உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலப்புழா

ஆள்கூறுகள்: 9°29′N 76°20′E / 9.49°N 76.33°E / 9.49; 76.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலப்புழா கழிமுகத்தில் காணப்படும் ஞாயிறுத் தோற்றம்
ஆலப்புழா
"கிழக்கு வெனிஸ்"
—  நகராட்சி மற்றும் நகரம்  —
ஆலப்புழா
அமைவிடம்: ஆலப்புழா, கேரளா , இந்தியா
ஆள்கூறு 9°29′N 76°20′E / 9.49°N 76.33°E / 9.49; 76.33
நாடு  இந்தியா
பகுதி மத்திய திருவிதாங்கூர்
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
நகராட்சித் தலைவர் திருமதி. மெர்சி டீச்சர்
மக்களவைத் தொகுதி ஆலப்புழா
மக்கள் தொகை

அடர்த்தி

21,05,349 (2001)

1,492/km2 (3,864/sq mi)

பாலின விகிதம் 1079 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1,414 சதுர கிலோமீட்டர்கள் (546 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.alappuzha.nic.in


ஆலப்புழா (ஆங்கிலம்:Alappuzha), ( மலையாளம்: ആലപ്പുഴ) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். இந்நகரம் ஒரு நகராட்சியாகவும் உள்ளது. ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். கயிறு தயாரிப்பது இந்நகரின் முதன்மைத் தொழிலாகும்.

போக்குவரத்து

[தொகு]

கொச்சி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடருந்து நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடருந்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.

மொழிகள்

[தொகு]

இந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 95.72 ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 96%, பெண்களின் கல்வியறிவு 97% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆலப்புழா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலப்புழா&oldid=4138476" இலிருந்து மீள்விக்கப்பட்டது