma River), இந்த ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறாகும். அதன்பிறகு அது தெற்கு நோக்கி பாயும் இது, இரசியாவின் மாநகர் "பிலாகோ வெஷ் சென்ஸ்க்" (Blagoveshchensk) மற்றும், சீனாவின் "ஹேய்ஹே" (Heihe) ஆகிய இடங்களுக்கு இடையே தொடர்ந்து செல்லும் அமுர் ஆறு, குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைகிறது, ஏனெனில் "ஜெயா ஆறு" (Zeya River) எனும் ஆறு அதன் மிக முக்கியமான கிளைகளில் ஒன்றாகும்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Muranov, Aleksandr Pavlovich; Greer, Charles E.; Owen, Lewis. "Amur River". Encyclopædia Britannica (online ed.).
  2. "Your private jet to Amur River". www.the-aviation-factory.com (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-12. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. AMUR River FAIRYTALES OF UNEXPLORED LAND Cruise on AMUR River from Khabarovsk
  4. Scheffel, Richard L.; Wernet, Susan J., eds. (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. pp. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89577-087-3.
  5. https://unlgardens.unl.edu/documents/acertataricumginnala.pdf Acer tataricum L. ssp. ginnala (Maxim.) Wesmael (1890) Amur Maple
  6. https://quizlet.com/77119792/river-borders-worldewide-flash-cards/ Amur River Sahaliyan Ula (Manchu) Heilong Jiang (Chinese) Аму́р / Amur (Russian)
  7. https://theplanetstory.com/posts/ten-longest-rivers-of-the-world பரணிடப்பட்டது 2019-03-21 at the வந்தவழி இயந்திரம் 10 Longest Rivers Of The World - 10. Amur, Asia – 4,444km (2,763 miles)
  8. http://amur-heilong.net/http/01_climate_waters/0112eastrivers.html பரணிடப்பட்டது 2018-01-23 at the வந்தவழி இயந்திரம் AMUR-HEILONG RIVER BASIN
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுர்_ஆறு&oldid=3927148" இலிருந்து மீள்விக்கப்பட்டது