இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி
இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி | |
---|---|
பிறப்பு | 5 சூன் 1882 (in Julian calendar) Lomonosov |
இறப்பு | 6 ஏப்பிரல் 1971 (அகவை 88) நியூயார்க்கு நகரம் |
கல்லறை | Cemetery of San Michele |
படித்த இடங்கள் |
|
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர், pianist, இசைக் கலைஞர் |
சிறப்புப் பணிகள் | Petrushka, The Firebird See list of compositions by Igor Stravinsky |
குழந்தைகள் | Soulima Stravinsky, Théodore Strawinsky |
குடும்பம் | Yury Stravinsky |
வம்சம் | Q63440281Kategori:Articles without Wikidata information |
விருதுகள் | Grammy Lifetime Achievement Award, Royal Philharmonic Society Gold Medal, Wihuri Sibelius Prize, Commander of the Military Order of Saint James of the Sword, star on Hollywood Walk of Fame |
கையெழுத்து | |
இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky - 17 ஜூன் [யூ.நா. 5 ஜூன்] 1882 – 6 ஏப்ரல் 1971) ரஷ்யாவில் பிறந்த ஒரு இசையமைப்பாளர் ஆவார். சிலர் இவரை 20 ஆம் நூற்றாண்டின் மிகச் செல்வாக்கு மிக்க இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். அடிப்படையில், உலகக் குடிமகனான இவரை "டைம்" இதழ் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க மனிதர் 100 பேர்களுள் ஒருவராகத் தெரிவு செய்தது. ஒரு இசையமைப்பாளராக மட்டுமன்றி, ஒரு பியானோக் கலைஞராகவும், நிகழ்ச்சி இயக்குனராகவும் இவர் புகழ் பெற்றவர்.
ஸ்ட்ராவின்ஸ்கியின் இசையமைப்புகள் பல்வகைமைத் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1910ல் சேர்கி டயகிலேவ் என்பவருடைய பலே நடன நிகழ்ச்சியொன்றுக்கு இசையமைத்ததன் மூலம் இவர் முதன் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்கு அவர் செய்த இசையமைப்பு இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்தது. இது பின்வந்த பல இசையமைப்பாளர்களின் இசையமைக்கும் தன்மையை மாற்றி அமைத்ததுடன், இசைப் புரட்சியாளர் எனும் ஸ்ட்ராவின்ஸ்கியின் நிலைத்த புகழுக்கும் காரணமாகியது.
குறிப்புகள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]பொது விவரங்கள்
[தொகு]- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி
- ஸ்ட்ராவின்ஸ்கி நிறுவனம் இணையம்
- "Huxley on Huxley". Dir. Mary Ann Braubach. Cinedigm, 2010. DVD. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
{{cite web}}
: CS1 maint: others (link) - குட்டன்பேர்க் திட்டத்தில் Igor Stravinsky இன் படைப்புகள்
- த ரைட் ஆஃப் ஸ்பிரிங் மற்றும் இகோர் ஸ்ட்ராவின்ஸ்கியின் லித்துவேனிய வளர்ப்பு
- ஆக்கங்கள் இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி இணைய ஆவணகத்தில்
காணொலிகள்
[தொகு]- இகோர் ஸ்ட்ராவின்ஸ்கியுடன் உரையாடல், 1957: https://www.youtube.com/watch?v=oJIXobO94Jo
- த ரைட் ஆஃப் ஸ்பிரிங் பற்றி ஸ்ட்ராவின்ஸ்கி: https://www.youtube.com/watch?v=RZEsmbcwngY